காணொளி : கெடா மாநில மனித உரிமைக் கட்சியின் செயலக திறப்புவிழா
>> Tuesday, July 20, 2010
போராட்டம் தொடரும்...
என் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..
போராட்டம் தொடரும்...
தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..! அவனை அடித்தால் கேட்பதற்கென்று நாதியில்லை! ஆனால் தமிழனுக்கென்று தன்மானம் உண்டு, அந்தத் தன்மானம் உலகின் 13 கோடித் தமிழர்களுக்கும் உண்டென்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி வருவது தமிழீழ விடுதலைப் போராட்டம். தமிழ் தேசியத்தை வென்றெடுக்கும் முயற்சியில் தற்போது தமிழக மக்களும் அணிதிரண்டு இலங்கை அரசிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
சிறீ லங்கா அரசினால் இலங்கைத் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையைக் கண்டிக்கும் வகையில் தமிழ்த் திரையுலகத்தினர் கடந்த 19-ஆம் திகதி அத்தோபர் மாதம் இராமேசுவரத்தில் கண்டனக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்விற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் அலையலையாகத் திரண்டிருந்தனர். இக்கூட்டத்தில் இயக்குநரும் நடிகருமான திரு.சீமான் சிறப்பாக உரையாற்றி வந்திருந்தோரை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். இதோ அவரின் உணர்ச்சிகரமான உரை...

25 நவம்பர் பேரணிக்கு மக்கள் சக்தியை ஒன்று திரட்ட, புயலாய் புறப்பட்ட திரு.உதயகுமார், 18 நவம்பர் அன்று பினாங்கு குட்டி இந்தியாவில் அமைந்துள்ள சீனர் மண்டபத்தில் ஆற்றிய வீரச் சொற்பொழிவின் ஒரு பகுதி உங்கள் பார்வைக்கு...
மேலும் சில ஒளிப்படக்காட்சிகள் யூ டியூப்பில் பதிவேற்றப்பட்டு இங்கு இடம்பெறும்..
ஒளிப்படக்காட்சிகள் : அரிபாலன் (நன்றி)

சகோதரர்களே ...
நாம் என்ன
சீட்டெடுக்கும் கிளிகளா?
நெல்மணிகளை மட்டும்
வலுக்கட்டாயமாக - நம்
வாயில் திணிக்கிறார்கள் ...
நாம் என்ன
ரப்பர் மரங்களா?
நம்முடலில் எத்தனைமுறை
வாக்குப் பாலெடுக்கக்
கீறிக் கொண்டிருப்பார்கள் ...
நாம் என்ன
போதி மரமா?
தேர்தல் காலத்தில் மட்டும்
நம்முன் அமர்ந்து
ஞான தவமிருக்கிறார்கள்
நமது வீட்டுச் சுவர்களில்
தங்கள் வரலாற்றை
எழுதிச் சொல்பவர்
நம் உரிமை வாழ்வைப்
பின்தள்ளிச் செல்கிறார்கள்
நமது வாக்குகளால்
நாடாளுமன்றம் சென்றவர்கள்
நமது வீடு உடைபடுகையில்
நீலிக் கண்ணீர் வடிக்கவும்
முன் வராமல்
அரசு சட்டத்தின் பின்
ஒளிந்து கொண்டார்கள் ...
நாம்
அவர்கள் கையில்
கொடுத்ததோ அமுதசுரபி
அவர்கள்
நம் கையில் திணிப்பதோ
பிச்சைப் பாத்திரம் ...
நாம்
உரிமை போர் வாளை
அவர்களுக்கு கொடுத்தோம்
அவர்கள்
பட்டாக் கத்தியை
நம் தோழமைக்குப் பரிசளிக்கிறார்கள் ...
நமக்காக
இயற்றப்பட்ட நீதிச் சட்டங்கள்
நமது கழுத்துகளுக்குத்
தூக்குக் கயிறை கொண்டு வரும்
மாயாசாலம் யார் அறிவார்?
விரும்பும் மரக்கிளைகளில்
கூடு கட்டும் குருவிகள் ...!
ஒரு வீடு கட்டும்
அடிப்படை உரிமை
மண்ணின் மைந்தர்களுக்கு இல்லையா?
நம்மைப் பாதுகாக்க எழுந்த
நீதிச் சட்டங்கள் - இன்று
நமது கண்களில்
மிளகாய் பொடி தூவுகின்றனவே!
சமூகக் காவலர்களே
சன்மார்க்க
அரசியல் சேவையாளர்களே
எங்கள் ஓட்டுகளால்
நீங்கள் எசமானர்கள் ...
வாக்காளர்கள் இன்று
உங்கள்
வாய்பேசா செம்மறிகளா!
(ஏ.எஸ்.பிரான்சிஸ், சுவீடன்)
khileefrancis@yahoo.com

'வேங்கையின் மைந்தன்' எனும் சிறந்த நாவலின் வழி இந்திய அரசின் சாகித்திய அகாதமி பரிசுப் பெற்ற சிறந்த எழுத்தாளரான அகிலன் அவர்கள், ஓர் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளைப் பற்றி தனது உரையினூடே ஆற்றும் ஒலிப்பேழைப் பதிவு கீழே :
ஒலிப்பேழை
Blogger templates made by
AllBlogTools.com
Back to TOP