மக்கள் கூட்டணிக்கே எங்கள் ஆதரவு!
இன்றிரவு 7.30 மணியளவில் பேராக் விளையாட்டு அரங்கில்!
1 லட்சம் மக்களின் பேரணி!
பேராக் மக்களே திரண்டு வாரீர்..!
இவ்வாறு அழைப்பு விடுக்கின்றனர் மக்கள் கூட்டணித் தலைவர்கள்! பேராக் மாநில சுல்தான் இன்று டத்தோ சிறீ நிசாரை பதவி துறப்பு செய்ய பணித்துள்ளதையடுத்து, மக்களின் ஆதரவு என்றும் மக்கள் கூட்டணிக்கே என நிரூபிக்கும் வகையில் 1 லட்சம் பேர் இன்றிரவு ஈப்போ பேராக் விளையாட்டு அரங்கில் ஒன்றுகூடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் கூட்டணியின் அனைத்து தலைவர்களும் இப்பேரணியில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இதற்கிடையில், இப்பேரணியில் கலந்துகொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மலேசிய அரசியல் வரலாற்றிலேயே இது ஒரு கேவலமான அதிகார மாற்றம் என்றுதான் கூற வேண்டும். பெரும்பான்மை மக்கள் விரும்பும் ஓர் ஆட்சியை மக்களின் விருப்பமின்றியும் அனுமதியின்றியும் களவாடியதில் அம்னோ மீண்டும் தன்னுடைய கீழ்த்தரமான அணுகுமுறைகளை பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது.
கரைபடிந்த ஊழல் பேர்வழிகள் என நம்பப்படும் இரு தவளைகள் தங்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதில் முனைப்பு காட்டியிருக்கின்றன. மக்கள் கூட்டணியின் ஆட்சியாயிருப்பினும், நீதித்துறை என்னவோ அம்னோவின் கைப்பாவையாக விளங்கிவருவதால் இவ்விரு தவளைகளுக்கும் தப்பிக்க வேறு வழி தெரியவில்லை. மக்கள் கூட்டணியுடன் இருந்தால் சிறைவாசம்தான் மிஞ்சும் எனக் கருதிய இவ்விரு தவளைகளும் அம்னோவிற்கு தாவ, தங்களின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இனி நீங்கிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றன.
ஒருவகையில், இவ்விரு தவளைகளையும் காப்பாற்றுவதாக வாக்களித்து தன் பக்கம் தாவ வைத்தது அம்னோதான். அதற்கு எத்தனை லட்சங்கள் செலவாகின என்பது தெரியவில்லை! தற்சமயம் பேராக் மாநிலத்தைக் கைப்பற்றி விட்டதாக கொக்கரித்து வரும் பாரிசானால் ஒரு நிலையான ஆட்சியை நிச்சயம் வழங்க முடியாது. சட்டமன்றங்களை கலைத்துவிட்டு புதியதொரு தேர்தலுக்கு தயாராகுமாறு மக்கள் கூட்டணி விடுத்த சவாலை அம்னோ அரசாங்கம் எதிர்க்கொள்ள திராணியற்று குறுக்கு வழியில் அதிகார மாற்றத்தை நிகழ்த்தி காட்டியுள்ளது.
எந்த காலத்தில்தான் அம்னோ நேருக்கு நேர் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறது! நேருக்கு நேர் மக்களை எதிர்கொள்ள அஞ்சும் அம்னோ அரசாங்கம், கடந்த 52 ஆண்டுகளாக மறைவில் நின்று காரியத்தை சாதித்து, அரசு எந்திரங்களை ஏவிவிட்டு அனைவரின் வாயை மூடச் செய்து ஆட்சி கட்டிலில் நிலைத்திருக்கிறது. வருங்கால பிரதமர் என வர்ணிக்கப்படும் நஜீப் கேவலமான ஓர் உத்தியைக் கையாண்டு அரசைக் கைப்பற்றியதை நினைத்தால் ஆத்திரமாகத்தான் இருக்கிறது! பத்தே நாட்களில் ஒரு புல்லுருவியை மக்கள் கூட்டணியில் மேயவிட்டு காரியத்தை சாதித்துகாட்டியிருக்கிறது அம்னோ அரசாங்கம்!
சட்டமன்றங்களை கலைத்துவிட்டு புதியதொரு தேர்தலுக்கு முனைந்தால்தான் என்ன? இவ்விடயத்தில் பேராக் சுல்தானின் முடிவு பல ஐயப்பாடுகளை எழுப்புகின்றது. நீதித்துறையின் தலைவராக பலகாலம் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுல்தானுக்கு மக்களின் விருப்பம் என்னவென்று தெரியாமலா இருக்கும்!
நேற்று ஒரு மடையன் அறிக்கை விடுகிறான்! தேர்தல் நடத்தினால் நிறைய பணம் செலவாகுமாம். பொருளாதார மந்தநிலையைக் கருத்தில் கொண்டு தேர்தலை நடத்தக் கூடாது என அந்த அறிவுஜீவி கருத்து கூறுகிறது. அநாவசிய செலவுகள் செய்வதில் பெயர்ப்போன அம்னோ அரசாங்கம் ஒரு மாநிலத் தேர்தலை நடத்துவதில் சிக்கனம் பார்க்கிறது என்றால் அது காதில் பூ சுற்றும் கதை!
தற்சமயம், அனுவார் தலைமையில் மக்கள் கூட்டணித் தலைவர்களோடு மந்திரி புசார் இல்லத்தில் ஓர் அவசர சந்திப்பு கூட்டம் நடைப்பெற்றுவருகிறது. கெடா மற்றும் கிளந்தான் மாநில மந்திரி புசார்களும் இச்சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். அலுவலகங்களை விரைவில் காலி செய்வதற்கும் அரசு வாகனங்களின் சாவிகளை ஒப்படைப்பதற்கும் மக்கள் கூட்டணி தலைவர்களிடம் கட்டளையிடப்பட்டுள்ளது. எந்தவொரு அதிகாரப்பூர்வ கடித்த்தையும் வெளிகொண்டுச் செல்லக்கூடாது எனவும் பணிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களை நோக்கிச் செல்லும் பாதைகளை காவல்த்துறையினர் மூடியுள்ளதாகத் தெரியவருகிறது. செலாப்பாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ யிட் ஃபூங்கின் இல்லத்தின் முன்பும் சேவை மையம் முன்பும் ஆத்திரம் கொண்ட மக்கள் சிலர் கல்லெறி தாக்குதல் நடத்தியதாக அறியப்படுகிறது.
தற்சமயம் அப்துல்லா அகமது படாவி ஈப்போவில் இருப்பதாகவும், இன்று பாரிசானின் பிரதிநிதிகள் பதவியேற்கவிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மக்கள் கூட்டணி பிரதிநிகள் உடனடியாக தங்களின் அலுவலகங்களைக் காலி செய்துவிட்டு போகுமாறு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அனுவார் இபுராகீம் மீண்டும் சுல்தானை சந்திக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.
பேராக் மக்களே, இது உங்கள் அரசாங்கம்! உங்கள் மாநில எதிர்காலத்தை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்! கரைபடிந்த ஊழல் அரசியல்வாதிகள் அல்ல! உங்களின் பொன்னான நேரத்தை சற்றுநேரம் ஒதுக்கி, இன்றிரவு ஈப்போ பேராக் விளையாட்டரங்கில் ஒன்றுதிரண்டு மக்கள் சக்தியை நிரூபித்துக் காட்டுங்கள்!
Read more...