கட்டமைக்கப்பட்ட இனவாதம் மற்றும் சமய சுதந்திரம்

>> Monday, November 28, 2011


கடந்த நவம்பர் 8-ஆம் திகதியன்று ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டு விவகாரக் குழுவிடம் இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி ‘கட்டமைக்கப்பட்ட இனவாதம் மற்றும் சமய சுதந்திரம்’ எனும் அறிக்கையினை சமர்ப்பித்தார். அவ்வறிக்கையை மென்நூலாகப் பெறுவதற்கு கொடுக்கப்பட்ட இணைப்பைச் சுட்டி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

கட்டமைக்கப்பட்ட இனவாதம் மற்றும் சமய சுதந்திரம் : http://www.mediafire.com/?en7fw7nz1bq1s9t

போராட்டம் தொடரும்...

Read more...

திசம்பர் 4ஆம் திகதி இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் இரண்டாம் தேசிய பேராளர் மாநாடு

>> Friday, November 25, 2011



மலேசிய இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் இரண்டாவது தேசிய பேராளர் மாநாடு எதிர்வரும் திசம்பர் மாதம் 4ஆம் திகதி நடைபெற உள்ளது.

நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட சுமார் 350 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.காலை மணி 9.00 முதல் மதியம் 2.00 மணி வரை கோலாலம்பூர் சீன அசம்பெளி மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெறும்.

லன்டனிலிருந்து இண்ட்ராஃப் இயக்கத் தலைவர் பொ.வேதமூர்த்தி அவர்களின் இணையம் மூலமான நேரடி உரையுடன் துவங்கும் இம்மாநாட்டில் கடந்த வருட இண்ட்ராஃப் நடவடிக்கைகளின் கண்ணோட்டம், எதிர்கால நடவடிக்கைகளின் அணுகுமுறைகள், 13வது பொது தேர்தலில் இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் நிலைபாடு போன்ற தலைப்புகளில் ஆக்ககரமான பேராளர்களின் உரைகளும் விவாதங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டிற்கான நிதி அறிக்கையும் முன் மொழியப்பட்டு விவாதங்களுக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்படும்.

கடந்த ஆண்டு மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடிய ஐந்து சிறந்த போராட்ட வாதிகளை இண்ட்ராஃப் உச்சமன்ற தேர்வுகுழுவின் பரிந்துறையின் பேரில் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இவ்வாண்டிற்க்கான இண்ட்ராஃப் மனித உரிமை காவலன் ( HINDRAF HUMAN RIGHTS DEFENDER ) என்ற அங்கீகாரமும் இம்மாநாட்டில் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள்.


வி.சம்புலிங்கம்
மலேசிய இண்ட்ராஃப் தேசிய ஒறுங்கிணைப்பாளர்
010 277 4096

Read more...

இந்திய மலேசியர்களின் எழுச்சி நாள்

இன்றோடு இந்திய மலேசியர்களின் அறப்போராட்டமானதும் எழுச்சி நாளுமான 25 நவம்பர் மாபெரும் இண்ட்ராஃப் பேரணி நடைப்பெற்று நான்கு ஆண்டுகள் பூர்த்தியடைகிறது. இத்தினத்தையொட்டி மாநில இண்ட்ராஃப் தலைவர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்துகொள்ளும் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.


இந்நாளை நினைவுகூரும் வகையில் நாடுதழுவிய நிலையில் ஆங்காங்கே சிறப்பு வழிபாடுகள் நடக்கவிருக்கின்றன. பொதுமக்கள் தவறாமல் வழிபாட்டில் கல்ந்து கொள்ளவும். மேலும் தகவல்கள் இங்கே : இந்திய மலேசியர்களின் எழுச்சி தின சிறப்பு வழிபாடு, இண்ட்ராஃப் மக்கள் சக்தி ஏற்பாடு

போராட்டம் தொடரும்...

Read more...

இந்திய மலேசியர்களின் எழுச்சி தின சிறப்பு வழிபாடு, இண்ட்ராஃப் மக்கள் சக்தி ஏற்பாடு

>> Wednesday, November 23, 2011

மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள உரிமைகள் மறுக்கப்பட்ட அநீதியை எதிர்த்து இந்திய மலேசியர்கள் கடந்த நவம்பர் 25, 2007 இல் கோலாலம்பூரில் இண்ட்ராஃப் ஏற்பாட்டில் நிகழ்த்திய மாபெரும் அமைதிப் போராட்டத்தின் 4 ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் பொருட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்கு நாடு முழுதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் பள்ளிகள், உயர் கல்வி, உபகாரச் சம்பளம், சமயச் சுதந்திரம், வியாபார உரிமைகள் என சமூக மற்றும் பொருளாதார உரிமைகளுக்காக 18 கோரிக்கைகளை முன்வைத்து அந்த மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்திய மலேசியர்களின் எழுச்சி நாளாகக் கருதப்படும் இந்நிகழ்வினை இண்ட்ராஃப் இயக்கத்தினர் ஆண்டுதோறும் அனுசரித்து வருகின்றனர். அந்த வகையில் 4ஆம் ஆண்டு நிறைவை கருத்தில் கொண்டு எதிர்வரும் நவம்பர் 25, 2011 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நாடு முழுவதும் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

சிறப்பு வழிபாடு நடைபெரும் விபரங்கள்:

பினாங்கு மாநிலம் – ஸ்ரீ சிவசக்தி ஆலயம், பகான் டாலாம், பட்டர்வெர்த் – 012 5637 614

கெடா மாநிலம் – ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம், பாயா பெசார், லூனாஸ் – 012 429 2819 / 012 4442755

பேராக் மாநிலம்- வீரமுத்து மகா மாரியம்மன் ஆலயம், புந்தோங், ஈப்போ – 012 469 6068

கோலாலம்பூர் – கோர்ட்டு மலை பிள்ளையார் ஆலயம் – 016 313 7840

நெகிரி செம்பிலான் மாநிலம் – ஸ்ரீ முருகன் ஆலயம், மம்பாவ் – 019 694 4693

ஜோகூர் மாநிலம் – அறுள்மிகு ஓம்-ஸ்ரீ மகா மரியம்மன் ஆலயம், ஸ்கூடாய் 019 710 2895 / 016 717 8692

ஆலயங்களுக்கு வர இயலாதவர்கள் அவரர்தம் இல்லங்களில் 18 அகல் விளக்கேற்றி 18 கோரிக்கைகளும் நிறைவேற வழிபடுமாறு வி.சம்புலிங்கம், இண்ட்ராஃப் மலேசிய தேசிய ஒருங்கிணைப்பாளர், கேட்டுக்கொண்டுள்ளார்.

போராட்டம் தொடரும்...

Read more...

ஒப்பிட்டேன் ஓலமிட்டேன் - நூல் வெளியீடு

>> Tuesday, November 15, 2011

கடந்த இரண்டாண்டுகளாக மலேசிய நண்பனில் அரசியல் ஆய்வாளர் திரு.ஆ.திருவேங்கடத்தின் கைவண்ணத்தில் வாராந்திரக் கட்டுரையாக வெளிவந்த ‘ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்’ எனும் அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் தற்போது நூல் வடிவம் கண்டுள்ளன. மலேசியத் தமிழர்கள் மத்தியில் விரும்பிப் படிக்கப்பட்ட இவ்வரசியல் ஆய்வுக் கட்டுரைகளில் மத்திய மாநில அரசாங்கங்கள் இந்திய மலேசியர் சமூகத்தின் மீது கொண்டுள்ள உண்மைக் கண்ணோட்டங்கள் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் அலசப்பட்டுள்ளன. நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளால் சிறுபான்மை இந்திய சமூகம் எப்படியெல்லாம் நார் நாராக திரிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளது என ஆ.திருவேங்கடம் தமக்குரிய பாணியில் எளிமையான தமிழில் பக்கச்சார்பில்லாத ஆய்வுக் கட்டுரைகளை படைத்திருக்கிறார்.

நூல் வெளியீடு குறித்த அழைப்பிதழை அழைப்பாக ஏற்று இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து நூலைப் பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் தகவல்களுக்கு அழைப்பிதழைக் காணவும்.



பினாங்கின் கடைசி தமிழர் பாரம்பரிய கிராமமாகத் திகழ்ந்த புவா பாலா கிராம நில விவகாரம் குறித்து அவர் அளித்த பேட்டியினைக் காணவும்.

பாகம் 1


பாகம் 2


பாகம் 3


பாகம் 4

Read more...

இன்னும் என்ன தோழா - இண்ட்ராஃப் பதிப்பு

>> Tuesday, November 8, 2011

200 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாட்டிற்கு சஞ்சிக் கூலிகளாய் வந்த நம் தமிழினம் கடந்துவந்த கரடு முரடான பாதைகளையும், இன்று நம் நிலைமை என்ன, இனி நம் எதிர்காலம் என்ன என சிந்திக்க வைக்கும் ஒரு காணொளி காட்சியிது.

இக்காணொளியை உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.


போராட்டம் தொடரும்...

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP