கோரப்படாத இறந்த உடல்களுக்கு இறுதிக் காரியம் - பினாங்கு இந்து சங்கத்தின் அளப்பரிய தொண்டு

>> Monday, October 29, 2012

கடந்த 27 ஆண்டுகளாக பினாங்கு மற்றும் கெடா மாநிலங்களில் கோரப்படாத இறந்த உடல்களை எடுத்து அடக்கம் மற்றும் எரிக்கும் சேவையை மேற்கொண்டு வருகின்றனர் பினாங்கு இந்து சங்கத்தினர். அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு உதவியும் கிடைக்காத பட்சத்தில், பொதுமக்கள் அளிக்கும் நன்கொடைகளைக் கொண்டே இச்சேவையை அவர்கள் செய்துவருகின்றனர். இதுவரையில் 500 இறந்த உடல்களுக்கு இறுதிக் காரியங்களைச் செய்துள்ளனர். கோரப்படாத உடல்களைத் தவிர்த்து, இறுதிக் காரியங்களைச் செய்விக்க இயலாத ஏழைக் குடும்பங்களுக்கும் இவர்களின் உதவி கிட்டியுள்ளது. அண்மையில் இவர்களின் சேவையைக் கண்டு பேட்டியெடுக்கச் சென்றிருந்தேன். அதன் காணொளி இதோ உங்கள் பார்வைக்கு. இதுபோன்ற தன்னலமில்லாத சமூகச் சேவைகளைக்கு பொதுமக்களாகிய நாம்தான் உதவிக் கரம் நீட்ட வேண்டும். பினாங்கு இந்து சங்க செயல்பாடுகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி புரிய எண்ணம் கொண்டால், அவ்வியக்கத்தின் துணைத் தலைவரை அலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம். திரு.முருகையா 016-4449246

Read more...

விபத்தொன்றில் உடல் பாதி செயலிழந்த சந்திரனுக்கு உதவுங்கள்!

>> Saturday, October 27, 2012

கைக்குழந்தையாக இருக்கும்போதே அன்னையின் அரவணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் 15 வயதுவரை தன் தந்தையுடன் ஏழ்மை வாழ்க்கை நடத்தி, தன் தந்தையின் இறப்பிற்குப் பிறகு சுயகாலில் உழைத்து நண்பர்களின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார் திரு.சந்திரன். இருப்பினும், அவரின் போதாத காலம், கடந்தாண்டு நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் தன் உடலின் ஒரு பாதி செயலற்ற நிலைக்கு தள்ளப்பட, இன்று ஒரு காப்பகத்தில் படுத்த படுக்கையாகிக் கிடக்கிறார் திரு.சந்திரன். பினாங்கு பொது மருத்துவமனையில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த சந்திரனை, பினாங்கு இந்து சங்க உதவித் தலைவர் திரு.முருகையா அவர்கள் பலவிடங்களில் முயற்சி செய்து இறுதியில் பெதேஸ்தா எனும் முதியோர் காப்பகத்தில் அவரைத் தற்காலிகமாகத் தங்கவைத்துள்ளார். சந்திரனின் அன்றாட மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட பெதெஸ்தா முதியோர் காப்பகத்தின் தோற்றுநர் திரு.தேவராசு மற்றும் பினாங்கு இந்து சங்க உதவித் தலைவர் திரு.முருகையா ஆகியோர் பலவகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். திரு.சந்திரனின் நிலையை உணர்ந்து அவருக்கு உரிய உதவிகளைச் செய்ய எண்ணம் கொண்ட நல்லுள்ளங்கள், கீழ்காணும் காணொளியைக் காண்டு, அதன்வழி மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Read more...

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி

>> Sunday, August 12, 2012

கடந்த 66 ஆண்டுகளாக சீனர் நிலத்தில் இயங்கிவரும் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு நிரந்தர தீர்வு எப்போது? கேட்கின்றனர் பள்ளியின் மேலாளர் வாரிய உறுப்பினர்கள். செவிட்டு மத்திய மாநில அரசாங்கங்களுக்கு விளங்குமா இவர்களின் கோரிக்கை? போராட்டம் தொடரும்...

Read more...

பழமைகளை விரும்பும் ஜோடி

>> Monday, June 4, 2012

’ஒருவரின் குப்பை மற்றொருவருக்கு புதையலாகிறது’ என்பது எவ்வளவு உண்மை என்பதனை பிரகாஷ், புனிதா தம்பதியரைக் கண்டவுடன் தெரிந்து கொண்டேன். கடந்த ஜூன் 2-ல் பினாங்கு டத்தோ கிராமாட் எனும் இடத்தில் இவ்விருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பலமுறை அவர்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நாளிகைகளிலும் பார்த்திருந்தபோதிலும் நேரில் சந்தித்து அவ்விருவரும் மேற்கொண்டிருக்கும் அரிய முயற்சியினை காணும்பொழுது ஒரு பிரமிப்பு எனக்குள் ஏற்பட்டது. தமிழர்கள் மற்றும் பெரானாக்கான் இனத்தவர் பயன்படுத்திய பழமையான பொருட்களை சேகரித்துவரும் இவர்கள் இதுவரை 1,400 வகையான பழம்பொருட்களை தங்களுடைய அடுக்குமாடி வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாத்து வருகின்றனர். 200 ஆண்டுகால மலேசியத் தமிழர்களின் வரலாற்றை பரைச்சாற்றும் கண்காட்சியகம் ஒன்றினை பினாங்கில் திறக்க வேண்டும் என்பதே இவர்களின் எதிர்கால ஆசை. இவர்களின் கனவை மெய்யாக்க வேண்டியது ஒவ்வொரு மலேசியத் தமிழர்களின் கடமையல்லவா? இதோ அவர்களை நான் பேட்டிக் கண்ட காணொளி உங்களின் பார்வைக்காக...

Read more...

இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2012

>> Tuesday, May 29, 2012

கடந்த மே திங்கள் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, பினாங்கு மாநில அளவிலான 2012-ஆம் ஆண்டின் இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது. மேலும் படிக்க : http://cj.my/post/65809/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/

Read more...

மலேசிய மக்கள் நிருபர்களின் வருடாந்திர மாநாடு 2012

>> Thursday, May 10, 2012

எதிர்வரும் மே 18 தொடங்கி மே 20 வரை மலேசிய மக்கள் நிருபர்களின் மூன்றாவது வருடாந்திர மாநாடு, பினாங்கு ரோயல் தங்கும் விடுதியில் நடைப்பெறவுள்ளது. நாடுதோறும் இயங்கி வரும் சுமார் 100 மக்கள் நிருபர்கள் இம்மாநாட்டில் பேராளர்களாகக் கலந்துகொள்ள வருகின்றனர். 2008-ஆம் ஆண்டில் மலேசியா கினி எனும் இணைய ஊடகத்தின் உதவியினால் தொடங்கப்பட்ட 'மக்கள் நிருபர்' எனும் இயக்கம் தற்சமயம் மிகவும் மும்முரமாக சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்த செய்திகளை காணொளி, கட்டுரைகள், நிழற்படங்களின்வழி வழங்கிவருகின்றனர். மலேசிய மக்கள் நிருபர்கள் எனும் இயக்கம் நாடு தழுவிய நிலையில் பலதரப்பட்ட மக்களுக்கு இலவசமாக பயிற்சிகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கதாகும். மலேசிய மக்கள் நிருபர் இணையத்தளம் : cj.my

Read more...

'சிறீ லங்கா - கொலைக்களம்' - வாக்களியுங்கள்!

>> Wednesday, May 2, 2012

தொலைக்காட்சி விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்று செய்தி ஆவணப்படங்களில் ஒன்றான 'அலைவரிசை நான்கின் 'சிறீ லங்கா - கொலைக்களம்' எனும் செய்தி ஆவணப்படத்திற்கு உங்களின் வாக்குகளை அளியுங்கள். இச்செய்தியை முகநூல், மின்னஞ்சல் போன்ற மின்னூடகங்களின் வழி மக்களுக்கு அறியப்படுத்துங்கள். இதோ இந்த இணைப்பைச் சுட்டுங்கள் : http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811

Read more...

இந்தோனேசிய நிலநடுக்கம் பினாங்கில் எதிரொலி!

>> Thursday, April 12, 2012

Read more...

தடியப்பனுக்கு சமூக நல இலாகா உதவி

>> Thursday, March 8, 2012

கடந்த நான்கு ஆண்டுகளாக கொள்கலனில் வாழ்க்கை நடத்திவந்த முதியவர் தடியப்பனுக்கு கடந்த 29-ஆம் திகதி பிப்ரவரியன்று சமூக நல இலாகாவின் உதவி கிடைத்தது. மாதத் தவணையில் அவருக்கு ரிம 300 கிடைக்கும்படி ஏற்பாடு செய்து கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றிகளை நவில்கிறோம்.



கொள்கலனில் வாழ்க்கை நடத்தும் முதியவர் குறித்த முந்தைய பதிவினைப் படிக்க இணைப்பைச் சுட்டுக : http://olaichuvadi.blogspot.com/2011/12/blog-post.html

Read more...

உரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்

>> Monday, February 20, 2012

Read more...

பினாங்குத் தமிழ்ப் பள்ளிகளுக்கு ‘பள்ளி மேலாளர் வாரியம்’

>> Thursday, February 9, 2012

சொந்த நிலம் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட கட்டிடங்கள் அமையாத தமிழ்ப்பள்ளிகளுக்கு ‘பள்ளி மேலாளர் வாரியம்’ அமைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கடந்த 54 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் சித்து விளையாட்டுகளில் சிக்குண்டு கிடக்கும் தமிழ்ப்பள்ளிகளை விடுவித்து உரிய உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் ஒரு களமாக பள்ளி மேலாளர் வாரியம் விளங்கவிருக்கின்றது. பள்ளிகளின் நில மற்றும் மானிய விவகாரங்களை பொது மக்களின் துணைகொண்டு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கும் ஒரு குரலாக பள்ளி வாரியம் உருவாக்கம் காணவுள்ளது. இம்முயற்சியின் முதற்கட்டமாக பினாங்கிலுள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் வாரியம் அமைப்பதன் முக்கியத்துவத்தினை எடுத்துக் கூறுவதற்கு ஒரு விளக்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பினாங்கு இண்ட்ராஃப், தமிழியல் நடுவம் மற்றும் தமிழ் அறவாரியம் இணைந்து நடத்தும் இவ்விளக்கக்கூட்டத்தில் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், பொது நல இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றனர். இத்தகவலை பொதுமக்களுக்கு கொண்டுச் சேர்ப்பிக்கும் வகையில் கீழ்காணும் அறிக்கைகளை நகலெடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.




Read more...

ஓலையில் எழுதுவது எப்படி? (காணொளி)

>> Tuesday, January 17, 2012

அண்மையில் விழுதுகள் எனும் தொலைக்காட்சி தொடரின் அங்கமாக ’ஏடும் எழுத்தாணியும்’ எனும் தலைப்பில் கடாரத் தமிழ் பேரறிஞர் மருத்துவர் திரு.செயபாரதி ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதும் முறை குறித்து விளக்கமளித்தார். அதன் காணொளி இதோ :-

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP