கோரப்படாத இறந்த உடல்களுக்கு இறுதிக் காரியம் - பினாங்கு இந்து சங்கத்தின் அளப்பரிய தொண்டு

>> Monday, October 29, 2012

கடந்த 27 ஆண்டுகளாக பினாங்கு மற்றும் கெடா மாநிலங்களில் கோரப்படாத இறந்த உடல்களை எடுத்து அடக்கம் மற்றும் எரிக்கும் சேவையை மேற்கொண்டு வருகின்றனர் பினாங்கு இந்து சங்கத்தினர். அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு உதவியும் கிடைக்காத பட்சத்தில், பொதுமக்கள் அளிக்கும் நன்கொடைகளைக் கொண்டே இச்சேவையை அவர்கள் செய்துவருகின்றனர். இதுவரையில் 500 இறந்த உடல்களுக்கு இறுதிக் காரியங்களைச் செய்துள்ளனர். கோரப்படாத உடல்களைத் தவிர்த்து, இறுதிக் காரியங்களைச் செய்விக்க இயலாத ஏழைக் குடும்பங்களுக்கும் இவர்களின் உதவி கிட்டியுள்ளது. அண்மையில் இவர்களின் சேவையைக் கண்டு பேட்டியெடுக்கச் சென்றிருந்தேன். அதன் காணொளி இதோ உங்கள் பார்வைக்கு. இதுபோன்ற தன்னலமில்லாத சமூகச் சேவைகளைக்கு பொதுமக்களாகிய நாம்தான் உதவிக் கரம் நீட்ட வேண்டும். பினாங்கு இந்து சங்க செயல்பாடுகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி புரிய எண்ணம் கொண்டால், அவ்வியக்கத்தின் துணைத் தலைவரை அலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம். திரு.முருகையா 016-4449246

Read more...

விபத்தொன்றில் உடல் பாதி செயலிழந்த சந்திரனுக்கு உதவுங்கள்!

>> Saturday, October 27, 2012

கைக்குழந்தையாக இருக்கும்போதே அன்னையின் அரவணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் 15 வயதுவரை தன் தந்தையுடன் ஏழ்மை வாழ்க்கை நடத்தி, தன் தந்தையின் இறப்பிற்குப் பிறகு சுயகாலில் உழைத்து நண்பர்களின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார் திரு.சந்திரன். இருப்பினும், அவரின் போதாத காலம், கடந்தாண்டு நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் தன் உடலின் ஒரு பாதி செயலற்ற நிலைக்கு தள்ளப்பட, இன்று ஒரு காப்பகத்தில் படுத்த படுக்கையாகிக் கிடக்கிறார் திரு.சந்திரன். பினாங்கு பொது மருத்துவமனையில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த சந்திரனை, பினாங்கு இந்து சங்க உதவித் தலைவர் திரு.முருகையா அவர்கள் பலவிடங்களில் முயற்சி செய்து இறுதியில் பெதேஸ்தா எனும் முதியோர் காப்பகத்தில் அவரைத் தற்காலிகமாகத் தங்கவைத்துள்ளார். சந்திரனின் அன்றாட மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட பெதெஸ்தா முதியோர் காப்பகத்தின் தோற்றுநர் திரு.தேவராசு மற்றும் பினாங்கு இந்து சங்க உதவித் தலைவர் திரு.முருகையா ஆகியோர் பலவகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். திரு.சந்திரனின் நிலையை உணர்ந்து அவருக்கு உரிய உதவிகளைச் செய்ய எண்ணம் கொண்ட நல்லுள்ளங்கள், கீழ்காணும் காணொளியைக் காண்டு, அதன்வழி மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP