தமிழ் எழுத்துலகின் மாபெரும் இழப்பு..!

>> Friday, February 29, 2008


பிரபல எழுத்தாளர் சுஜாதா நேற்றிரவு சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.
எழுத்தாளர் சுஜாதா சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் ஜட்ஜ் சுந்தரம் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு `பைபாஸ்'அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்றிரவு 10.30 மணியளவில் அவர் மரணம் அடைந்தார்.

சுஜாதாவின் இரு மகன்களும் அமெரிக்காவில் உள்ளனர். சுஜாதாவின் மரணம் பற்றி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்ததும் வெள்ளிக்கிழமை சுஜாதாவின் இறுதிச்சடங்கு நடைபெறும். அதுவரை சுஜாதாவின் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கும்.

எழுத்தாளர் சுஜாதா, 1935-ம் ஆண்டு மே மாதம் 3-ந்தேதி பிறந்தார். தந்தை; சீனிவாச ராகவன், தாயார் கண்ணம்மா. தந்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றியவர். சுஜாதாவின் இயற்பெயர் ரெங்கராஜன்.

சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த சுஜாதா சிறுவயதில், ஸ்ரீரங்கத்தில் பாட்டியின் வீட்டில் வசித்தார். அங்குள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். பிறகு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் படிப்பை முடித்தார். இங்கு படித்தபோது, இவரது நண்பராக திகழ்ந்தவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆவார். பிறகு சென்னை எம்.ஐ.டி.யில் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிப்பை முடித்தார்.

27 வயதில் அவருக்கு திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சுஜாதா. பின்னாளில் மனைவியின் பெயரில் கதைகளை எழுதியதால் மனைவியின் பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.

டெல்லி அகில இந்திய வானொலியில் பணிபுரிந்த அவர் 1970-ல் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு பணிபுரிந்தபோது, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவின் பொது மேலாளராகவும் பதவி வகித்தார். அவரது தலைமையிலான குழுதான் தற்போது தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பணியில் இருந்த காலத்திலேயே பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பித்தார்.

1993-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றது முதல் சென்னையில் வசித்து வந்தார். சுஜாதாவுக்கு, ரங்கபிரசாத், கேஷவ பிரசாத் என்னும் 2 மகன்கள் உண்டு. மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.

சுஜாதா 100-க்கும் மேற்பட்ட நாவல்களும், 200-க்கும் மேலான சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். 15 நாடகங்களும் எழுதியுள்ளார். ஏராளமான விஞ்ஞான ஆய்வுக் கட்டுரைகளையும், கேள்வி-பதில்களையும் எழுதி இருக்கிறார்.

டைரக்டர் ஷங்கரின் இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி படங்களில்
இணைந்தும் சுஜாதா பணியாற்றி இருக்கிறார். இதேபோல் இயக்குனர் மணிரத்னத்துடன்
இணைந்து இருவர், ஆயுத எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களிலும் பணியாற்றி இருக்கிறார்.

சுஜாதாவுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் கிடைத்துள்ளது.

தமிழ் இலக்கியம் ஒரு சிகரம் என்றால், சுஜாதா அவர்கள் அச்சிகரத்தை அடையும் ஏணிப்படிகளில் ஒருவராகக் கருத்தப்பட்டு வந்தவர். அப்படியில் கால் பதிக்காது சிகரத்தின் உயரத்தை அளக்க முடியாது. அந்த அளவிற்கு எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு பெருந்தொண்டு ஆற்றி வந்தவர்.

அனைவரும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைந்து மறுபிறப்பு என இருப்பின் மீண்டும் தமிழனாய் பிறந்து, தமிழுக்கு தொண்டாற்றும் எழுத்தாளனாக உருவாக வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோமாக...

Read more...

மர்ம இசைத்தட்டு...

அண்மைய காலமாக கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் மர்ம இசைத்தட்டு ஒன்று இந்திய மக்களின் மத்தியில் தவழ்ந்துக் கொண்டிருந்தது. இந்த இசைவட்டை சோஸியலிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் உருவாக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. இவர்கள் தமிழ் சினிமா பாடல்களின் இசையில், வரிகளை மாற்றிப் பாடியுள்ளனர். 'சென்னை 600018', 'சித்திரம் பேசுதடி', 'திருவிளையாடல் ஆரம்பம்' போன்ற படங்களின் பாடல்கள் இந்த இசைவட்டில் இடம்பெற்றிருக்கின்றன. இப்பாடல்களின் வரிகள், முதலாளி வர்கத்தின் கொடுமையையும், தொழிலாளிகள் படும் துன்பத்தினையும் சித்தரிப்பதாக உள்ளன. 'மாற்றம் வேண்டும்' என இப்பாடல்கள் நமக்குக் கூறும் அறிவுரை.


Read more...

சொல்ல மறந்தக் கதை...

>> Thursday, February 28, 2008

25 நவம்பர் 2007, மலேசிய இந்தியர்கள் நிமிர்ந்து எழுந்த நாளது. இந்திய சமுதாயம் மறுமலர்ச்சியை நோக்கி முதல் காலடி எடுத்து வைத்த நிகழ்வு 25 நவம்பரில் நடைப்பெற்ற மாபெரும் எழுச்சிப் பேரணியாகும். ஆனால், அதே தினத்தில் பேரணி நடப்பதற்கு சில மணி நேரங்களே எஞ்சியிருந்த வேளையில் பத்துமலை வளாகத்தில் ஒரு கருப்புச் சரித்திரம் எழுதப்பட்டது..!

அமைதியாக கூடியிருந்தவர்களை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்த்ததுமட்டுமல்லாமல், பத்துமலை வளாக இரும்புக் கதவை இழுத்து மூடிவிட்டு உள்ளிருந்தவர்களை அமில நீர், கண்ணீர்ப் புகை குண்டுகளைக் கொண்டு தாக்கியக் கொடூரம் மன்னிக்க முடியாதக் குற்றமாகும்.

ஆனால், குற்றவாளிகளாக கருதப்பட வேண்டியவர்களை விட்டு விட்டு, அடிவாங்கிய பொதுமக்களை, கொலைக்குற்றம் சுமத்தி 'வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியது' அம்னோ அரசாங்கம்.

வாருங்கள் பத்துமலைக்கு சென்று திரு.கலைவாணரைச் சந்திப்போம்...

பகுதி 1




பகுதி 2



பகுதி 3




பகுதி 4




பகுதி 5



பகுதி 6,7 படச்சுருள்களில் பொது மக்கள் தாக்கப்பட்டதன் விளைவாக ஒரு சில உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்கள் தகாத வார்த்தைகளை உபயோகித்திருப்பர். வாசகர்கள் கவனம் தேவை.

பகுதி 6




பகுதி 7




நம்மிடமும் சில பலவீனங்கள் உள்ளதென்பதை எடுத்துக்காட்டவே இப்படங்களின் சிலக் காட்சிகள் தணிக்கை செய்யப்படாமல் வெளியிடப்பட்டுள்ளன. இனி அனைத்து நிகழ்வுகளும் முறையாக திட்டமிடப்பட்டு, அறிவுப்பூர்வமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே நமது குறிக்கோள். உணர்ச்சிவசப்படும் இளைஞர்களே, இனி நிதானமாகச் செயல்படுங்கள். காலம் இன்னும் கடந்துவிடவில்லை. வெற்றி நமக்கே!

போராட்டம் தொடரும்...

Read more...

மலேசிய அரசியல் கட்சிகளின் தேர்தல் கொள்கை அறிக்கைகள்

>> Wednesday, February 27, 2008

வருகின்ற 12-ஆவது நாட்டின் பொதுத் தேர்தலை முன்னிட்டு, நாட்டின் பல முன்னனிக் கட்சிகள் தேர்தல் கொள்கை அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. நாட்டின் முன்னனிக் கட்சிகளான பாரிசான் நேசனல், ஜனநாயக செயல் கட்சி மற்றும் மக்கள் நீதிக் கட்சி போன்றவை தங்கள் கட்சிகளின் கொள்கை அறிக்கைகளை தமிழில் வெளியிட்டுள்ளனர்.
(பாஸ் கட்சியைத் தவிர)

ஒவ்வொரு கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கையைப் படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைச் சுட்டுங்கள்.

பாரிசான் நேசனல்


ஜ.செ.க

மக்கள் நீதிக் கட்சி (கெஅடிலான்)


மக்கள் நீதிக் கட்சி (கெஅடிலான்)ஹாராபான் மலேசியா எனும் அகப்பக்கத்தை நான்கு மொழிகளில் வெளியிட்டுள்ளது. அகப்பக்கத்தைப் பார்வையிட இணைய இணைப்பைச் சுட்டுங்கள் :
ஹாராபான் மலேசியா

உங்கள் ஓட்டுரிமையை முறையாக பயன்படுத்தி சரியான கட்சிக்கு ஓட்டுகளைப் போடுங்கள்..

Read more...

தமிழ்ப்பள்ளி மெல்ல மடியவில்லை, திட்டமிட்டுக் கொல்லப்படுகிறது ஆட்சியில் இருப்பவர்களால்! - ஜீவி காத்தையா

மொழி ஒரு கலாச்சாரத்தின் அடித்தளம். மொழி அழிந்தால் அந்தக் கலாச்சாரம் அடையாளம் காணமுடியாமல் அழிந்துவிடும். இது வரலாறு கண்ட உண்மை.

இந்நாட்டில் தமிழ்க் கலாச்சாரத்தின் அடித்தளம் தமிழ்மொழி. அக்கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதில் முதன்மையாக விளங்குவது தமிழ் தொடக்கப்பள்ளிகள். இவை இந்நாட்டிலுள்ள தமிழ் இனத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றன. ஆலயங்களும் தமிழ்க்கலாச்சாரத்தை நிலை நாட்டுகின்றன. சில பொதுஅமைப்புகளும் தமிழ்க்கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் மற்றும் வளர்ப்பதில் ஈடுபாடு காட்டுகின்றன.

இவற்றில் மிக முக்கியமானது தமிழ்ப்பள்ளிகள். தமிழ்ப்பள்ளிகள் அழிந்தால், தமிழ்மொழி அழிந்து விடும். அதனைத் தொடர்ந்து தமிழ்க்கலாச்சாரம் அழியும். இறுதியில் இனமும் அழிந்துவிடும்.

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் இன்றைய நிலை மற்றும் அவற்றின் எதிர்காலம் குறித்துப் பல கருத்துகள் நிலவுகின்றன. பல விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாட்டை ஆளும் பாரிசான் நேசனலின் பங்காளியான மஇகாவும், அதன் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலுவும் தமிழ்ப்பள்ளிகள் எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி உயர்ந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இன்றையத் தமிழ்ப்பள்ளிகளின் நிலை, தரம், எண்ணிக்கை மற்றும் அவற்றின் எதிர்காலம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டுள்ளவர்களின் கருத்து தமிழ்ப்பள்ளிகள் சவக்குழியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்பதாகும்.

இக்கருத்தை ஏற்றுக் கொள்ளாத டத்தோஸ்ரீ சாமிவேலு இவ்வாறான கருத்தைக் கொண்டிருப் பவர்கள் தமிழ்ப்பள்ளி மெல்ல மடியும் என்று சொல்லி மகிழும் “மேதாவிகள்" என்று ஏளனம் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஸ்ஸைப் போன்ற தான் என்ற அகங்காரம் கொண்டவர்களின் குணம் இது.

தமிழ்ப்பள்ளி மெல்ல மடியவில்லை. திட்டமிட்டுக் கொல்லப்படுகிறது, டத்தோஸ்ரீ சாமிவேலு ஒட்டிக் கொண்டிருக்கும் பாரிசான் அரசால். இக்கொலைத் திட்டம் 1951 ஆம் ஆண்டில் உருவாகத் தொடங்கியது.

அன்றையக் காலகட்டத்திலிருந்து இன்றுவரையில் அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் கல்விக் கொள்கையினால் தமிழ்ப்பள்ளிகள் மற்ற இனப் பள்ளிகளைப் போல் முன்னேற்றம் காணாமல் பின் தள்ளப்பட்டு விட்டன என்பது தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடுடை யவர்களின் கருத்து. அப்பேர்ப்பட்டவர்களைத்தான் டத்தோஸ்ரீ சாமிவேலு “மேதாவி”கள் என்று ஏளனமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த “மேதாவி”களின் வரிசை யில் டான்ஸ்ரீ டத்தோ ஜி. வடிவேலும் சேர்க்கப்பட்டுள்ளாரா என்பது தெரியவில்லை. டான்ஸ்ரீ ஜி. வடிவேலு மஇகாவின் பொதுச் செயலாளராகவும் நாடாளுமன்ற மேலவையின் (Dewan Negara) தலைவராகவும் (President) இருந்திருக்கிறார். அவர் கூறுகிறார், “தமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்கள் மற்ற தொடக்கப் பள்ளிக்கூடங்களில் கிடைக்கும் அதே வசதிகளை அனுபவிப்பதில்லை என்பதுதான் உண்மையான நிலை." (“... the reality is that the children in Tamil schools do not enjoy the same facilities as other primary schools.")

இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில், ஜனவரி மாதம் 2007 ஆம் ஆண்டில், தமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்கள் எப்படி பள்ளிக்கூடத்திற்குக் கொண்டு வரப்படுகிறார்கள் என்பதை த ஸ்டார் தினசரியில் வெளியாகியுள்ள படத்தைக் காணும் போது டான்ஸ்ரீ வடிவேலு கூறிய கருத்திற்கு அவரை ஏளனத்திற்குரிய “மேதாவி" என்று அழைப்பதா அல்லது அவரைப் பாராட்டுவதா என்பது ஆளுங்கட்சியுடன் ஒட்டிக் கொண்டு தமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்களுக்குப் பெரும் துரோகம் இழைத்து விட்டவர்களுக்கு ஒரு தர்ம சங்கடமான பிரச்சனை யாகத்தான் இருக்கும்.

தமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்களின் பரிதாபகரமான நிலைக்குப் பாரிசானுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் மஇகா தலைவர் யார் யாரையோ குறை கூறுகிறார். பெற்றோர்கள் குறை கூறப்படுகிறார்கள். தமிழ்ப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் கண்டனத்திற்காளாகிறார்கள். தமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்களைப் பாதிக்கும் வியாதி என்னவென்று தெரிந்திருந்தும் அவர்களைப் பால்குடம் எடுக்க வைக்கிறார். வியாதி நீங்கவில்லை, நீங்காது. ஏனென்றால், மஇகா தலைவரின் தோழர் டான்ஸ்ரீ வடிவேலு கூறுகிறார்:


“The deplorable state of the buildings of Tamil schools has resulted in an inferior education which makes it impossible for Tamil school children to compete with advantaged schools in preparing its pupils for secondary schools. THE DROP OUT STUDY OF 1973 OBSERVED, “THE OUTCOME OF THIS UNEQUAL SCHOOLING IS AN UNEQUAL PRODUCT".

இந்த DROP OUT ஆய்வு அறிக்கையை எழுதியவர்களும் “மேதாவி"களோ! இந்த அறிக்கை வெளியிடப்பட்டு 33 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள “சமமற்ற பள்ளிக்கூட “(unequal schooling)" நிலை மாற்றம் கண்டுள்ளதா? இல்லை என்பதுதான் டான்ஸ்ரீ வடிவேலுவின் வாதம். மற்ற “மேதாவி"களின் வாதமும் அதுதான்.

இறுதியான குறிக்கோள்

புலிகளும் மலைப்பாம்புகளும் வாழ்ந்த இந்த நாட்டின் சீதோஷ்ண காட்டைத் தங்களின் வெறும் கைகளைக் கொண்டே அழித்து, தோட்டமாக்கி, பிரிட்டீஷ் பேரரசை குபேர நாடாக்கினார்கள் தமிழர்கள். அந்தத் தோட்டங்களை அழித்து மாளிகைகள் கட்டிக் கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்கள் பாரிசான்காரர்கள்.

பாரிசான் அரசிற்குப் பணம் ஒரு பிரச்சனையே இல்லை. கோணல் பாலம் கட்டுகிறார்கள்; கோபுரம் கட்டுகிறார்கள்; லண்டனில் விளையாட்டு மையம் அமைக்கிறார்கள்; வானத்தில் தே தாரே, ரொட்டிச் சானாய் போடச் செல்கிறார்கள்; ஆச்சேயில் அகதிகளைத் தேடிச் சென்று உதவும் மனப்பாங்கை வெளிப் படுத்துகிறார்கள்; லெபனானில் அமைதிப்பணி புரிவதற்கு தனது படைவீரர்களை அனுமதிக்குப்படி ஐநாவை கெஞ்சிக் கெஞ்சி அனுமதி பெற்றார்கள். இங்கிருந்து சீனாவிற்கு இரயில் பாதையிட விழைகிறார்கள்; கம்போடியாவிற்கு இலவசமாக இரயில் பெட்டிகளை வழங்குகிறார்கள்;... ஜிம்பாப்வே நாட்டின் அதிபர் அழகிய வீடு கட்டிக்கொள்வதற்காக விலை உயர்ந்த பலகைகளை அன்பளிப்புச் செய்கிறார்கள்; போர்க் குற்றவாளி, அசிங்கமான, இரத்தக்கறை படிந்த கொடியவன் புஸ்ஸின் கையைக் குலுக்குவதற்கு இலட்சக் கணக்கில் பணம் கட்டுகிறார்கள். பாரிசானில் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் கூட ஏகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆக, பாரிசான் கூட்டத்திற்குப் பணம் ஒரு சாதாரண விசயம்.

ஆனால், இவர்கள் இந்த வாழ்க்கை வாழ்வதற்கு அடித்தளம் அமைத்த அந்த வரலாற்றுத் தமிழர்களின் குழந்தைகள் சீரான கல்வி பெறுவதற்கு முறையான வசதிகளை ஏன் இந்த ஐம்பது ஆண்டுகளில் செய்து கொடுக்கவில்லை?

பாரிசானில் ஒட்டிக் கொண்டிருக்கும் மஇகாவினர் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்று கூற முடியாது. அதற்காக அவர்கள், அன்று துரைகளிடம் கெஞ்சியதைப் போல், துவான்களிடம் கெஞ்சத் தவறிவிட்டார்கள் என்றும் கூறமுடியாது.

மஇகாவின் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் அக்கறை கொள்ளாதவர் என்றோ, அதற்காக கடும் முயற்சிகள் மேற்கொள்ளாதவர் என்றோ குற்றம் சாட்டமுடியாது. இந்தியர்களின் வாக்குகளை வாரி, வாரி லாரிகளில் ஏற்றி பாரிசானுக்கு அளித்து தனது தணியாத விசுவாசத்தை நிருபித்திருக்கிறார். அகப்பட்ட பிரதமர்களுக்கெல்லாம் “ஐஸ்" வைத்திருக்கிறார். அவருடைய விடா முயற்சிகளுக்கெல்லாம் கிடைத்தது “நஹீன்"தான். பின்னர் “நஹீன்" என்று தான் சொல்லவில்லை என்று துன் மகாதீரிடம் மட்டும் விளக்கம் கொடுக்கவில்லை. அவரின் மகனிடமும் விளக்கம் தந்தார். அவரின் பேரப்பிள்ளைகளிடமும் விளக்கம் தந்தாரா என்பது தெரியவில்லை. அவரது இந்த நிலை இந்த நாட்டிலுள்ள உரிமையற்ற, சலுகைக்காகக் கெஞ்சும், இந்தியர்களின் ஒட்டு மொத்த நிலையைப் பிரதிபலிக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

நாடு சுதந்தரமடைந்த காலத்தில் 888 ஆக இருந்த தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் இன்று 523 ஆக ஆகியிருப்பது இந்தியர்களின் உரிமையற்ற, மான்யத்திற்கு கையேந்தி நிற்கும், அவலநிலைக்கு கிடைத்த சான்று. ஆனாலும், தமிழத் தினசரிகளில் அவர் அந்தத் தமிழ்ப்பள்ளிக்கு அதைப்பெற்றுத் தந்தார்; இவர் இந்தத் தமிழ்ப்பள்ளிக்கு இதைப் பெற்றுத் தந்தார்; இவற்றுக்கெல்லாம் அவருக்கு நன்றி கூறுகிறோம் என்று அடிக்கடி செய்திகள் வருகின்றன.

எல்லாவற்றிக்கும் மேலாக, மஇகா தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு தான் ஒரு காசு கூட செலவு செய்யாமல் ஒரு பெரிய தமிழ்ப்பள்ளிக்கூடத்தைக் கட்டிவிட்டதாகக் கொக்கரித்தது உண்டு. பல தனியார், குத்தகையாளர் போன்றவர்கள் கைமாறாகத் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கு உதவியுள்ளார்கள். ஏன், பாரிசான் அரசாங்கமும் மான்யங்கள் வழங்கியிருக்கிறது. அதுவும் செய்யாவிட்டால் இந்தியர்களின் வாக்குகளை பாரிசானுக்கு வாரிக் கொட்டுவது மஇகா தலைவருக்கு சிரமமாகிவிடும். ஆனால், எந்தக் காலகட்டத்திலும் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் மற்ற தொடக்கப்பள்ளிக் கூடங்களுக்குச் சமமாக இருக்கும் என்றொரு அரசுக் கொள்கை இருந்ததில்லை. அவ்வாறானதொரு கொள்கையை வகுத்து அதனை அரசு அமல்படுத்தும் நிலையை உறுதி செய்யும் நிலையில் பாரிசானில் ஒட்டிக்கொண்டிருக்கும் மஇகா இருந்ததில்லை. “அரசியலில் ம.இ.கா.வுக்கு வலுவுமுண்டு" என்று ஒரு கவிதையை மஇகா தலைவர் தனது குளியலறையில் வேண்டுமானால் முணுமுணுக்கலாம். துதிபாடும் கூட்டத்தின்முன் வேண்டுமானால் முணுமுணுக்கலாம். அதற்கும் மேல் சென்றால், மூர்த்தியின் மதமாற்றப் பிரச்சனையின் போது பிரதமரிடம் தனக்கு “வலுவுமுண்டு" என்ற தோரணையில் மகஜர் கொடுத்துவிட்டு பிறகு ஓடிப்போய் அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டதை டத்தோஸ்ரீ சாமிவேலு மறந்திருக்க மாட்டார்.

தமிழ்ப்பள்ளிக்கூட விவகாரத்தில் மஇகாவின் உரமற்ற செயல்களால் இந்தியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவல நிலையைப்போல் சீனப்பள்ளிக்கூட விவகாரத்தில் மசீசாவின் உறுதியற்ற கொள்கைகளால் இந்தியர் களைவிட, அதிக மக்களைக் கொண்ட, பண வலுவுள்ள, சீனர் சமூகம், இன்னும் மோசமான அவல நிலையில் இருக்கின்றது.

சீன தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கைகளும் கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில் குறைவு கண்டுள்ளன. சீன மக்களின் எண்ணிக்கை உயர்ந்து, சீன மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்த நிலையிலும் புதிய சீனப்பள்ளிக்கூடங்கள் தேவைக்கேற்ற அளவில் கட்டப்படவில்லை. சீனர்களின் இடைநிலைப் பள்ளிகளுக்கு, அதாவது மெண்டரினை போதனை மொழியாகக் கொண்டுள்ள பள்ளிகளுக்கு, அரசாங்க நிதி ஒதுக்கீடு கிடையாது. அப்பள்ளிகள் “independent secondary schools" என்று அழைக்கப்படுகின்றன. தமிழர்களுக்குத் தமிழ் இடைநிலைப்பள்ளிகள் கிடையாது. மேற்குறிப்பிட்ட சீன இடைநிலைப்பள்ளிகள் அனைத்தும் சீன சமூகம் அளிக்கும் நன்கொடைகளைக் கொண்டே இயங்குகின்றன. சீன அமைப்புகளின் வலுவான ஆதரவு அவற்றிக்கு உண்டு.

மஇகாவைப் போல் பாரிசானில் ஒட்டிக்கொண்டு ஆட்சியில் அமர்ந்திருக்கும் மலேசிய சீனர் சங்கம் (மசீச) தொழில் மற்றும் நிதித்துறைகளில் மலேசிய அரசாங்கத்திடமிருந்து சில சலுகைகளைப் பெறுவதில் முனைப்புடன் செயல்பட்டபோதிலும், சீனமொழி மற்றும் சீனப் பள்ளிக்கூடங்களின் வளர்ச்சியும் அம்மொழியின் எதிர்காலம் போன்ற விவகாரங்களில் மசீசவின் நிலை மஇகாவின் நிலைபோல் பரிதாபத்திற்குரிய ஒன்றே. சீன அமைப்புகள் இல்லாதிருந்தால் சீனப்பள்ளிக்கூடங்களின் தோற்றம் நமது தமிழ்ப்பள்ளிகளின் தோன்றத்தைப் போன்றே இருந்திருக்கும்.

மசீசவும் மஇகாவும் பொதுத் தேர்தல்களில் பாரிசானின் வெற்றியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றிய போதிலும், அம்னோவின் ஆதிக்கத்திலுள்ள பாரிசான் அரசாங்கம் சீன மற்றும் இந்திய மலேசிய மக்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தத் தவறிவிட்டனர். பேச்சளவில் மற்றும் கொள்கை அறிக்கைகள் அளவில் சீன மற்றும் இந்திய மலேசியர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதே தவிர நடைமுறையில் அக்கொள்கைகளுக்கு நேர் எதிர்மாறான நடவடிக்கைகளே இடம் பெறுகின்றன.

இந்நாட்டிலுள்ள அனைத்து இனங்களின் மொழி, கலை, கலாசாரங்கள் பேணிக் காக்கப்படும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது; அரசாங்க அமைச்சர்கள் கூறுகிறார்கள்; மசீச மற்றும் மஇகா தலைவர்கள் கூறுகிறார்கள். உலகிலேயே பல்லின மக்கள் மற்றும் பல்லின கலாசாரங்கள், மொழிகள் ஆகியவற்றைக் கொண்ட நாடுகளில் மலேசியாவைப் போல் சிறந்த நல்லிணக்கமுள்ள நாடு வேறில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், எல்லாவித வளர்ச்சிகளுக்கும் அடித்தளமான கல்வி, பன்மொழிக் கல்வி, வளர்ச்சிக்கு இந்நாட்டு அரசின் கொள்கை என்ன? அக்கொள்கைகள் அமல்படுத் தப்படுகின்றனவா? அவற்றைச் செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடுகள் உண்டா?

மலேசிய தேசிய கல்விக் கொள்கையைப் பொறுத்தவரையில் மலேசிய அரசிற்கு ஒரு “இறுதியான குறிக்கோள" (Ultimate Objective") உண்டு. மலாய் மொழி ஒன்று மட்டுமே எல்லாப்பள்ளிகளிலும் எல்லா நிலையிலும் போதனை மொழியாக இருக்க வேண்டும் என்பதே அந்த “இறுதியான குறிக்கோள்".

அந்த “இறுதியான குறிக்கோள்" வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் வலுவான ஆயுதங்களில் ஒன்று சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளைக் குறைத்தலாகும்.

அரண்மனைத் தமிழ் ஆண்டித் தமிழாகிவிட்டது

தமிழ்மொழி இந்நாட்டிற்குக் கூலிகளாகக் கொண்டு வரப்பட்ட தமிழர்களுடன் வந்ததன்று. அதற்கு முன்பாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, இந்நாட்டிற்கு வந்த வணிகர்கள், அவர்களைப் பின்தொடர்ந்த படைவீரர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் வழியாகத் தமிழ் இந்நாட்டை வந்தடைந்து அரண்மனை மொழியாகவும் வாணிகத்துறை மொழியாகவும் திகழ்ந்தது.

முன்சி அப்துல்லா (1796-1854) தான் தமிழ்க்கல்வி கற்க அனுப்பப்பட்டது பற்றி கூறியிருக்கிறார். தமிழ்மொழி எல்லாராலும் பயன்படுத்தப்பட்ட ஒரு பொது வாணிக மொழியாக இருந்ததால் அவரின் தந்தை அவரை தமிழ் கற்கச் செய்தார். மலாக்காவில் உயர்நிலையில் இருந்த அனைவரும், வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும், தமிழ் கற்றிருந்தனர். அதனால் தாய்மொழியைக் (மலாய்) கற்க வேண்டிய தேவையில்லாமல் போய்விட்டது என்றார். (“Munshi Abdullah himself is said to have referred to Tamil as a universal language and that there was no necessity for studying the ‘mother tongue" meaning Malay.")

மலாக்காவில் மட்டுமல்ல; மற்ற கெடா, பேராக், பகாங் போன்ற மாநிலங்களிலும் தமிழ்மொழி முன்னணி மொழியாக இருந்தது. மாநில ஆட்சியாளரை “Daulat dirgahayu” என்று வாழ்த்தும் வாசகங்களை இன்றுகூடக் காணலாம். ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் கூட பல நிலப்பத்திரங்கள் தமிழில் எழுதப்பட்டிருப்பதைக் காணமுடியும். ஆக, இன்று இந்நாட்டில் வழங்கும் மொழிகளான மலாய், சீனம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது தமிழ்மொழி முன்னிலையுடையது.

ஆனால், கொண்டதைக் கட்டிக் காக்க களமிறங்கும் கடுஞ்சித்தம் தமிழர்களின் தனிச்சிறப்புகளில் ஒன்றானதாக இல்லாததால் அரண்மனை மொழியாக இருந்த தமிழ்மொழி இன்று கூலிகளின் மொழி என்ற தகுதியுடன் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

மாறுபட்ட சூழ்நிலையில், பிரிட்டீஷாரின் ஆட்சிக் காலத்தில், தமிழ்ப்பள்ளி மீண்டும் உருவாகியது. முதல் தமிழ்ப்பள்ளி 1816 ஆம் ஆண்டில் பினாங்கில் கிறித்துவர்களால் துவக்கப்பட்டது. இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளின் வரலாறு இரு நூற்றாண்டுகளை அடையும். முதல் சீனப்பள்ளி 1815 ஆம் ஆண்டில் துவங்கியது. பிரிட்டீஷார் காலத்தில் தோட்டங்களிலும் நகர்ப்பறங்களிலும் தமிழ்ப்பள்ளிகள் தோன்றின. பொருளாதார வளமற்ற தமிழ்ப்பள்ளிகள் தோட்ட உரிமையாளர்களின் தயவிலும், அரசாங்க உதவியோடும், இன்னும் சில தனியாரின் ஆதரவோடும் வளர்ந்த தமிழ்ப்பள்ளிகள் நாடு சுதந்தரமடைந்த காலகட்டத்தில் எண்ணிக்கையில் 888 ஆக இருந்தன. சீனப்பள்ளிகளின் எண்ணிக்கை 1342 ஆகும்.

சுதந்தர மலேசியாவில், மொழி, இன, மத வேறுபாடின்றி, எல்லா உரிமைகளும் எல்லா மக்களுக்கும் உறுதிப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்த நாடு என்ற தகுதியை நோக்கி நாடு பீடுநடை போடுவதாகக் கூறப்படும் இன்று தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயர்ந்திருக்கவில்லை; எண்ணிக்கை கூடியிருக்கவில்லை. 888 ஆக இருந்தத் தமிழ்ப்பள்ளிகள் 523 ஆகிவிட்டன. 1342 ஆக இருந்த சீனப்பள்ளிகள் 1281 ஆகக் குறைந்து விட்டன.

சீனமொழிக்கு தொடக்கப்பள்ளிகளும் இடைநிலைப் பள்ளிகளும் இருகின்றன. தமிழ்மொழிக்கு தொடக்கப் பள்ளிகள் மட்டுமே.

சீனர் சமூகத்திற்குப் பணவலிமை இருந்தும் சீனப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசு நிதி ஒதுக்கீடு தேவைப்பட்டது, பிச்சையாக அல்ல. ஆனால் போடப்பட்டது பிச்சைதான். வலிமையற்ற இந்திய சமூகத்திற்குத் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசு நிதி ஒதுக்கீட்டைத் தவிர வேறுவழியே இல்லை. பிச்சையிலும் கேவலப் பிச்சைதான் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடப்பட்டது.

அரசுக் கல்வி நிதி ஒதுக்கீட்டில் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் எந்த அளவிற்கு பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டன என்பதற்கு 5.11.1996ல் அன்றைய கல்வி அமைச்சர் நஜீப் துன் ரசாக் நாடாளுமன்றத்தில் அளித்த புள்ளிவிவரத்தைக் காண்போம்:

மொத்த கல்வி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டில் தேசிய மலாய் தொடக்கப்பள்ளிகளுக்கு 96.6 விழுக்காடும், சீன ஆரம்பப்பள்ளிகளுக்கு 2.4 விழுக்காடும், தமிழ் தொடக்கப்பள்ளிகளுக்கு 1 விழுக் காடும் ஒதுக்கப்பட்டன.

கல்வி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு ரிம 100 என்று எடுத்துக் கொண்டால் கல்வி அமைச்சர் அளித்த புள்ளிவிவரப்படி மலாய் தொடக்கப்பள்ளிகளுக்கு ரிம 96.6ம், சீன தொடக்கப்பள்ளிகளுக்கு ரிம 2.4கும் மற்றும் தமிழ் தொடக்கப்பள்ளிகளுக்கு ரிம 1ம் கொடுக்கப்பட்டன.

இவ்வாறான பாகுபாட்டின் காரணமாகச் சீனப்பள்ளிகள் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் ஆகியவற்றின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டது. போதுமான பள்ளிக்கூடங்கள் கட்டாததற்கும், பள்ளிகளில், குறிப்பாகத் தமிழ்ப்பள்ளிகளில், தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் பள்ளிகள் பாழடைந்த நிலையை அடைந்ததற்கும் நிதிப்பற்றாக்குறையே காரணம்.

ஏன் சீன மற்றும் தமிழ் தொடக்கப்பள்ளிகளுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை? சீன மற்றும் தமிழ் மாணவ மாணவிகள் இப்பள்ளிகளுக்குச் செல்ல மறுத்து விட்டனரா? சீன மற்றும் இந்திய சமூகங்கள் இப்பள்ளிகள் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார்களா? அல்லது சீன மற்றும் தமிழ்ப்பள்ளி அமைப்புகள் சீன மற்றும் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு அரசு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்கத் தவறிவிட்டனரா? அல்லது ஆளுங்கட்சியைச் சார்ந்த மசீசாவும் மஇகாவும் அரசாங்க நிதி ஒதுக்கீடு தேவையில்லை என்று கூறிவிட்டனவா?

அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. மாறாக, அம்னோவின் தலைவர்களுக்கு ஆள் உயர மாலையிட்டு, மரியாதை செய்து சீன மற்றும் தமிழ்ப்பள்ளிக்குத் தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யு மாறு கோரிக்கைகள் பல விடுக்கப்பட்டன. தேர்தல் காலங்களில் இக்கோரிக் கைகள் வலுப்பெற்றன. சமீபத் தில், நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் தமிழ்ப்பள்ளிக்கூட வளர்ச்சிக்கு ரிம100 கோடி ஒதுக்குமாறு நாடாளு மன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டியது கொடுக்கப்படும்; யாரும் பின் தங்கிவிட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று பாரிசானின் ஜம்பவான்களான அம்னோவின் தலைவர்கள் உறுதியளிக்கத் தவறியதில்லை. அவர்களும் வாக்களித்தப்படி கல்வி வளர்ச்சிக்காகத் தவறாமல் “மான்யம்" என்ற பெயரில் பிச்சை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சீன மற்றும் இந்திய மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு அம்னோ அரசாங்கம் கொடுக்கும் விலை இந்த மான்யம். கல்வி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மான்யம் என்ற நாடகம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன் விளைவு, அம்னோ ஆட்சியாளர்களின் “இறுதியான குறிக்கோள்" (Ultimate objective) வெற்றியடைந்து கொண்டிருக்கிறது; சீன மற்றும் தமிழ் தொடக்கப்பள்ளிகள் நலிவடைந்து கொண்டிருக்கின்றன.

“இறுதியான குறிக்கோள்" நோக்கி அம்னோ ஆட்சியாளர்கள் தொடங்கிய பயணத்தின் அடுத்த கட்டம்தான் “தூரநோக்குப்பள்ளி" (“Vision school").

பார்ன்ஸ் (Barnes) அறிக்கை 1951

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு பிரிட்டீஷ் மலாயா அரசு இந்நாட்டில் நிலவிய சமூகப் பிரிவினைக்கு வழிகாண வேண்டும் என்று கூறி மத்திய கல்வி ஆலோசனைக் குழு ஒன்றை 1949 ஆம் ஆண்டில் நியமித்தது. நாட்டில் காணும் பல்லினங்களையும் ஒன்றிணைத்து ஒரு மலாய சமூகத்தை (Malayan entity) உருவாக்குவதற்கு நடுநிலை மொழியான ஆங்கிலம் பொருத்தமானதாக இருக்கும் என்று அக்குழு பரிந்துரைத்தது. அக்குழுவின் பரிந்துரையை பெடரல் சட்டமன்றம் நிராகரித்து விட்டது.

அதன்பிறகு, 1950 ஆம் ஆண்டில் காலனித்துவ அரசு ஐந்து ஆங்கிலேயரையும் ஒன்பது மலாய்க்காரர்களையும் கொண்ட ஒரு குழுவை எல்.கே. பார்ன்ஸின் தலைமையில் அமைத்து “மலாய்க்காரர்களுக்குக் கிடைத்துவரும் கல்வி வசதிகள் போதுமானவையா" என்பதைக் கண்டறியும் பொறுப்பை அக்குழுவிடம் ஒப்படைத்தது.

பார்ன்ஸ் அறிக்கை 1951 என்றழைக்கப்பட்ட அக்குழுவின் அறிக்கை கொடுத்த பொறுப்பிற்கு அப்பால் சென்று நடைமுறையில் இருக்கும் மும்மொழி போதனைக் கல்வி முறையை அகற்ற வேண்டும் என்றும், அதற்கு மாற்றாக ஒரே மாதிரி தொடக்கப்பள்ளியை எல்லா இன மாணவர்களுக்கும் திறந்துவிட வேண்டும் என்றும், அப்பள்ளியில் ஆங்கிலம் மற்றும் மலாய் ஆகிய இரு மொழிகள் மட்டுமே போதனை மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், பரிந்துரை செய்தது.

மேலும், இடைநிலைப்பள்ளியில் ஆங்கிலம் மட்டுமே போதனை மொழியாக இருக்க வேண்டும்; மலாய் இரண்டாவது மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டும், என்ற பரிந்துரைகளையும் பார்ன்ஸ் குழு செய்தது.

பார்ன்ஸ் அறிக்கை ஒரு விஷமத்தனமான பரிந்துரையையும் செய்திருந்தது. தங்கள் குழந்தைகள் பார்ன்ஸ் குழு பரிந்துரைத்திருக்கும் ஆங்கிலம் மற்றும் மலாய்மொழிகளில் கல்வி கற்பதை ஏற்றுக் கொள்ளும் மலாய்க்காரர் அல்லாத பெற்றோர்கள் மலாயாவைத் தங்களின் தாயகமாக ஏற்றுக் கொண்டவர்களாகக் கருதப்படுவர்; அவ்வாறு ஏற்றுக் கொள்ளாதவர்கள் மலாயாவைத் தாயகமாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்று கருதப்படுவர் என்று பரிந்துரைத்தது பார்ன்ஸ் குழு. தாய்மொழிக் கல்விக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் அவ்வறிக்கை கூறியது. “இறுதியான குறிக்கோளுக்கு" வித்திட்ட பார்ன்ஸ் அறிக்கை கூறுகிறது:

“In principle we recommend the end of separate vernacular schools for the several racial communities, and their replacement in a single type of primary school common to all. We recognise, of course, that the end can come only gradually, vernacular schools will continue for some years, concurrently with the development of the National School (ie. Government primary schools). We ask however, that in the allocation of public resources to primary education, priority should be given to the National School."

மெல்ல மெல்ல கொல்லப்படும் தமிழ்ப்பள்ளிகள், பொதுவான தூரநோக்குப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்படும் ஒரு விழுக்காடு அரசு கல்வி வளர்ச்சி நிதி ஒதுக்கீடு ஆகியவற்றின் துவக்கத்தை ஐந்து ஆங்கிலேயரும் ஒன்பது மலாய்க்காரர்களும் சேர்ந்து தயாரித்த பார்ன்ஸ் அறிக்கையில் காணலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் “அரசாங்கத்தின் மறைமுகத்திட்டமாம் இது", என்று டத்தோஸ்ரீ சாமிவேலுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

பார்ன்ஸ் குழு அறிக்கை மலாயாவின் பல்லின மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, சீனர் சமூகத்தின் கண்டனம் மிகக் கடுமையானதாக இருந்தது. அத்தோடு என்றுமே காணப்படாத அளவிற்குச் சீனர் சமூகத்தை இந்த அறிக்கை ஒன்றுபடுத்தியது. ஓர் இனத்தின் கலாசாரத்தை ஒதுக்கி வைத்து விட்டு எவ்வாறு தேசிய அடையாளத்தையும் உணர்வையும் உருவாக்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

முற்போக்குச் சிந்தனை கொண்ட சில மலாய்க்காரர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மஇகாவும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால் அதன் கருத்து சீனர் சமூகத்தின் பல்லின மொழி மற்றும் கலாசாரக் கோரிக்கையிலிருந்து மாறுபட்டிருந்ததோடு ஆறாம் வகுப்பில் ஆங்கிலம் போதனை மொழியாக இருப்பதை விரும்பியது.

பார்ன்ஸ் குழு அறிக்கைக்கு சீனர் சமூகத்திடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பை சாந்தப்படுத்தும் நோக்கத்தோடு காலனித்துவ அரசு டாக்டர் W.P.Fern மற்றும் டாக்டர் Wu The - yao ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழுவின் அறிக்கை பார்ன்ஸ் குழுவின் அறிக்கையிலிருந்து பல வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தது. ஒன்று அல்லது இரண்டு மொழிகளை மக்கள் மீது திணிப்பது சமூகப் புரிந்துணர்வு மற்றும் தேசிய ஒற்றுமைக்கு வளமான சூழ்நிலையை உண்டாக்காது என்று அக்குழு கருத்துத் தெரிவித்தது. அத்துடன், சீனக்கல்வி முறையில் காணப்பட்ட பலவீனங்களைச் சுட்டிக் காட்டிய அவ்வறிக்கை சீனக்கல்வி வளர்ச்சிக்கு அரசு அதன் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

பார்ன்ஸ் மற்றும் ப்பென்-வு குழுக்களின் அறிக்கைகளை ஆய்வு செய்வதற்கு அரசு மீண்டும் ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது. அக்குழுவின் முடிவு காலனித்துவ அரசின் நோக்கத்தை ஏற்றுக் கொள்வதாக இருந்தது.

இறுதியில் கல்விச் சட்டம் 1952 (The Education Ordinance 1952) நிறைவேற்றப்பட்டது. அச்சட்டம் ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளைக் கொண்ட தேசியப்பள்ளியை உருவாக்கியதுடன் சீனம் மற்றும் தமிழ் ஆகியவற்றை மூன்றாவது போதனை மொழியாக்கியது. சீனமும் தமிழும் தேசியப் பள்ளியின் அங்கமாக இராது. ஒரு வகுப்பில் குறைந்தது 15 மாணவர்கள் கேட்டுக் கொண்டால் அம்மாணவர்களுக்கு சீனம் அல்லது தமிழ் போதிக்கப்படும். இத்திட்டம் எந்த அளவிற்குச் சீனமும் தமிழும் தேசியப் பள்ளியில் போதிக்கப்படுவதில் செவ்வனே நடந்தேறியது என்பது டத்தோஸ்ரீ சாமிவேலுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

அப்துல் ரசாக் அறிக்கை 1956

மலாயா சுதந்தரம் அடைவதற்கு ஓர் ஆண்டு இருக்கையில் வெளியானது அப்துல் ரசாக்கின் அறிக்கை. அவ்வறிக்கை மலாய் ஆளும் வர்க்கத்தினரின் “இறுதியான குறிக்கோளை" வெளிக் கொணர்ந்தது. இந்நாட்டு வரலாற்றில் முதன் முறையாக கல்விக் கொள்ளையின் “இறுதியான குறிக்கோள்” (Ultimate objective) என்ன என்பதை இவ்வறிக்கை தெளிவுப்படுத்தியது:

“... the ultimate objective of education policy in this country must be to bring together the children of all races under a national education system in which the national language is the main medium of instruction".

இவ்வறிக்கையை உருவாக்கிய அப்துல் ரசாக் குழுவில் ஒன்பது மலாய்க்காரர்கள், ஐந்து சீனர்கள், ஓர் இந்தியர் இடம் பெற்றிருந்தனர்.

ஓர் இனக் கலாசார அடிப்படையில் உருவான ரசாக் குழு அறிக்கையும் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாயிற்று. சீனர் சமூகத்தின் எதிர்ப்பு தீவிரமாக இருந்தது. மசீச சங்கம் அதன் மத்திய கல்விக்குழுவின் வழியாக ரசாக் அறிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று நிராகரித்து. இது மசீசவில் பெரும் பிளவை ஏற்படுத்தியது. அரசியல் கூட்டின் காரணத்தால் தேர்ந்தெடுக்கப்பட மசீச தலைவர்கள் அரசாங்கக் கல்வி கொள்கையின் மீது மோத விரும்பவில்லை.

இந்தியர்கள் அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. மஇகா, கூட்டணியின் தேசிய நோக்கத்துடன் மோதல் நிலை ஏற்படும்போது அதனை தவிர்ப்பதற்கு மஇகா அதன் சமூக நலன்களை விட்டுக் கொடுக்கத் தயங்கவில்லை. மஇகா ஆறாவது வகுப்பிலிலிருந்து ஆங்கிலத்தை போதனை மொழியாக ஏற்க முன்வந்தது. மலாய் மொழியையும் தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டது. ரசாக் அறிக்கை அவர்களது விருப்பத்தைப் பூர்த்தி செய்துள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால் “இறுதியான குறிக்கோள்" பற்றி மஇகாவினர் நாட்டம் காட்டியதாதத் தெரியவில்லை. பாதிப்பை ஏற்படுத்தாமல் பதவியில் இருப்பதுதான் முக்கியமான நோக்கமாக இருந்திருக்கிறது.

சீனர் சமூகத்தின் தீவிர எதிர்ப்பு மற்றும் சில மலாய்க்காரர்களின் குறைகூறல் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு ரசாக் அறிக்கை ஐந்து மலாய்க்காரர்கள், மூன்று சீனர்கள் மற்றும் ஓர் இந்தியர் அடங்கிய குழுவால் மறு ஆய்வு செய்யப்பட்டு அதில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்க மிக முக்கியமான மாற்றம்:

“... a national system of education acceptable to the people of the Federation as a whole which will satisfy the needs to promote their culture, social, economic and political development as a nation, having regard to the intention of making Malay the national language of the country whilst preserving and sustaining the growth of the language and culture of other communities living in the country."

இந்த மாற்றங்களுடன் ரசாக் அறிக்கை கல்விச் சட்டம் 1957 ஆகியது. இச்சட்டம் பல்லின கலாசாரக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டதுடன் “இறுதியான குறிக்கோள" என்ற வார்த்தைகள் இச்சட்டத்தில் இடம் பெறவில்லை. தேசிய கல்விக் கொள்கையைப் பொறுத்தவரையில் இச்சட்டம் ஒரு உண்மையான “சமுதாய ஒப்பந்தம்” (Social contract) என்று கூறப்பட்டது.

ரஹிம் தாலிப் அறிக்கை 1960

தங்களது இனத்தின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதில் கண்ணுங் கருத்துமாக இருந்து வந்த மலாய் ஆட்சியாளர்கள் ரசாக் அறிக்கையின் அடிப்படையில் இயற்றப்பட கல்விச் சட்டம் 1957ஐ மறு ஆய்விற்கு உட்படுத்தினர்.

பல்லினக் கலாசாரக் கல்விக்கொள்கையின் அடிப்படையில் உருவான கல்விச்சட்டம் 1957 மீண்டும் ஓரினக் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கொள்கைக்கு மாறுவதற்கு ரஹிம் தாலிப் அறிக்கை வழிவகுத்தது.

ரஹிம் தாலிப் அறிக்கையின் அடிப்படையில் கல்விச்சட்டம் 1961 இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் காணப்படும் மாற்றத்தைத் தெளிவாகக் கண்டு கொள்வதற்கு கல்விச்சட்டம் 1957 விதி 3 மற்றும் கல்விச்சட்டம் 1961 விதி 3 கீழே தரப்பட்டுள்ளது.

முதலில், கல்விச்சட்டம் 1957, விதி 3:

“3. The education policy of the Federation is to establish a national system of education acceptable to the people of the Federation as a whole which will satisfy the needs to promote their culture, social, economic and political development as a nation, with the intention of making Malay language the national language of the country whilst preserving and sustaining the growth of the language and culture of peoples other than Malays living in the country."

கல்விச்சட்டம் 1961, விதி 3:

“3. The education policy of the Federation is to establish a national system of education which will satisfy the needs to promote the culture, social, economic and political development as a nation, with the intention of making Malay language the national language of the country".

கல்விச்சட்டம் 1957, விதி 3ல் எல்லா இனங்களையும் இணைத்து அவர்களின் மொழி மற்றும் கலாசாரம் ஆகியவற்றிக்கு பாதுகாப்பு மற்றும் ஆதரவு கொடுக்க வகை செய்யும் வாசகங்களின் கீழ் கோடிடப்பட்டுள்ளது. கோடிடப்பட்டுள்ள அவ்வாசகங்கள் கல்விச்சட்டம் 1961, விதி 3ல் நீக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் தேசிய கல்வி கொள்கையில் மலாய்க்காரர் அல்லாதவர்களின் மொழி மற்றும் கலாசாரம் ஆகியவற்றிக்கு இடம் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

இன்னொரு குறிப்பிடத்தக்க முக்கியமான விதி 21(2). இந்த விதி கல்வி அமைச்சர் விரும்பிய நேரத்தில் தாய்மொழியை போதனை மொழியாகக் கொண்ட தமிழ் அல்லது சீன தொடக்கப்பள்ளியை அரசாங்க மலாய்த் தொடக்கப்பள்ளியாக மாற்றுவதற்கான அதிகாரத்தை அமைச்சருக்கு வழங்கியிருக்கிறது. தமிழ்த் தொடக்கப்பள்ளியை மலாய்ப் தொடக்கப்பள்ளியாக மாற்றும் முழு அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் கல்வி அமைச்சர் பெறுகிறார். அதனைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் டத்தோஸ்ரீ சாமிவேலுக்கு இல்லை. இந்நிலையில் “தமிழ்ப்பள்ளிக்கு ஏற்றம்!" எப்படி ஏற்படும்?

கல்விச்சட்டம் 1996

பல்லின மொழி, பல்லின கலாசாரம் ஆகியவற்றை அகற்றிவிட்டு ஓரின மொழி, ஓரின கலாசாரத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்ட மலாய் ஆட்சியாளர்களின் “இறுதியான குறிக்கோளை" நிறைவேற்றுவதற்கு வகை செய்த கல்விச்சட்டம் 1961க்கு மேலும் வலுவூட்ட புதிய கல்விச்சட்டம் 1996 இயற்றப்பட்டு ஜூலை மாதம் 1997ல் அமல்படுத்தப்பட்டது.

இச்சட்டம் மலாய்க்கார ஆட்சியாளர்களின் “இறுதியான குறிக்கோளை" தொடர்ந்து வலுவாக அமல்படுத்துவதற்கு வகை செய்கிறது. விதி 17(1)ன் கீழ் தேசிய கல்வி அமைவிற்கு உட்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும், பாலர்பள்ளிகளையும் சேர்த்து, தேசிய மொழியே முதன்மையான போதனை மொழியாக இருக்க வேண்டும். இதற்கான விலக்கு விதி 28ல் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்பு நான்கு மாதிரியான பள்ளிகள் இருந்தன. இப்புதியச் சட்டத்தின்படி மூன்று மாதிரியான பள்ளிகளே இருக்கும்: 1. தேசியப்பள்ளிகள் (மலாய்த் தொடக்கப்பள்ளிகள்), 2. தேசிய மாதிரிப்பள்ளிகள் (சீன மற்றும் தமிழ்த் தொடக்கப்பள்ளிகள்) 3. தேசிய (மலாய்) இடைநிலைப்பள்ளிகள். நீக்கப்பட்டிருப்பது தேசிய - மாதிரி (சீன) இடைநிலைப்பள்ளிகள். இம்மாதிரியானப் பள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ள கல்விச்சட்டம் 1961ன் கீழ் அனுமதிக்கப்பட்டன. தாய்மொழியை போதனை மொழியாகக் கொண்ட இடைநிலைப்பள்ளி சகாப்தம் இத்துடன் முடிவிற்கு வந்துள்ளது. இது “இறுதியான குறிக்கோளைக்" கொண்டிருப்பவர்களின் மற்றொரு வெற்றி.

கடமை உண்டு; உரிமை?

இந்நாட்டில் தமிழ்க்கல்வி போதனையைப் பொறுத்தவரையில் கல்விச்சட்டத்தில் தேசிய மாதிரி தொடக்கப்பள்ளி மாணவர்கள் இடைநிலைப்பள்ளியில் தங்களின் படிப்பைத் தொடர்வதற்காக அவர்களுக்கு மலாய் மற்றும் ஆங்கில மொழிகள் தமிழ்ப்பள்ளிகளிலேயே போதிக்கப்படுகின்றன. தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரசாங்கம் வழங்கும் நிதி மற்றும் ஆதரவு தமிழ் தொடக்கப்பள்ளி ஆறாம் வகுப்புடன் முடிந்து விடுகின்றன. அதே நிலைதான் சீன தொடக்கப்பள்ளிகளுக்கும். மலாய் தொடக்கப்பள்ளி மட்டும் தொடர்ந்து அரசாங்க நிதி மற்றும் ஆதரவுடன் வளர்ந்து இடைநிலைப்பள்ளி நிலையை அடையும்.

அதே நேரத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் தொடர்ந்து வரி கட்டுகிறார்கள், வருமான வரி கட்டுகிறார்கள், நாட்டின் வளப்பத்திற்காக உழைக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்த்தியாகம் செய்ய வேண்டிய கடமையை ஒவ்வொரு தமிழ் இளைஞனும் கொண்டிருக்கிறார்.

நாட்டிற்காக இறப்பதற்கு, வரி செலுத்துவதற்கு, மற்ற கடமைகளை ஆற்றுவதற்கு, இனம், மொழி, கலாசாரம், வயது, தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி என்ற பாகுபாடுகள் இல்லை, இருக்கக்கூடாது. நாட்டிற்காக இறப்பது குடிமகனின் கடமை!

இறக்கக் கடமைப்பட்டிருக்கும் தமிழ்க் குடிமகனின் உரிமைக்கு ஏன் தடைகள்? அவனின் மொழி, கல்வி, கலாசார வளர்ச்சிக்கு ஏன் கட்டுப்பாடுகள்? நூறு விழுக்காடு இளைய தமிழ் குடிமக்களும் நாட்டிற்காக இறக்கக் கடமைப்பட்டிருக்கும்போது தமிழ்ப்பள்ளிக்கான அரசு நிதி ஒதுக்கீடு மட்டும் ஏன் ஒரே ஒரு விழுக்காட்டில் நிற்கிறது? உயர்ந்த கோபுரங்களைக் கொண்டிக்கும் இந்த நாட்டில் ஏன் இந்த தாழ்ந்த நிலை தமிழ்ப்பள்ளிகளுக்கு?

இறக்கக் கடமைப்பட்டிருக்கும் இளைய தமிழ்க் குடிமக்களுக்கு தமிழ்ப்பள்ளிகூடம் கட்டித்தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை. எந்தப் பாகுபாடுமின்றி தமிழ்ப்பள்ளிக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் எல்லாவித வசதிகளையும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசமைப்புச் சட்ட விதி 12(1) அக்கடப்பாட்டைத் திட்டமாகக் கூறுகிறது: (Rights in respect of education):

“... there shall be no discrimination against any citizen on the grounds only of religion, race, descent or place of birth ... in the administration of any educational institution maintained by a public authority ... in providing out of the funds of a public authority financial aid for the maintainance or education of pupils or students in any educational institution (whether or not maintained by a public authority...)

அரசமைப்புச் சட்டப்படி எந்தப் பாகுபாடுமின்றி ஒரு மாணவன் கல்வி கற்பதற்கு தேவையான அனைத்தையும் அரசு நிதியிலிருந்து வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். தமிழ்க்கல்வி மற்றும் தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தவரையில் அரசாங்கம் அக்கடமையிலிருந்து தவறிவிட்டது.

அரசாங்கம் அரசமைப்புச் சட்டத்திற்கேற்ப தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்வதை உறுதிப்படுத்துவதை கடமையாகக் கொள்ளாமல் தமிழ்ப்பள்ளியை உதாசீனம் செய்யும் அரசின் கொள்கையையும் செயல்பாடுகளையும் தற்காப்பதையே கடமையாகக் கொண்டிருக்கிறார்கள் பாரிசான் அரசில் ஒட்டிக் கொண்டிருக்கும் மஇகா தலைவர்கள், குறிப்பாக டத்தோஸ்ரீ சாமிவேலு.

தமிழ்ப்பள்ளிகள் எண்ணிக்கையில் உயர்ந்தனவா?

தமிழ்ப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டிருக்கிறது. கூடிவரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிக்கூட வசதிகள் - கூடுதலான வகுப்பறைகள், விளையாட்டுத் திடல்கள், கழிவறைகள், தேவைக்கு ஏற்ற பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போன்றவை, முன்னேற்பாடாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்பள்ளிக் கூடங்களைப் பற்றிய அவல ஓலங்கள் தவறாமல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. பெரும்பாலான தமிழ்ப்பள்ளிக்கூடக் கட்டடங்கள் பரிதாபத்துக்குரிய நிலையில் இருக்கின்றன. சுமார் 80 ஆண்டு காலமாக ஜாலான் செலாண்டரில் உள்ள துரோலி தோட்ட நிலத்தில் பாதி சிமெண்ட், பாதி பலகை கட்டடத்தில் மிகவும் மோசமான நிலையில் இயங்கி' வந்திருக்கிறது ஒரு தமிழ்ப்பள்ளி. (தமிழ்நேசன் 15.12.2006). மலேசியா சுதந்தரம் அடைந்து ஐம்பது ஆண்டுகளாகப் போகிறது. டத்தோஸ்ரீ சாமிவேலுவின் கடைக்கண் பட்டவுடன் அப்பள்ளிக்கு விடிவு காலம் பிறந்ததாம்.

இப்படியாக மஇகா தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் கடைக்கண் பட்டால்தான், மற்றவர்களின் கண்களுக்கு வாய்ப்பில்லை, தமிழ்ப்பள்ளிகளுக்கு விடிவு என்ற மாயை உருவாக்கப்பட்டு தமிழ்ப்பள்ளிகளை தமிழர்களே கட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிலையை மஇகாவினர் உண்டாக்கியுள்ளனர்.

அதே நேரத்தில் “புதிய கட்டிடங்களைக் கட்டுவது மற்றும் நடப்பு கட்டடங்களை சீரமைப்பது உள்பட நாடு முழுமையும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்தி வரும', என்று அரசாங்கத்திற்கு தமிழ்ப்பள்ளிகளின் மீது அக்கறை இருக்கிறது என்பதைக் காட்டிக் கொண்டார் டத்தோஸ்ரீ சாமிவேலு.

அரசாங்கத்தின் அக்கறைக்கு சான்று வழங்கிய அதே வாயால் பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்தை “எச்சிஎம் என்ஜீனியரிங்' என்ற பூமிபுத்ரா நிறுவனம் கட்டித்தந்ததாகக் கூறினார். (தமிழ் நேசன் 15.12.2006) அந்த நிறுவனம் கட்டித் தந்தது ஒன்று, இரண்டு அல்ல. “இந்திய சமுதாயத்திற்காக பள்ளிக் கட்டிடத்தை நிர்மாணிக்க எச்சிஎம் என்ஜீனியரிங் நிறுவனம் உதவுவது இது மூன்றாவது முறையாகும", என்றார் டத்தோஸ்ரீ சாமிவேலு. தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் இப்படிதான் தனியார் உதவியுடன் கட்டப்பட்டு வருகிறதா? தனியார் நிறுவனம் தமிழ்ப்பள்ளிக்கூடம் கட்டித்தருகிறது என்றால் அரசமைப்புச் சட்டம் விதி 12 (1)ன் கீழ் கட்டடம் கட்டித்தரவேண்டிய அரசாங்கத்தின் கடப்பாடு என்ன ஆயிற்று?

ஒரு தனியார் நிறுவனம் தமிழ்ப்பள்ளிக்கூடங்களை இலவசமாகக் கட்டிதருகிறது என்றால், அதன் பின்னனி என்ன? அமைச்சர் பொறுப்பில் இருக்கும் டத்தோஸ்ரீ சாமிவேலு ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து உதவிகள் பெறுவதற்கு இவரிடமிருந்து அந்நிறுவனம் பயன்கள் அடைந்திருக்க வேண்டும். அவ்வாறு ஏதேனும் நடந்திருக்குமானால் அது சலுகை காட்டுவதாகும். சட்டத்தில் அதன் நிலை என்ன?

சில தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் இங்கும் அங்கும் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் கருணையால் கட்டப் படுகின்றன, பழுது பார்க்கப்படுகின்றன. அவற்றை அரசாங்கம் மேற்கொள்வதாகக் கூறுகிறார். அடுத்த கணமே ஒரு காசு கூட செலவு செய்யாமல் கட்டடம் கட்டப்பட்டதாகக் கூறுகிறார். பிறகு கட்டடம் கட்டித் தந்த தனியார் நிறுவனங்களுக்கு நன்றி கூறுகிறார். ஏன் இந்த தகிடுதித்தங்கள்?

ஒன்பதாவது மலேசியத் திட்டத்தில் தமிழ் மற்றும் சீனப்பள்ளிக்கூடங்கள் கட்டப்படாது என்று கல்வி அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ நோ ஒமார் அறிவித்தார். இந்த அறிவிப்பால் ஏற்படப் போகும் சலசலப்பை உணர்த்த கல்வி அமைச்சர் நகைப்பிற்குறிய விளக்கம் தந்தார். இந்த விவகாரம் அவருடைய அதிகாரத்திற்கு உட்பட்டதால் துணை அமைச்சருக்கு அது குறித்து எதுவும் தெரியாது என்றார். இதனை மக்கள் நம்புவார்கள் என்பது அவரது நினைப்பாக இருக்கலாம்.

இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த டத்தோஸ்ரீ சாமிவேலு ஒன்பதாவது மலேசியத் திட்டத்தில் தமிழ் மற்றும் சீனப்பள்ளிக்கூடங்கள் கட்டும் பணிகள் இல்லாவிட்டாலும் “நாடு முழுவதும் தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளைக் கட்டுவதற்கு அரசாங்கம் தொடர்ந்து நிதி வழங்கி வர வேண்டும்" என்று இந்தப் பிரச்சனையை எப்படியாவது தனியார் நிறுவனங்களின் மூலம் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையில் பதிலளித்தார். அரசாங்கம் நிதி வழங்கும் என்று அமைச்சர் கூறவில்லை; நிதி வழங்கி வரவேண்டும்" என்று தனது விருப்பத்தைத்தான் தெரிவித்தார்.

பல ஆயிரக்கணக்கான கோடி வெள்ளியைச் செலவிடுவதற்கு பலத் திட்டங்களை ஒன்றிணைத்து ஐந்தாண்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப் படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு, வெற்றிக்கு கல்வி மிக அவசியம் என்று பேசாத அமைச்சர்கள் இல்லை.

ஆனால், தமிழ் மற்றும் சீன மொழிப்பள்ளிகளுக்கான அரசு நிதி ஒதுக்கீட்டில் இவ்வினங்களுக்கு ஏதோ பிச்சை இடுவதுபோல் நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு செய்வது அரசமைப்பு சட்டவிதி 12(1) ஐ மீறுவதாகும்.

எட்டு மற்றும் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டங்களில் தமிழ் மற்றும் சீனப்பள்ளிகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்பதை ஒப்புக் கொள்ளும் டத்தோஸ்ரீ சாமிவேலு, “இது வழக்கம்போல் இது இப்படிதான் இருக்கும்", என்று அரசின் வஞ்சகச் செயலுக்கு சப்பைக் கட்டு காட்டுகிறார். (தமிழ்நேசன் 25.09.2006).

எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்றாலும் “இறுதியில் நாங்கள் (அரசாங்கம்?) 21 புதிய தமிழ்ப்பள்ளிகளைக் கட்டிய வேலையில், 64 தமிழ்ப்பள்ளிகளையும் மறுசீரமைப்பு செய்தோம்", என்று அமைச்சர் உறுதியாகக் கூறுகிறார்.

21 புதிய (புத்தம் புதிய) தமிழ்ப்பள்ளிகள் (இக்கூற்று உண்மையா என்பதை பிறகு காண்போம்) எட்டாண்டுத் திட்டத்தில் முழுக்க, முழுக்க அரசாங்கப் பணத்தில் கட்டப்பட்டதா? அல்லது எச்சிஎம் எஞ்சீனியரிங் போன்ற தனியார் நிறுவனங்களிடமிருந்து கிடைத்த பிச்சையில் கட்டப்பட்டதா?

தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் இங்கும் அங்கும் கட்டப்படுகின்றன; மறுசீரமைப்பு செய்யப்படுகின்றன. அதை மறுப்பது முறையாகாது. டத்தோஸ்ரீ சாமிவேலு அதனை அரசாங்கப் பணத்தைக் கொண்டு செய்ய வேண்டும். அதுதான் முறை. அது அவரது கடமையும் கூட.

ஆனால் நடப்பதே வேறு என்பது டத்தோஸ்ரீ சாமிவேலுவின் உரைகளிலிருந்தே தெரிகிறது. தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கு அரசாங்கத்திடமிருந்து நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை, அல்லது தேவையான அளவிற்கு கிடைக்கவில்லை, என்பதை பகிரங்கிரமாக ஒப்புக் கொண்டால் அது அவரது நலன்களுக்கு உகந்ததாக இருக்காது என்பதால், அதே நேரத்தில் தமிழ்ப்பள்ளிகளில் ஏதேனும் நடக்காதிருந்தால் அது அவருடைய தலைமையத்துவத்திற்கு இழுக்கை ஏற்படுத்தக்கூடும் என்பதால் டத்தோஸ்ரீ சாமிவேலு இரு தரப்பையும் சமாளிக்கும் ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று கூறலாம். “Dato Sri, you bagi ini, kita boleh bagi itu" என்ற அடிப்படியில் தமிழ்ப்பள்ளிக்கூட நிர்மாண வேலைகள் நடக்கின்றன என்று கூறலாம். இல்லையேல், எச்சிஎம் என்ஜீனியரிங் நிறுவனம் ஏன் தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கு ஒருமுறை அல்ல, மூன்று முறை உதவ வேண்டும். நான்காவது முறைகூட உதவக்கூடும்.

இவ்வாறான செயலால் மஇகா தலைவருக்கு சங்கடமான நிலைமை ஏற்படக்கூடும். எப்போதும் சமாளித்துவிட முடியாது. இந்திய சமூகத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் அவப் பெயர் இன்னும் பிரபலமடையும். இவற்றை எல்லாம் விட பெரிய அபாயம்: தமிழ்ப்பள்ளிக்களுக்கு மான்யம் என்ற பெயரில் கிடைக்கும் அரசாங்கப் பிச்சை கூட நிறுத்தப்படலாம்.

21 புத்தம் புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டப்பட்டனவா?

எட்டாவது மலேசியத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற போதிலும் அத்திட்டக்காலத்தில் அரசாங்கம் “ 21 புதிய தமிழ்ப்பள்ளிகளைக் கட்டிய வேலையில், 64 தமிழ்ப்பள்ளிகளையும் மறு சீரமைப்பு" செய்ததாக கூறியிருக்கிறார். டத்தோஸ்ரீ சாமிவேலு (தமிழ்நேசன் 25.9.2006)

கட்டப்பட்ட 21 தமிழ்ப்பள்ளிகளும் புதியவை என்று மீண்டும் உறுதிப்படுத்தினார் டத்தோஸ்ரீ சாமிவேலு. “அந்த 21 தமிழ்ப்பள்ளிகளும் மறுசீரமைக்கப்பட்டவையல்ல. மாறாக புதியதாக கட்டப்பட்டவையே", என்று 21 புதிய தமிழ்ப்பள்ளிக் கூட கட்டடங்கள் தோன்றியிருப்பதை திட்டவட்டமாக தெளிவுபடுத்தினார் டத்தோஸ்ரீ சாமிவேலு. (தமிழ்நேசன் 27.9.2006)

மறுசீரமைப்பு செய்யப்பட்ட கட்டடம் என்றால் என்ன? கட்டப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்த, அல்லது பயன்படுத்தாமல் பழுதடைந்துவிட்ட கட்டடத்தை உடைத்து விட்டு வேறொன்றைக் கட்டுவது அல்லது தேவையான அளவிற்கு பழுதுபார்த்து, வேண்டிய வசதிகளை இணைத்து, பயன்படுத்துவதற்கு ஏற்றதாக ஆக்கப்பட்ட கட்டடமே மறுசீரமைப்பு செய்யப்பட்ட கட்டடமாகும். அவ்வாறு மறுசீரமைப்பு செய்யப்பட்ட கட்டடத்தின் எண்ணிக்கையில் மாற்றமிருக்காது. பத்து கட்டடங்கள் இருக்கின்றன. அவற்றில் மூன்று கட்டடங்கள் பழுதடைந்து விட்டன. அவற்றை மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின் மொத்தக் கட்டடங்கள் பத்தாகத்தான் இருக்குமேயன்றி பதிமூன்றாகாது.

புதியக்கட்டடம் என்பது புத்தம் புதிதாக கட்டப்படுபவையே புதிய கட்டடமாகும். பத்து கட்டடங்கள் இருக்கின்றன. இன்னும் மூன்று புதிய கட்டடங்களைக் கட்டினால் மொத்த கட்டடங்களின் எண்ணிக்கை பதிமூன்றாக உயரும்.

“எட்டாவது மலேசியத் திட்டத்தின்கீழ் 21 புதிய பள்ளிகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது என்று மஇகா தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு கூறியிருப்பது தவறான தகவலாகும்", என்று மாமன்னரின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.

அவ்வாறு 21 புதிய தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டிருப்பதை தகுந்த ஆதாரத்துடன் நிருபிக்குமாறு டத்தோஸ்ரீ சாமிவேலுவை லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.

டத்தோஸ்ரீ சாமிவேலு 21 புதிய தமிழ்ப்பள்ளிகள் எட்டாவது மலேசியத் திட்டத்திக் கீழ் கட்டப்பட்டிருந்ததை நிருபித்தால் லிம் கிட் சியாங் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதற்குத் தயார் என்று கூறினார்.

“புதியத் தமிழ்ப்பள்ளிகள் என்பது ஏற்கனவே இருந்தத் தமிழ்ப்பள்ளிக்கு மாற்றாக நிர்மாணிக்ப் பட்டதாக இருக்கக்கூடாது. மாறாக முற்றிலும் புதிய பள்ளியாக இருக்க வேண்டும்" என்று புதிய தமிழ்ப்பள்ளிக் கட்டங்கள் என்றால் என்ன என்பதுபற்றி விளக்கமாக கூறினார் லிம் கிட் சியாங்.

டத்தோஸ்ரீ சாமிவேலுவின் அறிவிப்பு குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த லிம் கிட் சியாங், “அவரது கூற்று சரியானது அல்ல என்பது ஏற்கனவே எனக்குத் தெரியும். 2001ஆம் ஆண்டில் 88 ஆயிரத்து 810 ஆக இருந்த தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 2006ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 142 ஆக அதிகரித் திருக்கின்ற நிலையில் 2000ஆம் ஆண்டில் 526 ஆக இருந்த தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை 2006ஆம் ஆண்டில் 523 ஆக வீழ்ச்சிக் கண்டிருக்கிறது, இந்நிலையில் எட்டாவது மலேசியத் திட்டத்தின் கீழ் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதுதான் உண்மை,"என்றார்.

ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றப்படுவது எப்படி முற்றிலும் புதிய பள்ளியாகக் கருதப்படும் என்று வினவிய லிம் கிட் சியாங், மலேசிய சீனர் சங்க கல்வி வட்டாரங்கள் இவ்விசயத்தைத் தெளிவுப் படுத்தி இருக்கின்றன என்று லிம் கூறினார்.

புதிய தமிழ்ப்பள்ளிக்கூடக் கட்டடங்கள் குறித்து லிம் கிட் சியாங் அளித்த விளக்கத்தை டத்தோஸ்ரீ சாமிவேலு மறுக்கவில்லை, எதிர்க்கவில்லை; ஏற்றுக் கொண்டார்.

“அந்த 21 தமிழ்ப்பள்ளிகளும் மறுசீரமைக்கப் பட்டவையல்ல. மாறாக புதியதாக கட்டப்பட்டவையே. எட்டாவது மலேசியத் திட்டத்தின் கீழ், இந்நாட்டில் 21 புதிய தமிழ்ப்பள்ளிகள் நிர்மாணிக்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது", ( தமிழ்நேசன் 27.09.2006) என்று லிம் கிட் சியாங்கிற்குத் திட்டவட்டமாக பதில் கூறினார் டத்தோஸ்ரீ சாமிவேலு.

ஆனால் அந்தப் பட்டியலைத் தான் லிம் கிட் சியாங்கிடம் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று டத்தோஸ்ரீ சாமிவேலு கூறினார். இவ்வாறு கூறுவது அரசியல் நாகரீகமற்ற செயல் என்றாலும் அது டத்தோஸ்ரீ சாமிவேலுவின் தனிக்குணமாகும். அரசியல் நாகரீகம் படைத்த நாடுகளில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் “Prime Minister in waitnig" என்று அழைக்கப்படுகிறார். நாடாளுமன்ற எதிர்க்கட்சியை “Government in waiting" என்பார்கள். அந்த நிலையை நாம் அடைவதற்கு இன்னும் பல நூறாண்டுகள் காத்திருக்க வேண்டும் போல் தோன்றுகிறது.

அந்தப்பட்டியலை லிம் கிட் சியாங்கிடம் வழங்க மறுத்து விட்டாலும் செய்தியாளர்களிடம் வழங்குவேன் என்று கூறிய டத்தோஸ்ரீ சாமிவேலு, அப்பட்டியலை வெளியிட்டார்.

அப்பட்டியலில் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டவாறு, ஆதாரம் உண்டு, என்று டத்தோஸ்ரீ சாமிவேலு கூறியவாறு, எட்டாவது மலேசியத் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்ட 21 தமிழ்ப்பள்ளிகள் காணப்படவில்லை.

“அந்த 21 தமிழ்ப்பள்ளிகளும் மறுசீரமைக்கப் பட்டவையல்ல. மாறாக புதியதாக கட்டப்பட்டவைய" என்று அடித்துக் கூறிய டத்தோஸ்ரீ சாமிவேலு அவர் வெளியிட்ட பட்டியலின் தலைப்பில்கூட 21 புதிய தமிழ்ப்பள்ளிகள் என்று கூறவில்லை.

“எட்டாவது மலேசியத் திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்யப்பட்ட 37 தமிழ்ப்பள்ளிகள்" என்பதுதான் தலைப்பு. அதன் கீழ் முழு அரசு உதவி பெற்றவை என்று 21 தமிழ்ப்பள்ளிகளின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள 21 தமிழ்ப்பள்ளிக்கூடங்களும் “மாறாக புதியதாக கட்டப்பட்டவையே" அல்ல. “இந்நாட்டில் 21 புதிய தமிழ்ப்பள்ளிகள் நிர்மாணிக்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது" என்று கொக்கரித்த டத்தோஸ்ரீ சாமிவேலு மறுநிர்மாணிப்பு செய்யப்பட்ட முழு அரசு உதவி பெற்ற 21 தமிழ்ப்பள்ளிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டு, “ஒரு பள்ளியை அகற்றி வேறு இடத்தில் கட்டும்போது அது புதிய அடிப்படை வசதிகளைக் கொண்ட புதிய பள்ளியாகத்தான் கருதப்படும்" என்று இப்போது கெக்கெரிக்கிறார்.

‘மேதாவி' லிம் கிட் சியாங், 21 புதிய தமிழ்ப்பள்ளிகள் எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன என்ற மஇகா தலைவரின் கூற்றை ஆதாரப்பூர்வமாக முழுப்பட்டியலுடன் நிருபிக்க வேண்டும் என்று சவால்விடவில்லை என்றால் இந்த ‘வெற்றாவி" டத்தோஸ்ரீ சாமிவேலு விட்ட கதை உண்மையிலும் உண்மையாக்கப்பட்டு விழா எடுத்திருப்பார்கள்.

மேலும் 14 புதிய தமிழ்ப்பள்ளிகள்

எட்டாவது திட்டத்தில் 21 புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டி நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை 526 + 21 என்று எண்ண வைத்துவிட்ட “வெற்றாவி" டத்தோஸ்ரீ சாமிவேலு ஒன்பதாவது மலேசிய திட்டத்தில் “நாடு முழுவதும் 14 புதிய தமிழ்ப்பள்ளிகளை நிர்மாணிக்குமாறு மஇகா விரைவில் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யும்" என்ற அறிவிப்பும் செய்துள்ளார். (தமிழ்நேசன் 25.09.2006)

அவர் அக்டோபர் 2ஆம் நாள் 2006 ஆம் ஆண்டில் வெளியிட்ட பட்டியலில் “ஒன்பதாவது மலேசியத் திட்டத்தின் கீழ் மறுநிர்மாணிப்பு செய்யப்படும் 38 தமிழ்ப்பள்ளிகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர 14 புதிய தமிழ்ப்பள்ளிகளின் பெயர் பட்டியலை வெளியிடவில்லை.

ஆக மொத்தத்தில் 526 + 21 + 14 தமிழ்ப்பள்ளிகளின் இந்த நாட்டில் காணப்படுமா? அல்லது இன்று இருப்பதாகக் கூறப்படும் 523 தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறையப் போகிறதா?

இறுதியான குறிக்கோள்

தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து இறுதியில் தமிழ்ப்பள்ளிகள் இல்லாமல் போவதற்கான இறுதித் திட்டம் தான் “தூரநோக்குப் பள்ளிகள்". அதுதான் மலாய் ஆட்சியாளர் களின் திட்டம். அத்திட்டம் வெற்றிபெற தெரிந்தோ, தெரியாமலோ ஆதரவு கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த “வெற்றாவி"க் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

அந்தப் போக்கைத் தடுத்து நிறுத்தி தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சியை உறுதிசெய்து அவற்றை நமது கலாசாரத்தின் அடித்தளமாக தொடர்ந்து இருக்க “மேதாவி"கள் தொடர்ந்து போராட வேண்டும். தூர நோக்குப்பள்ளி தமிழ்க்கல்வியின், தமிழ் கலாசாரத்தின், சமாதியாகப் போகிறது என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

நன்றி : செம்பருத்தி

Read more...

தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் - கா.ஆறுமுகம்

அரசாங்கம் ஆரம்பக்கல்வி மீது கொண்டுள்ள புதிய அணுகுமுறை ஆரம்பத் தமிழ்ப்பள்ளிகளை வெகுவாகப் பாதிக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது.

நமது தமிழ்ப்பள்ளிகளின் தேவையை உறுதிப்படுத்த வேண்டுமானால், நாம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழ்ப்பள்ளிகள் இந்நாட்டின் தேவை என்பதற்கு நம்மிடையே பலத்த ஆதரவு உள்ளது. ஆனால், அதைப் பற்றிய சமூக, அரசியல், பொருளாதார விவாதங்கள் நடைபெறுவதில்லை.

தமிழ்க்கல்வி என்பதற்கு ஒரு உணர்ச்சிவடிவான தோற்றமே உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஆய்வுகளைக் கிரகித்து அதற்குச் செயல் வடிவம் கொடுக்கும் காலம் வந்துவிட்டதாகக் கருதுகிறோம்.


2006ஆம் ஆண்டுமுதல் அரசாங்கம் முன்னிறுத்திய அமுலாக்கக் கொள்கைகளைப் பார்ப்போம்:

1. கணிதம், அறிவியல் ஆங்கில மொழியில் போதிக்கப்படுகிறது.

2. தேசியப் பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும்).

3. ஒன்பதாவது மலேசியத் திட்டத்தில் புதிய தமிழ்ப் பள்ளிகள் கிடையாது.

4. தேசிய ஆரம்பப்பள்ளிகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்கும்.

5. தமிழ்ப்பள்ளிகளுக்குத் தேவை என்ற வகையில் ஆசிரியர் பயிற்சிகள் இல்லை.

6. தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதி வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அந்த ஆறு கொள்கைகளும் தமிழ்ப்பள்ளிகளை வெகுவாக பாதிக்கும். எவ்வகையான பாதிப்புகள் என்பதைக் காண்போம்.

1. கணிதம், அறிவியல் ஆங்கில மொழியில் உள்ளதால், வறுமை நிலையில் உள்ள குழந்தைகள் ஆங்கிலப் புலமையற்ற நிலையில் இந்தப் பாடங்களை முறையாக கற்க இயலாது. அதனால் கணிதம், அறிவியல் அறிவு அவர்களுக்கு ஆரம்ப நிலையில் முழுமையாகக் கிடைக்காது.

2. கணிதம், அறிவியல் பாடங்களைப் போதிக்க தமிழ்மொழி தெரியாத மற்றமொழி ஆசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பப்படுவர்.

3. தமிழ் மொழிக்காகப் பயிற்சிபெறும் ஆசிரியர்கள் தேசியப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவர். அதே நிலையில், தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உண்டாகும். இதைத் தவிர்க்க பிற இன ஆசிரியர்கள் அனுப்பப்படுவர். ஒட்டு மொத்தத்தில் தமிழ்க்கல்வியை அடிப்படையாக வைத்து ஆசிரியராக உருவாக்குபவர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறையும்.

4. தேசியப்பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக இருப்பினும், அதனால் பலன்களை எதிர்பார்க்க இயலாது. மொழியின் தேவை, கட்டாயம் என்ற கோட்பாட்டை பொறுத்தது. தேசியப்பள்ளிகளின் கொள்கையில் தமிழ்மொழி கட்டாய மொழியாக ஆக்கப்படும் நிலை இல்லை. மேலும், ‘தேவை’ மொழியாக பிற மொழிகள் இருப்பதால், தமிழ்மொழி வளர இவ்வழி சிறந்தது கிடையாது.

5. தமிழ்ப்பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை ஈடுகட்ட புதிய வகுப்பறைகளும், புதிய பள்ளிகளும் தேவைப்படுகின்றன. அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை கட்டுப்படுத்துவதால், இடப்பற்றாக்குறை உண்டாகிறது. பல பள்ளிகளில் ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கைக் கொண்ட மாணவர்கள் சேர்ந்த பிறகு, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தேசியப்பள்ளியில் பதியும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். தமிழ்க்கல்வி பயிலும் வாய்ப்பை பல மாணவர்கள் இழந்து விடுகின்றார்கள்.

6. இடப்பற்றாக்கு¨யைக் கொண்டுள்ள சில பள்ளிகள், தாங்களாகவே நிதி திரட்டி பள்ளியை சீரமைக்கவும் முற்படுகின்றனர். இது சுயதேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு நடவடிக்கை போல தோன்றினாலும், இது ஓர் உகந்த நடவடிக்கையாகக் கொள்ள முடியாது. காரணம், பள்ளிக்கூடம் கட்டுவது அரசாங்கத்தின் கடமை. பல ஆயிரம் கோடிகள் இதற்காக ஒதுக்கப்படுகின்றன. இப்படி ஒதுக்கப்படும் அரசாங்க நிதி தமிழ்ப்பள்ளிகளுக்குக் கிடைக்கும் வகையில் வழி செய்வதை விடுத்து, நம்மை நாமே சுரண்டிக்கொள்வது அறிவு சார்ந்த செயலன்று. மேலும், அப்படியே கல்விக்காக நாம் பணத்தை செலவிட வேண்டுமானால், அதை நேரிடையாக குழந்தைகளின் திறன்களை வளர்க்கும் வகைகளில் செய்வதுதான் சிறந்தது.

7. அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டு முறைகளிலும் முரண்பாடு உள்ளதாகத் தோன்றுகிறது. நாடாளுமன்ற விவாதங்களின்படி பார்க்கையில், ஒன்பதாவது மலேசியத் திட்டத்தின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம 56.1 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளாதாகத் தெரிகிறது (Parlimentary Hansard 12.09.2006, பக்கம் 107). 2006 முதல் 2010 வரை இதைப் பிரித்தால், ஒவ்வொரு வருடத்திற்கும் சுமார் ரிம 11.2 மில்லியன் (ரிம 112 லட்சம்) கிடைக்க வேண்டும். 2006இல் இந்தத் தொகையை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், கல்வி அமைச்சின் ஒதுக்கீடு ரிம 5 லட்சத்திற்கும் குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது 34 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ரிம 489,000 கல்வி அமைச்சு ஒதுக்கீடு செய்திருப்பதாக, டத்தோஸ்ரீ சாமிவேலுவின் கூற்றை பத்திரிகைகள் வெளியிட்டன (NST, 15.12.2006, பக்கம் 21). ஒதுக்கப்பட்ட இந்தத் தொகையில் 5 விழுக்காடு கூட இல்லை. அரசாங்கம் எதனால் இப்படிச் செய்கிறது என்பதும் புரியவில்லை.

8. ஆரம்பக்காலத்தில் தோட்டப்பள்ளிகளாக இருந்தவை தற்போது நாடு காணும் வளர்ச்சியால் மாற்றங்கள் ஏற்பட்டு நகர்ப்புற பள்ளிகளாகவும் கூட்டுப்பள்ளிகளாகவும் உருவாகி வருகின்றன. பல தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றன. இதுபோன்ற பள்ளிகளை இடமாற்றம் செய்வதை நாம் வரவேற்கலாம். ஆனால், அவை ஒரு முழுமைபெற்ற அரசாங்க பள்ளியாக உருவாக்கம் காண வேண்டும். அதை விடுத்து, நிலத்தையும், போதுமான வசதிகளற்ற வகையில் பள்ளிகளைக் கட்டி அதை மக்களின் தலையில் கட்டுவதை ஏற்றுக்கொள்ளக் கூடாது.

9. தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளிகள் என்பவை தற்போது புதிய கோணத்தில் காட்டப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக உண்டான தமிழ்ப்பள்ளிகளின் மீதான மறுமலர்ச்சி மிகவும் பாராட்டுக்குரியது. நிலைமை இப்படி இருக்கையில், நடைமுறை அரசாங்கத்தின் போக்கு நமது நம்பிக்கையில் உலை வைப்பது போல் உள்ளது. தமிழ்க்கல்விகளில் பயின்ற சமூகம்தான் இதுநாள் வரை தேசிய முன்னணி ஆட்சியை 70 விழுக்காடு சுத்தமான வாக்குகளை எல்லா தேர்தல்களிலும் அளித்து ஆதரவு காட்டி வருகிறது. நமது நாட்டுப்பற்றையும் விசுவாசத்தையும் இதைவிட வேறுவகையில் எப்படிக் காட்டுவது. ஆனால், பிரதிபலனாக நாம் நமது அடிப்படை உரிமையான ஆரம்பக்கல்வியைக் கூட காக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

10. தமிழ்க்கல்வி என்பதே நமக்கு ஒரு பண்பாட்டு அரணாக இந்நாட்டில் நிலவும். அப்படிப்பட்ட சூழலில் நமது சமூகம் தன்னிச்சையான வகையில் சமூக, பொருளாதார, பண்பாட்டை உலக அளவில் ஓர் உயர்ந்த இடத்திற்கு இட்டுச்செல்ல முடியும். இதைச் செய்யத்தவறினால், இந்நாட்டில் வாழும் தமிழர்கள், மோசமான பண்பாட்டுச்சீரழிவிற்குத் தள்ளப்பட்டு, மேலைநாடுகளில் வாழும் கறுப்பின மக்களின் கலாச்சாரத்திற்கு ஒப்பாக உருவாக்கப்பட்டு விடுவார்கள்.

11.தற்போது உண்டாகியிருக்கும் ஆபத்தை நாம் உணர வேண்டும். நமது உடனடி நடவடிக்கை மேற்சொன்னவற்றைப் பற்றிய விவாதமும் அவை சார்புடைய உண்மைகளையும் உணர்வதாகும்.

இந்தப் பதிவையும் காண்க : ஏன் என் பிள்ளையை தமிழ்ப் பள்ளியில் சேர்க்க வேண்டும்?

Read more...

ஐந்து தலைவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

>> Tuesday, February 26, 2008

உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் (ISA) கீழ் கைது செய்யப்பட்டு, கமுண்டிங்கில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்து இண்டிராப் தலைவர்கள் தங்களை விடுவிக்குமாறு செய்து கொண்ட மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று காலையில் நிராகரித்தது

மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஜைனால் அஸ்மான் அப்துல் அஜிஸ் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் விடுத்த தடுப்புக்காவல் ஆணை செல்லத்தக்கது என்றும் அந்த ஆணை உள்நாட்டு பாதுகாப்பு சட்ட வரம்புகளுக்கு உட்பட்டதே என்றும் தனது தீர்ப்பில் கூறினார்.

பி.உதயகுமார், எம். மனோகரன், டி. வசந்தகுமார், வி. கணபதி ராவ் மற்றும் ஆர். கெங்காதரன் ஆகிய ஐவரே டிசம்பர் 13ஆம் நாள் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களாவர்.

இந்த ஐவரும் தாங்கள் தடுப்புகாவலில் வைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது என்று தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் தாங்கள் கைது செய்யப்படுவதற்கு கொடுக்கப்பட்ட காரணங்கள் தெளிவாக இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

மனுதாரர்களும் அரசு தரப்பினரும் தாக்கல் செய்திருந்த எழுத்துப் பூர்வமான சாட்சியங்களை தான் கவனத்தில் கொண்டதாக நீதிபதி கூறினார். ஆனால், அச்சாட்சியங்கள் எதுவும் பின்பற்ற வேண்டிய சட்டவிதிகள் மீறப்பட்டிருக்கின்றன என்று காட்டவில்லை என்று கூறினார்.

இண்ராப் ஆதரவாளர்கள்

இந்த வழக்கில் நீதிபதியின் தீர்ப்பை கேட்பதற்கு நீதிமன்றத்தில் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். மனுதாரர்களின் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

தீர்ப்பினால் ஏமாற்றமடைந்த சுமார் 300 இண்ராப் ஆதரவாளர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் நின்று “வாழ்க இண்ராப்”, “ வாழ்க மக்கள் சக்தி “ என்று கோஷமிட்டனர்.

இந்த ஐந்து தடுப்புகாவல் கைதிகளின் வழக்கறிஞர்களான கர்பால் சிங் மற்றும் கோபிந்த் சிங் டியோ பெடால் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யப்போவதாக அங்கு குழுமியிருந்தவர்களிடம் கூறினார்கள்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கின்றோம், ஆனால் அந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கவில்லை; ஆகவே நீதி கிடைக்கும் வரையில் போராடப்போவதாக சூளுரைத்தார் வழக்கறிஞர் கோபிந்த் சிங்.

நன்றி : மலேசியா இன்று

Read more...

16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் ஆறு)

>> Monday, February 25, 2008

சற்று நேரம் மண்டபத்தின் வெளியே நின்றுக் கொண்டிருந்தோம். பிறகு அம்மண்டபத்தின் உள்ளிருந்து ஒரு காவல்துறை அதிகாரி (தமிழர்) வெளியே வந்தார். வெளிவந்ததும் எங்களைப் பார்த்து,

"சரிங்க.. இப்ப வந்து ஒரு ஒரு ஆளா பேர கூப்டுவேன், அவங்க வந்து முன்னுக்கு நில்லுங்க..சரியா..."

கையில் எங்கள் அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பெயராக வாசித்தார். முதலில் 10 பேர்களின் பெயர் வாசிக்கப்பட்டு அவர்கள் மண்டபத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். என் பெயர் அழைக்கப்படவில்லை, எனவே வெளியிலிருந்து உள்ளே என்ன நடக்கிறது எனக் கண்காணித்தேன். வரிசையாக பத்து மேசைகள் அடுக்கப்பட்டு ஒவ்வொரு மேசையிலும் ஒரு காவல்துறை அதிகாரி நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார். உள்ளேச் சென்றவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மேசையின் எதிர்ப்புறம் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்துக் கொள்ளப் பணிக்கப்பட்டார்கள். பின் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் பேசுவது விளங்காததனால் என் பார்வையை அங்கிருந்து அகற்றி மறுபுறம் மக்கள் சக்தி கூட்டத்தினிடம் பரவ விட்டேன். அங்கு அனைவரும் ஒரு நீண்ட கூடாரத்தினுள் அமர்ந்துக் கொண்டு பார்வையை எங்கள் பக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.



சற்று நேரத்தில் மீண்டும் அதே காவல்துறை அதிகாரி அடுத்த பத்து பேர்களை வாசித்து அவரவர்களுடைய அடையாள அட்டையைக் கொடுத்தார். எனக்கும் கிடைத்தது. அதன் பின் அனைவரையும் மண்டபத்தினுள் அழைத்துச் சென்ற அவர் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் எங்களை அமரச் சொன்னார். நான் ஒரு காவல் துறை அதிகாரி முன் அமர்ந்தேன். என் அடையாள அட்டையை அந்த அதிகாரியிடம் நீட்டினேன். அவர் ஒரு வெள்ளைத் தாளில் என் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை எழுதிக் கொண்டிருந்தார்.



சுற்றி முற்றிப் பார்த்தேன். அனைத்து அதிகாரிகளின் முகங்களிலும் புன்னைகை இருந்தது. எங்களை தடுத்து வைத்த சந்தோஷக் கலையோ என்னவோ, ஆனால் அனைவரும் மரியாதையாக கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சற்று நெரம் கழித்து என் முன்னே அமர்ந்திருந்த அதிகாரி கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.

"இன்சேக் டாரி மானா?"

"பினேங்"

" டாதாங் மாச்சாம் மானா..?"

"பஸ்"

"ஓகே, கெர்ஜா அபா"

"குரு ஸ்கோலா"

அந்த அதிகாரியின் முகத்தில் சற்று நேரம் ஈயாடவில்லை. அடுத்து இன்னும் மரியாதையாகப் பலக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே அனைத்தையும் வெள்ளைத் தாளில் குறித்துக் கொண்டார்.

அங்குமிங்கும் மண்டோர் வேலைப் புரிந்துக் கொண்டிருந்த அதே இந்திய காவல் துறை அதிகாரியை அழைத்தேன்.

"அண்ணே, கொஞ்ச நேரம் இங்க வாங்கண்ணே..."

" கொஞ்ச நேரம் இருங்க.."

எதோ வேளையில் மும்முரமாக இருந்தார், பின்பு என்னிடம் நெருங்கினார்..

"சொல்லுங்க..."

இல்லண்ணே, இப்ப இவங்க எங்களோட டீதேல்ஸ்லாம் எடுக்குறாங்களே, இதனால ஏதாச்சும் வேலைக்கு பாதிப்பு வருமா..?"

"அதுலாம் ஒன்னுமில..கவலவேணாம்.. சும்மா ஒரு ப்ரோசீடியருக்குதான் எழுதுறாங்க..ஓகே.." எனக் கூறிவிட்டு மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார்.

விசாரணை முடிந்து எங்களை வெளியே அனுப்பினார்கள், நாங்கள் அனைவரும் சற்று நேரம் மண்டபத்தின் வெளியே காத்திருந்தோம். அடுத்த குழு உள்ளே விசாரிக்க அழைத்துச் செல்லப்பட்டனர். வெளியிலிருந்து உள்ளே என்ன நடக்கிறது என எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தோம். சற்று நேரம் கழித்து விஜய் என்கிற இந்திய அதிகாரி மண்டபத்திலிருந்து வெளியெ வந்தார். எங்களைப் பார்த்து,

"சரிங்க, இங்க யாரும் நிக்க வேணாம், யாருலாம் உள்ளுக்கு போய்டிங்களோ தயவு செஞ்சி அந்த டெண்ட் கிட்ட போயி வேட் பண்ணுங்க.. இங்க இப்டி கூட்டமா நின்னா அப்புறம் உங்களுக்குதான் பிரச்சனை.. போங்க.."




எனக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் நாங்கள் யாரும் மசியவில்லை. அங்கேயே நின்றுக் கொண்டு மண்டபத்தினுள் என்ன நடக்கிறது என்றுப் பார்த்துக் கொண்டிருந்தோம். சற்று நேரம் கழித்து எங்கள் கூட்டத்திலொருவர்,

"ஏ, நம்ம பஸ்ச செக் பண்ராணுங்க... பேக்ல சட்டைலாம் இருக்கு...!!"

உடனே வேலன்,

"நான் ஃபேஸ் மாஸ்க், கையுறை எல்ல வெச்சிருக்கேனே"

அச்சமயம் எங்கள் பார்வை முழுதும் எங்கள் பேருந்து மீதே இருந்தது. பேருந்தினுள் இரு காவல் துறை அதிகாரிகள், எங்களுடைய பொருட்களை அலசி ஆராய்வது தெரிந்தது. சற்று நேரம் கழித்து பேருந்தினுள் இருந்த அனைவருடைய துணிப்பைகளையும் எடுத்துக் கொண்டு அதிகாரிகள் மண்டபத்தினுள் நுழைந்தனர்.

அப்பொழுது கூட்டத்திலிருந்த ஒருவர்,

" கேட்டா, அது நம்மலோட ஜாமனுங்க இல்லேனு சொல்லிருங்க..ஓகே.. ரெண்டு பஸ்ல வந்தோம்..ஜாமானுங்க மாறி மிக்ஸ் ஆயிபோச்சினு சொல்லிருங்க..."



போராட்டம் தொடரும்...

அத்தியாயம் ஆறு முற்றும்...

Read more...

சாமிவேலு ப்லா..ப்லா..ப்லா.. பகுதி 2

>> Sunday, February 24, 2008



"சிகாலாங் சாமி சுலா ஞாஞோக் லூ தாவ் கா.....! டியா சென்டிரி தாக் தாவ் மாவ் சாகாப் ஆபா.. தேங்கோக் கிர்தாஸ் லாகி... லியா இங்காட் சாமா கீத்தா போடோ ஆ...?! பீ...லா.....!!"

இப்படி ஒரு சீனன் உங்களைப் பார்த்து துப்புகிறான்.. மலேசிய இந்திய மக்களுக்கு இழைக்கப்படிருக்கும் கொடுமைகள் பாவம் ஒரு சீனருக்குத் தெரிகிறது... சாமி இது தேவையா...?

முதலில் மைக்கா ஓல்டிங்ஸ் விவகாரத்தைப் பற்றி சொல்லுங்களேன்..

"சாமி...? சாமி...?

???????????........

"எங்க ஆள காணோம்..?!!"

"ஓ.! ஓடிட்டாரா.."

இந்தக் கேள்விக்கு இப்படியே ஓடி ஒளிந்துக் கொண்டிருந்தால் மக்களின் பணம் எப்பொழுது திரும்பக் கிடைப்பது? முதலை வாயில் புகுந்த கதைதானா?!

சொல்லுங்க சாமி...

Read more...

'மலேசியா இன்று' உதயமானது..



தமிழ் இணைய வாசகர்களுக்கு ஒரு நற்செய்தி..!

தமிழுக்கு மீண்டும் இணையத்தில் மணிமகுடம் சூட்டப்பட்ட நாளிது..!

இனி மலேசியாக் கினி செய்திகள் உங்களுக்கு தமிழில் விருந்தளிக்கக் காத்திருக்கின்றன. இன்றையக் காலக்கட்டத்தில் தமிழுக்கு அதிக மவுசு ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் வாசகர்கள் அதிகம் பெருகியிருப்பதாலும் மலேசியா கினி மற்றும் செம்பருத்தி இணைந்து 'மலேசியா இன்று' என்ற அகப்பக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள். தக்க நேரத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சி என்றே இதனைக் கூறலாம்.

இத்தளம் குறித்து அதன் ஆசிரியர் ஜீவி காத்தையா அவர்களிடம் வினவிய பொழுது, இத்தளம் மலேசியாக் கினியில் வெளிவரும் செய்திகளை மட்டுமல்லாமல், நாட்டில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி செய்திகளும் அதிகம் வெளியிடப்படும் எனக் கூறினார்.

"இணையமும் கைபேசிகளும் உலவும் இந்த யுகத்தில், நாட்டில் நடக்கும் பல விஷயங்கள் இனி இந்திய சமுதாயத்திற்கு வெகு விரைவில் சென்று அடையும் என்பதில் மகிழ்ச்சி " என்று 'மலேசியா இன்று' வெளியீட்டாளர் மற்றும் செம்பருத்தி இதழின் பிரதிநிதியான கா. ஆறுமுகம் தெரிவித்தார்.

25 நவம்பர் நிகழ்விற்குப் பிறகு பல வாசகர்களிடமிருந்து அதிகமான கடிதங்களும் குறுந்தகவல்களும் மலேசியா கினி தமிழில் இடம்பெற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டன. இன்று நான்கு மொழிகளிலும் மலேசியா கினி இடம் பெறுவது தனது வாசகர் வட்டாரத்தைப் பெருக்குவதுடன், நாட்டின் நிகழ்வுகள் மக்களை எளிதாக சென்று அடையும்" என மலேசியா கினியின் பிரதான ஆசிரியர் ஸ்டீவன் கான் தெரிவித்தார்.

தமிழ் வாசகர்களே, தமிழால் படிப்போம், தமிழால் கருத்து தெரிவிப்போம், தமிழை தொடர்ந்து இணையம் என்னும் சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்ப்போம்..

நம் ஓட்டு என்றும் தமிழுக்குத்தான்...!

'மலேசியா இன்று' தளத்திற்குச் செல்ல இணைய இணைப்பைச் சுட்டுங்கள் : மலேசியா இன்று

குறிப்பு : இனி மலாய் மொழியில் வெளிவரும் மலேசியா கினி செய்திகளை இலவசமாக வாசகர்கள் படிக்கலாம்.

Read more...

மக்கள் சக்தி கருத்தரங்கம், பாத்தாங் மலாக்கா

பாத்தாங் மலாக்காவில் கடந்த 22-ஆம் திகதி மக்கள் சக்தி கருத்தரங்கம் நடைப்பெற்றது. அண்மையில் ரோஜா மலர்களைச் சமர்ப்பிக்கச் சென்று சிறைவாசம் சென்ற கல்வி இலாகாவின் முன்னாள் அதிகாரி, மற்றும் மலாக்காவின் இந்து உரிமைப் பணிப்படையின் ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணன் அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

பகுதி 1



பகுதி 2



பகுதி 3



பகுதி 4



பகுதி 5



பகுதி 6



நன்றி : மலாக்கா நிருபர் திரு.கலையரசு (srivishnu80@yahoo.com)

போராட்டம் தொடரும்...

Read more...

பாக் லா, சாமிவேலு ப்லா, ப்லா, ப்லா...

>> Saturday, February 23, 2008

சிரிப்பை உதிர வைத்து சிந்தனையை தட்டியெழுப்பும் பாடல்.. :) ஏலன் பரேரா, இன்டி ராஜன் வழங்கும் அட்டகாசமான பாடல் உங்களுக்கு விருந்தாகட்டும்.. ஹா..ஹா..ஹா..



லிங்கம்.. கொர்ரெக்ட்... கொர்ரெக்ட்..கொர்ரெக்ட்..



நன்றி : காமெடி கோர்ட்

Read more...

இன்றைய பதிவிறக்கம்.. கல்வி உபகாரச் சம்பளம்

ஷெல் நிறுவனம் உள்நாட்டு கல்விசார் நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்க முன்வந்துள்ளது. இதன் விளம்பரம் இன்னும் சில வாரங்களில் வெளிவரும் எனவும், முன்கூட்டியே நமக்குத் தகவல் கிடைத்துள்ளதால் மலேசிய இந்திய மாணவர்கள் இக்கல்வி உபகாரச் சம்பளத்திற்கு முந்திக் கொண்டு, இவ்வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். குறிப்பிட்ட சிலத் துறைகளுக்கே இந்த உபகாரச் சம்பளங்கள் வழங்கப்படுகிறது. 31-ஆம் திகதி மார்ச் மாதம் விண்ணப்பத்திற்கான இறுதி நாள். மேலும் தகவல்களுக்கு இந்த விளம்பரத்தைச் சுட்டவும் :

கல்வி உபகாரச் சம்பளம்

Read more...

16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் ஐந்து)

தூரத்திலிருந்தே ஒரு காவல்துறை அதிகாரி எங்கள் பேருந்தை நோக்கிக் கைக்காட்டி பிற அதிகாரிகளிடம் ஏதோ கூறுவது எங்களுக்கு தென்பட்டது.

"போச்சிடா..பாத்துட்டானுங்க..! கண்டிப்பா நிப்பாட்டுவானுங்க.." இப்படி ஒருவர் கூற, இன்னொருவர்..

"கை காட்டுறான்..கை காட்டுறான்.. நிக்கச் சொல்றான்..!"

பேருந்தை ஓரங்கட்ட கையசைக்கப்பட்டது. பேருந்தும் சாலையோரத்தில் ஓரங்கட்டி நின்றது.

" பெகி மானா..!?

பேருந்து ஓட்டுநர் பதிலளித்தார்..

" பெகி கோயில், செம்பாயாங்..."

காவல்துறையினர் பேருந்தை சற்று நேரம் நோட்டமிட்டனர்.

" புகா பிந்து..! "

பேருந்து கதவு திறக்கப்பட்டது. ஒரு காவல்துறை அதிகாரி பேருந்தினுள் நுழைந்து நோட்டமிட்டார். பேருந்தில் உள்ளோர் அனைவரும் அமைதியாக இருந்தனர். அவர் கீழே இறங்கியதும் பேருந்தில் உள்ள ஒருவர்,

"எல்லாரும் இறங்க வேணாம், ரெண்டு பேரு போய் பேசுனா போதும்.."



ஓட்டுநர் பேருந்தை விட்டு இறங்கினார். அவரைத் தொடர்ந்து இரண்டு பேர்கள் பேருந்தைவிட்டு இறங்கினர். ஜன்னல் ஓரத்திலிருந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கீழிறங்கியவர்களின் அடையாள அட்டை வாங்கப்பட்டு பரிசோதனைக்குள்ளானது.

உடனே நான் என் நிழற்படக்கருவியை கையில் எடுத்துக் கொண்டேன். காவல் துறையினர் அடிக்கடி பேருந்தில் உள்ளவர்களை வெளியிலிருந்து கண்ணோட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்கள் என் பக்கம் பார்க்காதபோது ஜன்னல் வழி சில படங்களை பதிவு செய்ய முடிந்தது. எனக்கு உதவியாக வேலன்,

"இங்கே பாருங்க, இதெ எடுங்க.. அவன் பாக்கல..ஓகே..ஓகே.. தோ இதையும் எடுங்க..கைல M-16 வெச்சுறுக்கான்..அத கிளியரா எடுங்க.. மெகசின் லோட் பண்றான் பாருங்க.. புடிச்சி போட்டுருவோம்"

என் பின்னால் இருந்த ஒரு பெரியவர்,

"இதுக்குலாம் எதுக்கு பயந்துகிட்டு, நேரா அவன் பாக்கும்போதெ எடுங்க.. கொஞ்சம் இப்படி வந்து எடுங்க..இங்க நல்லா தெரியிது.."



சில நிமிடங்கள் கழிந்தது..

நானும் சிலரும் பேருந்தைவிட்டு இறங்கிவிட்டோம்.. சிலர் காவல் துறையினரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அருகில் சென்று என்ன பேசுகிறார்கள் என்பதனை கவனித்தேன்..

"லூ அடா அபா அபா புக்திகா?"

"பெகி செம்பாயாங் மாவ் அபா புக்தி?"

"யூ கெனா துஞ்சோக் புக்தி பெகி செம்பாயாங்.."

"ஓகே லா இன்சேக், கலாவ் இன்சேக் தாக் பெர்சாயா சமா காமி, இன்சேக் ஈக்குட் கிதா.."

"இனி காமி டா தேங்கொக் பாஞாக் பஸ் டரி செமலாம்..காமி தாவ்"

"தாக்டா இன்சேக், காமி டா பாயார் செரீபு கத் தோக்கோங் து, உந்தோக் செம்பாயாங்"



பேசிப் பார்த்ததில் காவல் துறையினர் மசிவதாகத் தெரியவில்லை.. எங்களை விட்டுவிட்டு இன்னொரு பேருந்தை அவர்கள் நிறுத்தச் சென்றுவிட்டார்கள். அப்பேருந்தில் இந்தியர்கள் ஒரு திருமணத்திற்குச் செல்வதுப் போல் காணப்பட்டார்கள். 5 நிமிடங்கள் கழித்து அப்பேருந்து தன் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டது.

மீண்டும் ஒரு காவல் அதிகாரி எங்களை நோக்கி வந்தார்.

"லூ ஓராங் அடா பாவா புடாக் கெசிக் கா?"

"தாக்டா இன்சேக்"

"ஓகே, செமுவா டெங்ஙார் சினி, செகாராங் காமி மாவ் யூ ஓராங் டுடோக் டி டாலாம் பஸ்"

அப்பொழுது எங்களுடன் வந்திருந்த ஒருவர்,

"இன்சேக் சாயா பூஞா ஐ.சி? "

"கெனாப்பா?"

"தாடி இன்சேக் அம்பேல் சயா புஞா ஐ.சி.."

" ஜாடி...?"

"சாயா மாவ் ஐ.சி சாயா.."

" கெனாப்பா சாயா பெர்லூ பாகி ஐ.சி டெகாத் யூ? "

"இதூ ஐ.சி சாயா, சோ, சாயா மாவ் ஐ.சி சாயா பாலேக்! இன்சேக் தாக் போலேக் அம்பேல் ஐ.சி சாயா!"

"சியாபா காத்தா தாக் போலே? ஆ.....! பாவா யூ பூஞா லோயர்..! சியாபா காத்தா தாக் போலே? யூ தாவ், காமி அடா உண்டாங் உண்டாங்.. காமி போலே அம்பேல் ஐ.சி காமு..!"

"மானா போலே இன்சேக்?!"

"ஆ... செகாராங் ஜங்கான் புவாட் மசாலா, பெகி டுடோக் டலாம் பஸ், லெபஸ் து இகூட் கிதா பூஞா கெரேத்தா..ஓகே? ஜாங்கான் பக்சா காமி! கலாவ் யூ தாக் பெகெர்ஜசாமா, யூ யாங் அகான் சுசா.. ! ஜாங்கான் நந்தி கமி தகான் யூ சுமுவா, பாகாம்?! பிகி டுடோக்!"

எங்களில் ஒருவர்,

"சிகரெட் இருந்தா யாராச்சும் கொடுங்க.. தாஜா பண்ணி பாப்போம்.."

ஒரு காவல் துறை அதிகாரிக்கு சிகரெட் கொடுக்கப்பட்டது.. புகையை நன்றாக இழுத்துக் கொண்டே அந்த அதிகாரி ஒரு சிலரின் சமரசப் பேச்சுகளில் தன்னை சற்று நேரம் ஐக்கியப்படுத்திக் கொண்டார். இறுதியாக 'முடியாது' என்ற வார்த்தையைத் தவிர அவரிடமிருந்து வேறு பதில் வராது அனைவரும் ஏமாந்து போயினர். சிகரெட் கொடுத்திருக்கவே தேவை இல்லை...



இறுதியாக, கையில் M-16 இரக துப்பாக்கியேந்தி எங்களை வலுக்கட்டாயமாக மிரட்டி பேருந்தில் அமர வைத்தனர் காவல் துறையினர். அதன்பின் ஒரு காவல்துறை அதிகாரி பேருந்தில் ஏறி,

"ஆ...செகாராங் செமுவா அம்பேல் கெலுவார் ஐ.சி.."

என்று கட்டளையிட்டுவிட்டு அனைவருடைய அடையாள அட்டைகளையும் பறிமுதல் செய்தார். காவல் அதிகாரி ஒவ்வொரு இருக்கையாகச் சென்று அடையாள அட்டைகளை வாங்கிக் கொண்டே இருக்கைகளை கண்ணோட்டமிட்டுக் கொண்டு வந்தார். என் இருக்கையில் நான் மறந்துப்போய் முகமூடியை வைத்திருந்தேன். அதைக் கண்டுவிட்ட ஒருவர் எனக்கு ஞாபகப்படுத்தினார்,உடனே அதைக் காவல் அதிகாரி பார்ப்பதற்குள் எடுத்து ஒளிவைத்தேன். அதன்பின் அந்த காவல்துறை அதிகாரி எல்லா அடையாள அட்டைகளையும் சரிபார்த்துவிட்டு பேருந்து ஓட்டுநரிடம்..

"ஓகே, யூ ஈக்குட் காமி செகாராங்.. ஈக்குட் கெரேத்தா டேப்பான்..!"

என்று கட்டளையிட்டு இறங்கிச் சென்றார்.



முன்னே ஒரு காவல் துறையின் ரோந்துக் கார் செல்ல, எங்கள் பேருந்து அக்காரைப் பின் தொடர்ந்தது. நிச்சயம் எங்களைப் புலாபோலுக்குத்தான் அழைத்துச் செல்கிறார்கள் என்று மனதில் தோன்றியது. எனவே, நண்பர் கலையரசுவை கைப்பேசியின் மூலம் தொடர்புக் கொள்ள முயற்சித்தேன். ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை.

இருபது நிமிட பயணத்திற்குப் பிறகு நாங்கள் ஜாலான் செமாராக்கில் அமைந்துள்ள காவல் துறைப் பயிற்சி மையமான புலாபோல் PULAPOL (Pusat Latihan Polis, Jalan Semarak Kuala Lumpur )அடைந்தோம்.



புலாபோல் வளாகத்தில் நுழைந்த பேருந்து, ரோந்து வாகனத்தைப் பின்பற்றிச் சென்றது. வழிநெடுக காவல் துறையினர் நின்றுக் கொண்டிருந்தார்கள். இறுதியாக எங்களுக்கு சைகை காட்டப்பட்டு ஒரு வாகனம் நிறுத்துமிடத்தில் பேருந்து நின்றது. அவ்விடத்தில் மக்கள் கூட்டம் திரண்டு நிற்பதைக் காண முடிந்தது. அவ்வேளை எனக்கு நண்பர் கலையரசுவிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது.

" சதீஷ், எங்க இருக்கீங்க..?"

"தோ, உங்க முன்னுக்கு ஒரு பஸ் வந்து நின்னுச்சில..அதுலதான் இருக்கேன்.." என்று சிரித்துக் கொண்டே கூறினேன்..

நண்பர் கலையரசுவும் என் பதிலைக் கேட்டு..

" ஹா..ஹா..ஹா.. வாங்க..வாங்க.. வேல்கம்.." என சிரித்துக் கொண்டே வரவேற்றார்.

நாங்கள் அனைவரும் பேருந்தைவிட்டு இறங்குவதற்கு முன் சிலர் அறிவிப்புச் செய்து கொண்டிருந்தார்கள்.

"யாராச்சும் பேன்னர், மக்கள் சக்தி டீ- சேர்ட் இருந்துச்சுனா கொண்டு வராதீங்க, பஸ்லியே எங்கையாச்சும் ஒளி வெச்சுருங்க..கடைசிவரக்கும் நாம்ம கோட்டுமலைக்குதான் போறோன்னு சொல்லிருங்க..ஓகேவா"

அனைவரும் வெறுங்கையோடு இறங்கினோம்.. பேருந்தைவிட்டு இறங்கியதும் "மக்கள் சக்தி வாழ்க..!" என்ற கோஷங்கள் பரவலாகக் கேட்டன..

எங்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது...

" ஹா..ஹா..ஹா..நம்ம கைங்களே நம்மல காட்டி கொடுத்துருச்சீங்களே..."

இனியும் காவல் துறையை ஏமாற்ற முடியாது என்று சிரித்துக் கொண்டே அனைவருக்கும் கையசைத்தோம்.. நாங்களும் மக்கள் சக்தியில் இணைந்தோம்..

கூட்டத்தில் நண்பர் கலையரசுவின் முகம் தெரிந்தது.. தூரத்திலிருந்து கையசைத்தார்.. நானும் பதிலுக்கு கையசைத்தேன்..

பிறகு நாங்கள் அனைவரும் தனிக் குழுவாக ஒரு மண்டபத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு வெளியே நிற்கவைக்கப்பட்டோம்..

போராட்டம் ஆரம்பமாகும்...

அத்தியாயம் ஐந்து முற்றும்...

Read more...

சன்னாசி மலை ஆண்டவர் மற்றும் சிங்க முக காளியம்மன் ஆலய மாசி மகம்..

மலாக்காவில் கடந்த 21-ஆம் திகதியன்று சன்னாசி மலை ஆண்டவர் ஆலயத்தில் மாசி மகத் திருவிழா மிக விமரிசையாக நடைப்பெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் இவ்விழாவில் கலந்துக் கொண்டு சன்னாசி ஆண்டவரின் அருளையும் ஆசியையும் பெற்றனர். இவ்விழாவில் மக்கள் சக்தி தன்னுடைய பந்தலை அமைக்கத் தவறவில்லை. மலாக்கா மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஐயா திரு.கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மக்கள் சக்தி இயக்கப்பட்டு பொதுமக்களுக்கு கையேடுகளை விநியோகிக்கப்பட்டது.

சன்னாசி மலை ஆண்டவர் மாசி மகத் திருவிழா தொடர்பான படக்காட்சிகளை மலாக்கா ஓலைச்சுவடியின் நிருபர் திரு.கலையரசு அனுப்பியிருந்தார். அப்படக்காட்சிகள் சில கீழே...







மக்கள் சக்தி பந்தல்



குடும்பத்தைத் தாங்கும் சுமைதாங்கிகள்...



இதற்கிடையில் பினாங்கு தெலுக் பாகாங்கில் அமைந்துள்ள சிங்க முக காளியம்மன் ஆலயத்தில் வருடாந்திரமாக நடைப்பெறும் மாசி மக தெப்பத் திருவிழா மிக விமரிசையாக நடைப்பெற்றது. இருப்பினும், இவ்விழாவில் முக்கிய நிகழ்வான தெப்பம் விடுதல் இம்முறை நடைப்பெறவில்லை. சுமத்ராவில் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாக தெலுக் பகாங் கடற்கரையில் அலைகள் உயர்ந்து காணப்பட்டதாலும், காற்று பலமாக வீசியதாலும் தெப்பங்களைக் கடலில் விட மிகச் சிரமமாக இருந்தது. பக்தர்கள் தங்கள் தெப்பங்களை கடலில் விடும்பொழுது மறுகணம் அத்தெப்பங்கள் உடைந்து சுக்கு நூறாகிய காட்சிகள் மிகவும் வேதனையாக இருந்தன. ஒரு சிலர் தங்களுடைய தெப்பங்களை கடற்கரை மணலில் புதைத்து வைத்தனர். ஒரு சிலர் அங்கு மணல் மேடுகள் செய்து மகிழ்ந்திருந்தனர். இப்படியாக அன்றைய தெப்பத் திருவிழா ஒரு நிறைவைக் கண்டது.

தெப்பத் திருவிழாத் தொடர்பான சில படக்காட்சிகள் கீழே...

Read more...

உங்கள் சிந்தனைக்கு சில படக்காட்சிகள்...

>> Friday, February 22, 2008











போராட்டம் தொடரும்...

Read more...

சாமிவேலுவிற்கும் கீர் தோயோவிற்கும் பதிலடி..

அண்மையில் கம்போங் லின்டுங்கான், கிளானா ஜாயாவில் சாமிவேலுவும், கீர் தோயோவும் அங்குள்ள சீப்போர்ட் தமிழ்ப்பள்ளியின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு தலைமையேற்றிருந்தார்கள். அந்நிகழ்வில் பொதுமக்கள் அவ்விரு தலைவர்கள் மீதும் கொண்ட ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காட்சி கீழே :



போராட்டம் தொடரும்...

Read more...

16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் நான்கு)

டூத்தா சாலைக் கட்டணச் சாவடியைக் வெற்றிகரமாக கடந்துவிட்ட பூரிப்பு சில மணித்துளிகளே எனக்கு நீடித்தது.. டூத்தா சாலைக் கட்டணச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவில், சாலை இரு பிரிவாகச் செல்லும். ஒன்று கூச்சிங் சாலை, மற்றொன்று மாநகர் செல்லும் சாலை. பயணத் தொடக்கத்திலிருந்து நிதானமாகவே காணப்பட்ட பேருந்து ஓட்டுநர், பேருந்தை கூச்சிங் சாலையில் அதே நிதானத்தோடு செலுத்தினார். ஓட்டுநர் அருகே நின்றுக்கொண்டிருந்த ஒருவர் யாரோ ஒருவரிடம் கைப்பேசியின் மூலம் நாடாளுமன்றம் செல்லும் வழியைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

" சொல்லுங்க சார்.. ஆம்.. ஓகே..ஓகே.. ஜாலான் கூச்சீங்கா சார்? ஓகே, ஜாலான் கூச்சிங் எடுத்தாச்சி... இப்ப ஜாலான் கூச்சிங்ல பூந்துட்டோம்.. ஓகே, நேரா போவா? ஓகே ஓகே சார்.. சைன் போர்ட் பாக்கணுமா? ஓகே, செலாயாங், சுங்கை பூலோ, கெப்போங்னு போட்டுருக்கு.. ஆம், ஓகே ஓகே, நேராதானே..ஓகே ஓகே.."

ஓட்டுநரைப் பார்த்து,

" அண்ணே, நீங்க நேரா போங்க... அங்கதான் பார்லிமெண்ட் இருக்காம்.."

இதையெல்லாம் பக்கத்திலிருந்துக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.. கோலாலம்பூர் பாதைகள் எனக்கு அத்துப்படி என்பதால், தவறு நடந்துவிட்டது தெரிந்தது, இருப்பினும் அமைதியாக அமர்ந்திருந்தேன்.. அடிக்கடி ஜன்னல் வழியே எட்டி எட்டி பார்த்துக் கொண்டே வந்தேன். ஒருவேளை ஓட்டுநர் குறுக்குப்பாதை ஏதாவது கண்டுபிடித்திருப்பார் என்று நினைத்துக் கொண்டு மனதைத் தேற்றிக் கொண்டேன். இருப்பினும், இந்நேரம் நிகழ்வு ஆரம்பமாயிருக்கும், பல நிகழ்வுகளைப் பார்க்க முடியாமல் போய்விடுமே என மனதிற்குள் ஒரு ஆதங்கம் இருந்துக்கொண்டே இருந்தது.

பேருந்து கெப்போங்கை அடைந்துவிட்டது. சரி கேட்டுப் பார்க்கலாம் என்று என் பக்கத்தில் அமர்ந்திருந்த வேலனிடம் கேட்டேன்.

"அண்ணே, பஸ் எங்கணே போது?"

"அதான்யா, எனக்கும் தெரியல"

பேருந்து முன் நின்றுக் கொண்டிருந்த அதே இளைஞர் மீண்டும் கைப்பேசியில்,

" இன்னும் நேராவாண்ணே, ஓகே..ஆம்..ஓகே, தோ பாசார் போரோங் கெப்போங்னு போட்டுருக்கு.. முன்னுக்கு வளைஞ்சிருனுமா..? ஓகே.."

பிறகு அவர் ஓட்டுநருக்கு, தனக்கே அறிமுகம் இல்லாதப் பாதையை 'இங்கே வளைங்க, அங்க நில்லுங்க' என்று கட்டளைப் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்பொழுதுதான் பேருந்து ஓட்டுநர் வழித் தெரியாமல் எங்கேயோ பேருந்தை ஓட்டிக் கொண்டுச் செல்கிறார் என்று தெரிந்தது..

உடனே நான்,

"அண்ணே, நீங்க போற ரூட் சாலா.., நீங்க திரும்பி யூ டர்ன் எடுக்கணும்.."

பக்கத்தில் அமர்ந்திருந்த வேலன்,

"உங்களுக்குப் பாத தெரியுமா?"

"ஆம்.தெரியும்"

பேருந்தினுள் படிக்கட்டுகளில் நின்றுக்கொண்டிருந்த இளைஞர் பேருந்தில் உள்ளவர்களிடம் ,

"யாருக்காச்சும் கே.எல் பாதை தெரியுமா?"

யாரும் பதில் கூறவில்லை.. உடனே வேலன்,

"தோ பாருலா, இவருக்குப் பாத தெரியுன்றாரு"

அந்த இளைஞர் என்னைப் பார்த்து,

"உங்களுக்குத் தெரியுமா?"

"தெரியும்"

வாங்க, வந்து பாத காட்டுங்க"

"சரிண்ணே, நீங்க மொதல்ல யூ டர்ன் எடுங்க"

பேருந்து கெப்போங் சந்தையைத் தாண்டியதும், ஒரு வளைவு எடுத்து மீண்டும் மாநகர்ச் செல்லும் சாலையில் பேருந்து பயணமானது. மாநகர் நோக்கி பேருந்துச் சென்றுக் கொண்டிருக்கும் வேளை, சற்றுத் தொலைவில் வாகனங்கள் நெரிசலில் அணிவகுத்து நிற்பது கண்ணிற்குத் தென்பட்டது. நெரிசல்ப் பகுதியை அடைந்ததும் ஒரு ஐந்து நிமிடம் நெரிசலில் ஐக்கியமாகி பேருந்து ஆமை வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருந்தது. எதற்கும் அனைவரும் விழிப்பு நிலையில் இருந்தோம். பேருந்து அடி மேல் அடி வைத்து நகர வாகன நெரிசலின் முக்கியக் காரணம் மெல்ல மெல்ல எங்கள் கண்களுக்குப் புலப்படத் தொடங்கியது.

மீண்டும் ஒரு அறிவிப்பு வந்தது...

" முன்னுக்கு புளோக் போட்டுருக்கானுங்க... கேட்டா எல்லாரும் கோட்டு மலைப் பிள்ளையார் கோயிலுக்கு போறோன்னு சொல்லிருங்க..ஓகே வா?"

சாலைத் தடுப்பை நெருங்க நெருங்க நாங்கள் அனைவரும் ஓட்டுநரைப் பார்த்து,

"அண்ணே, சோத்துக் கை சைட்டு போங்க, அவனுங்க பீச்சக் கை சைட்டு புளோக் போட்டுருக்காணுங்க.."

பேருந்து மெதுவாக சாலையின் வலதுபுறத்திற்கு இடம் பெயர்ந்தது...



சாலைத் தடுப்பை நெருங்க நெருங்க சாலைத் தடுப்பின் முழு உறுவம் ஒருகணம் எங்களை பயமுறுத்தியது.. சாலை முழுவதுமாக அடைக்கப்பட்டு ஒவ்வொரு வாகனமாக சோதனை செய்யப்பட்டு மாநகரினுள் அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இம்முறை எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை, காரணம் அப்படியொரு பலத்தப் பாதுகாப்பு..

பயணம் தொடரும்...

அத்தியாயம் நான்கு முற்றும்...

Read more...

16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் மூன்று)

>> Wednesday, February 20, 2008

நெடுஞ்சாலையில் பேருந்து நிதானமாகவே ஓடியது. செல்லும் வழியில் ஆங்காங்கே பேருந்து, பயணிகள் உணவுகளை வாங்குவதற்கும் களைப்பாறுவதற்கும் நின்றது. இதற்கிடையில் நண்பர் கலையரசு தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் நிலவரங்களை எனக்கு கைப்பேசியின் மூலம் அடிக்கடி தெரிவித்துக் கொண்டிருந்தார். சுமார் விடியற்காலை மணி மூன்றுக்கு நண்பர் கலையரசுவிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது.

"சதீஷ், எங்கல புடிச்சிட்டானுங்க"

"ஐயோ எப்படி!?"

"ரோட் புளோக்ல மாட்டிக்கிட்டோம்.. கூட வந்திருந்தவங்க எல்லாரையும் கீழே இறங்க சொல்லிட்டான்.. எல்லாரோடே ஐ.சியையும் வாங்கிட்டானுங்க.. கிருஷ்ணன் சாரே மட்டும் தனியா கூட்டிட்டு போய்ட்டானுங்க.."

"என்ன இப்படி பண்ணிட்டானுங்க.."

"சரி, நான் உங்களுக்கு அப்புறம் கால் பண்ணி என்ன நடக்குதுனு சொல்றேன்"

நண்பர் கலையரசுவிடமிருந்து தகவல் கிடைத்ததும், என் பக்கத்து வரிசையில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பயண ஏற்பாட்டாளரிடம் அத்தகவலைத் தெரிவித்தேன். அதற்கு அவர்,

"அதுவந்து, முக்கியமான ஆளுங்கலதான் புடிப்பானுங்க.. நம்மல அவனுங்க ஒன்னும் பண்ண முடியாது"

என்று சர்வசாதாரணமாக பதில் வந்தது..

என் பக்கத்தில் அமர்ந்திருந்த வேலன் அவர்கள்,

"யேன், புடிச்சிட்டானுங்களா..? யாரே? எங்கே?"

நண்பர் கூறிய தகவலை அவரிடம் கூறியதும், தலையாட்டிவிட்டு அமைதியானார்..

மீண்டும் சில நிமிடங்கள் கழித்து நண்பர் கலையரசுவிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது..

"சதீஷ், எங்கல எங்கையோ கொண்டு போறானுங்க, எங்கனு தெரியல.. போய் சேர்ந்ததும் கால் பண்றேன்.."

"ஓகே, பாத்துகுங்க...போய் சேர்ந்ததும் என்ன நடந்துச்சினு சொல்லுங்க.."

மீண்டும் ஒரு அரை மணி நேரம் கழித்து,

"சதீஷ் எங்கல் புலாபோல்னு ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போய்ட்டானுங்க.. இங்க வேற யாருமே இல்ல, நாங்கதான் இருக்கோம்.. ஒரு டேவான்குள்ளே எங்கல உக்கார வெச்சிருக்கானுங்க.. ஒரு ஒரு ஆளா இண்டர்வியூ பண்றானுங்க.."

"ஐ.சி கொடுத்தானுங்களா கலை?"

"இல்ல, கொடுக்கல, எங்களோட ஜாமான்களையும் எடுத்துக்குட்டானுங்க"

மீண்டும் இத்தகவலை பயண ஏற்பாட்டாளரிடம் தெரிவித்தேன். இம்முறை விஷயத்தை சற்று சிரத்தையோடு அவர் கேட்டுக் கொள்வதுப்போல் தெரிந்தது.

காலை மணி 7.00 இருக்கும், பேருந்து சுங்கை பூலோ களைப்பாறும் இடத்தில் காலை உணவிற்கு நின்றது. பேருந்தை விட்டு இறங்கியதும், "மக்கள் சக்தி" என்றக் குரல்கள் வெகுவாகக் கேட்டது. குரல்கள் வந்தத் திசையை நோக்கி எல்லாரும் நடந்தோம்.

"வாங்க, வாங்க.. எங்கிருந்து வாரீங்க?"

"நாங்களாம் பினாங்கிலிருந்து வரோம்.. நீங்க"

"நாங்களாம் ஈப்போவிலிருந்து வரோம், இங்க உள்ளவங்கலாம் பேராக் மக்கள் சக்தி கொம்மிட்டி மெம்பர்ஸ்"

"உங்க இடத்துல ஏதாச்சும் புளோக் போட்டுருந்தானுங்கலா?"

"ம்ம்ம்.. இருந்துச்சே, அங்க இங்கனு ஈப்போவையே ஒரு சுத்து சுத்தி கடைசியா ஜெலாப்பாங்லே வெளியானோம்.."

ஈப்போத் தமிழர்களைப் பார்த்ததும் மனதில் எனக்கு ஒரு பூரிப்பு ஏற்பட்டது, சொந்த ஊர் மக்களாயிற்றே... அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

சுங்கை பூலோ களைப்பாறும் இடத்தில் நிறைய பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் சில கல்யாணத்திற்கும், ஆன்மீக பயிற்சிகளுக்குச் செல்லும் பேருந்துகளும் இருந்தன.

எல்லோரும் காலை உணவை முடித்துக் கொண்டோம், ஒரு சிலர் அங்குள்ள குளியலறையில் குளித்துவிட்டு புதிய உடைகளை அணிந்து வந்தனர். ஒரு சிலர் கூட்டம் கூட்டமாக நின்றுக் கொண்டு நாட்டு நிலவரத்தை சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

மீண்டும் நண்பர் கலையரசுவின் கைப்பேசி அழைப்பு வந்தது..

மெல்லியக் குரலில்.. " சதீஷ், இவனுங்களாம் இங்கிருந்துதான் ரெடியாயிட்டு கிளம்புறானுங்க.. சூட் லாம் மாட்டிக்கிட்டு நிக்கிறானுங்க.. சரியான பசி, எங்களுக்கு சாப்பாடு குடுக்காமா அவனுங்க சாப்பாடு வாங்கி சாப்டுறானுங்க.. பிறகு நாங்களாம் சேந்து சண்ட போட்டோனேதான், அதுல ஒருத்தன் வந்து இன்சே மாவ் ஓர்டர் அபா?ன்னு வந்துக் கேக்குறான்" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

இப்படியாக, அங்கு ஒரு நாற்பது நிமிடம் கழிந்தது.

இனி, நேராக நாடாளுமன்றம்தான் என்ற முடிவில் பேருந்து தன் பயணத்தைத் தொடங்கியது.

ஜாலான் டூத்தா கட்டணச் சாவடியை நெருங்கினோம். அனைவரும் எதையோ எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதுப்போல் ஜன்னல் திரையை விலக்கி வெளிக்காட்சிகளில் கண்களை பதியவைத்தார்கள்.



உடனே ஓர் அறிவிப்பு வந்தது...

" முன்னுக்கு புளோக் போட்டுருக்கானுங்க, கேட்டா எல்லாரும் கோட்டு மலைப் பிள்ளையார் கோயிலுக்கு போறதா சொல்லிருங்க.. ஒகே வா.."

(அறிவிப்புச் செய்தவர்க்கு கோட்டு மலை பிள்ளையார் கோயில் எங்கிருக்கிறது எனத் தெரியாது, அது வேறு விஷயம்.. ஆனால் கோட்டு மலைப் பிள்ளையார் கோயிலின் முன் தான் மக்கள் கூட்டம் அலைமோதியது எனும் விஷயம், பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது. அதுவரையில் மக்கள் சக்திக் கூட்டம் நாடாளுமன்றத்தில் கூடியிருப்பதாகவே நினைத்திருந்தோம்.)

பேருந்து கட்டணச் சாவடியை நெருங்கியது, எங்கள் பேருந்தின் முன் தொழிற்சாலைப் பேருந்து நின்றுக் கொண்டிருந்தது. அப்பேருந்து கட்டணச் சாவடியைக் கடந்ததும் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து எங்கள் பேருந்தும் கட்டணச் சாவடியைக் கடந்ததும் நிறுத்தச் சொன்னார்கள்..




அங்குதான் சுவாரசியமே உள்ளது.

பேருந்து ஓட்டுநர் பேருந்தை ஓரங்கட்டுவதுப்போல் சாலையோரம் பேருந்தை நகற்ற, நாங்கள் அனைவரும்...

"நிக்காதீங்க..நிக்காதீங்க... கிளம்புங்க..கிளம்புங்க..அவனுங்க பாக்கல, சீக்கிரம்...சீக்கிரம்...!!"

பேருந்து நிதானமாக அவ்விடத்தைவிட்டு அகன்றது, பேருந்தில் உள்ள ஒருவர் பேருந்தின் பின்னால் உள்ள திரையை விலக்கி,

"ஒகே, லைன் க்லியர்..ஜாலான்..ஜாலான்"

அந்தச் சில மணித்துளிகள் எங்களுக்குப் போராட்டமாகவே தென்பட்டது...

பேருந்து வெற்றிக்கரமாகக் கோலாலம்பூரினுள் நுழைந்தது..

பயணம் தொடரும்...

அத்தியாயம் மூன்று முற்றும்...

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP