ஏன் இந்த கொலைவெறி நஜீப்?
>> Tuesday, December 27, 2011
மலேசிய இந்தியர்கள் 54 ஆண்டுகளாக ‘மலாய் மேலாண்மை கொள்கையினால் கொலைவெறிக்குள்ளாகும் நிலை மாற வேண்டும். அதற்கு முதலில் அம்னோ ஒழியவேண்டும்!
என் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..
மலேசிய இந்தியர்கள் 54 ஆண்டுகளாக ‘மலாய் மேலாண்மை கொள்கையினால் கொலைவெறிக்குள்ளாகும் நிலை மாற வேண்டும். அதற்கு முதலில் அம்னோ ஒழியவேண்டும்!
போராட்டம் தொடரும்...
நான்கு ஆண்டுகளாக தங்குவதற்கு முறையான வீடின்றி ஒரு கொள்கலனில் வாழ்க்கை நடத்தும் ஓர் ஏழை இந்திய முதியவரின் சோகக் கதையிது...
இன்றோடு இந்திய மலேசியர்களின் அறப்போராட்டமானதும் எழுச்சி நாளுமான 25 நவம்பர் மாபெரும் இண்ட்ராஃப் பேரணி நடைப்பெற்று நான்கு ஆண்டுகள் பூர்த்தியடைகிறது. இத்தினத்தையொட்டி மாநில இண்ட்ராஃப் தலைவர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்துகொள்ளும் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள உரிமைகள் மறுக்கப்பட்ட அநீதியை எதிர்த்து இந்திய மலேசியர்கள் கடந்த நவம்பர் 25, 2007 இல் கோலாலம்பூரில் இண்ட்ராஃப் ஏற்பாட்டில் நிகழ்த்திய மாபெரும் அமைதிப் போராட்டத்தின் 4 ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் பொருட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்கு நாடு முழுதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் பள்ளிகள், உயர் கல்வி, உபகாரச் சம்பளம், சமயச் சுதந்திரம், வியாபார உரிமைகள் என சமூக மற்றும் பொருளாதார உரிமைகளுக்காக 18 கோரிக்கைகளை முன்வைத்து அந்த மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்திய மலேசியர்களின் எழுச்சி நாளாகக் கருதப்படும் இந்நிகழ்வினை இண்ட்ராஃப் இயக்கத்தினர் ஆண்டுதோறும் அனுசரித்து வருகின்றனர். அந்த வகையில் 4ஆம் ஆண்டு நிறைவை கருத்தில் கொண்டு எதிர்வரும் நவம்பர் 25, 2011 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நாடு முழுவதும் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
சிறப்பு வழிபாடு நடைபெரும் விபரங்கள்:
பினாங்கு மாநிலம் – ஸ்ரீ சிவசக்தி ஆலயம், பகான் டாலாம், பட்டர்வெர்த் – 012 5637 614
கெடா மாநிலம் – ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம், பாயா பெசார், லூனாஸ் – 012 429 2819 / 012 4442755
பேராக் மாநிலம்- வீரமுத்து மகா மாரியம்மன் ஆலயம், புந்தோங், ஈப்போ – 012 469 6068
கோலாலம்பூர் – கோர்ட்டு மலை பிள்ளையார் ஆலயம் – 016 313 7840
நெகிரி செம்பிலான் மாநிலம் – ஸ்ரீ முருகன் ஆலயம், மம்பாவ் – 019 694 4693
ஜோகூர் மாநிலம் – அறுள்மிகு ஓம்-ஸ்ரீ மகா மரியம்மன் ஆலயம், ஸ்கூடாய் 019 710 2895 / 016 717 8692
ஆலயங்களுக்கு வர இயலாதவர்கள் அவரர்தம் இல்லங்களில் 18 அகல் விளக்கேற்றி 18 கோரிக்கைகளும் நிறைவேற வழிபடுமாறு வி.சம்புலிங்கம், இண்ட்ராஃப் மலேசிய தேசிய ஒருங்கிணைப்பாளர், கேட்டுக்கொண்டுள்ளார்.
போராட்டம் தொடரும்...
போராட்டம் தொடரும்...
மூன்று பொதுத் தேர்தல்களில் புறக்கணிக்கப்பட்ட பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் அடிக்கல் நாட்டு விழா கடந்த 17 செப்தெம்பர் அன்று நடந்தேறியது. அந்நிகழ்வில் துணைப்பிரதமரும் கல்வி அமைச்சருமான முகிதீன் யாசின் கலந்து அடிக்கல் நாட்டு விழாவைத் தொடக்கிவைத்து உரையாற்றினார். வழக்கம்போல் வெற்று வாக்குறுதிகளை அள்ளி இரைத்த அவரின் உரை பலரின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. மக்களை தொடர்ந்து வெற்று வாக்குறுதிகளால் அலைக்கழிக்காமல், பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட நிர்மாணிப்பு பணிகளை அரசாங்கம் தொடங்க வேண்டும் என இண்ட்ராஃபின் தேசிய ஆலோசகர் திரு.கணேசன் எச்சரித்தார்.
அண்மையில் மனித உரிமை வழக்கறிஞரான திரு.சுரேசு குரோவர் மலேசியாவிற்கு வருகைப் புரிந்து பல இடங்களுக்கு பயணம் செய்து இந்திய மலேசியர்களுக்கெதிரான மனித உரிமை மீறல் சம்பவங்களை நேரடியாக கண்டு தகவல்களை திரட்டிச் சென்றுள்ளார். இவையனைத்தையும் இண்ட்ராஃபின் லண்டன் சிவில் வழக்கிற்கு தக்க ஆதாரங்களாகப் பயன்படுத்தவிருக்கின்றனர் லண்டனில் உள்ள சட்டக் குழுவினர். அத்தகைய பயணத்தின் ஓர் அங்கமாக பினாங்கிற்கும் வருகை தந்திருந்தார் திரு.சுரேசு குரோவர். அப்பயணத்தின் சில நிழற்படங்கள் உங்களின் பார்வைக்காக..
நேற்று 17 சூன் 2011 பினாங்கு வடகிழக்கு மாவட்ட காவல்த்துறை நிலையத்தில் இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியினர் இந்திய மாணவர்களுக்கு எதிராக தொடர்ந்து தொடுக்கப்பட்டு வரும் ஓரங்கட்டுதலை எதிர்த்து புகார் செய்துள்ளனர். அரசு கல்வி உபகாரச் சம்பளம் மற்றும் பிற கல்வி வாய்ப்புகள் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஏழை இந்திய மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்துவருவதை இண்ட்ராஃப் மக்கள் சக்தி இயக்கம் கடுமையாக கண்டிப்பதாக இண்ட்ராஃப் ஆலோசகர் திரு.கணேசன் கூறினார்.நாடுதழுவிய நிலையில் செய்யப்பட்ட புகார்கள் சேகரிக்கப்பட்டு மலேசிய ஐக்கிய நாட்டவை அலுவகத்தில் அடுத்த வாரம் 22 சூன் 2011-ல் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தனிப்பட்ட முறையிலோ அல்லது இயக்கம்வழி செய்த புகார்களையோ சமர்ப்பிக்க எண்ணம் கொண்டவர்கள் மனித உரிமைக் கட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
http://www.humanrightspartymalaysia.com/contact-us/
போராட்டம் தொடரும்...
இந்திய மலேசியர்களின் பெரும்பான்மை தொகுதிகளை உருவாக்கி அரசியல் பலம் பெருவதற்கு, "15/38 அரசியல் தன்னாளுமை வியூகத்திற்கு" நம்மால் ஆன ஆதரவினை வழங்குவோம். தேசிய வளர்ச்சி வெள்ளோட்டத்தில் இந்தியர்களின் பங்கினை அதிகரிப்பதற்கும், இனவாத, மதவாத கொள்கைகளை வேரறுப்பதற்கும் நமக்குத் தேவையான அரசியல் பலத்தினை உண்டாக்குவோம்!
சமுதாய உரிமைகளுக்காக சுயநலங்களை தியாகம் செய்த இண்ட்ராஃப் வீரர்களுக்கு இந்த காணொளி சமர்ப்பணம்..
போராட்டம் தொடரும்...
போராட்டம் தொடரும்..
@இரவு 11.00 மணி : ‘இண்டர்லோக் எதிர்ப்பு மகிழுந்து ஊர்வலத்தில்’ கலந்துகொண்ட சிலாங்கூர் மாநில இண்ட்ராஃப் ஆதரவாளர்களில், ஜாலான் டெம்ப்லரில் கைதான ஆதரவாளர்கள் தற்சமயம் செலாயாங் மாவட்ட காவல் நிலையத்திலிருந்து விடுதலையாயினர். அவர்களில் திரு.செயதாசும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரேவர்ஸ் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் இன்னும் விடுதலையாகவில்லை. அதே சமயம் சிரம்பானில் கைதான் 24 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் நாளைய தினத்தன்று மட்டுமே விடுதலை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
போராட்டம் தொடரும்...
பேரா மாநில நிலவரம்
இன்று காலை 9.40 மணியளவில் பேரா மாநில இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் திட்டமிட்டபடி தொடங்கிய ‘இண்டர்லோக் எதிர்ப்பு மகிழுந்து ஊர்வலம்’ புந்தோங் தொடங்கி ஜெலாப்பாங் சென்று கொண்டிருந்த வேளையில் காவல்த்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இண்ட்ராஃப் ஆதரவாளர்களுக்கும் காவல்த்துறையினருக்கும் ஏற்பட்ட நீண்ட நேர வாக்குவாதத்திற்குப்பின், வன்முறையைப் பயன்படுத்தி அறுவர் காவல்த்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஜெலாப்பாங் காவல் நிலைய தடுப்பு அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்சமயம் ஜெலாப்பாங் காவல் நிலையம் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் உள்ளே நுழையாதபடி மூடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
@மதியம் 1.15 : கைது செய்யப்பட்ட பேரா இண்ட்ராஃப் ஒருங்கிணைப்பாளர் பிரதமர், காவல்த்துறை தலைவர், பேரா மாநில காவல்த்துறை தலைவர் மற்றும் ஈப்போ ஓ.சி.பி.டி ஆகியோர்மீது காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் :
பேரா மாநில இண்ட்ராஃப் ஒருங்கிணைப்பாளர் திரு.ரமேஸ்
தைப்பிங் சிவா
ஜெயகுமார்
மோகன்
சுப்பிரமணியம்
லிங்கம்
சிலாங்கூர் மாநில நிலவரம்
இதனையடுத்து, சிலாங்கூர் மாநிலத்திலும் திட்டமிட்டப்படியே மதியம் தொடங்கப்பட்ட ‘இணடர்லோக் எதிர்ப்பு மகிழுந்து ஊர்வலம்’ டெம்ப்லர் சாலையில் சென்றுகொண்டிருக்கும்பொழுது கோம்பாக் வட்டார காவல்த்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஏழு மகிழுந்துகள் கோம்பாக் காவல் நிலையத்திற்கு திசைதிருப்பட்டுள்ளன. ஒரு பெண்மணியின் நகர்ப்படக்கருவி காவல்த்துறை அதிகாரியால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அப்பெண்மணியின் முகத்தில் குத்து விழுந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் :
சிலாங்கூர் மாநில இண்ட்ராஃப் ஒருங்கிணைப்பாளர் திரு.செல்வம்
திரு.ஜெயதாஸ்
திரு.சாமி
திரு.நவா
திருமதி லோசனா
இதற்கு முன்பு ராவாங்கில் ஊர்வலம் செல்லும்போது காவல்த்துறையினர் சாலை தடுப்பு போட்டிருந்ததாகவும், இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கோஷமிட்டவுடம் சாலை தடுப்பு திறக்கப்பட்டதாகவும் திரு.ஜெயதாஸ் கூறினார்.
@12.45 மதியம் : அதே சமயம் சுமார் 10 மகிழுந்துகள் தற்சமயம் பத்து கேவ்ஸ் வளாகத்தில் 27 பிப்ரவரி ’இண்டர்லோக்’ எதிர்ப்பு பேரணிக்கான துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகித்துக் கொண்டிருப்பதாக திரு.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
@மதியம் 2.15 : தற்சமயம் மகிழுந்து ஊர்வலம் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் தொடர்வதாக தகவல் கிடைத்துள்ளது.
@மதியம் 2.45 : பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் ஊர்வலம் சென்ற 20 மகிழுந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டு 8 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திரேவர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் :
திரு.கேப்டன் பாலா
திரு.மணியம்
திரு.லதா
திரு.ரவி
திரு.ஹரி
திரு.சரண்
திரு.தமிழ் செல்வம்
குமாரி சாந்தி
@ மதியம் 3.00 : கோலாலம்பூர் பங்சாரில் அமைந்திருக்கும் மனித உரிமைக் கட்சியின் தலைமையகத்தின் முன்பு 12 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் :
திரு.தியாகராஜன்
திரு.தினா
திரு.பாலா
திரு.மணி
திரு.நந்தன்
திரு.மகேன்
திரு.பரம்
திருமதி.கோகிலா
நெகிரி மாநில நிலவரம்
@மதியம் 1.00 : தற்சமயம் காவல்த்துறையினர் நெகிரி மாநில இண்ட்ராஃப் ஆதரவாளர்களின் மகிழுந்து ஊர்வலத்துடன் துணை செல்வதாக தகவல் கிடைத்துள்ளது.
@மதியம் 2.30 : தற்சமய்ம் நெகிரி செம்பிலான் மாநில இண்ட்ராஃப் ஒருங்கிணைப்பாளர் திரு.சிவகுமார் உட்பட 15 ஆதரவாளர்கள் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
@மதியம் 3.40 : ’பெர்காசா’ இயக்கம் சிரம்பான் சதுக்கத்தில் இண்ட்ராஃபிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், காவல்த்துறையினர் அவர்களை கைது செய்யவில்லை.
இதுவரையில் நெகிரி செம்பிலானில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 15 வயதிற்குட்பட்ட இரு பள்ளி மாணவர்களும் 10 வயதிற்குட்பட்ட ஒரு பள்ளி மாணவியும் அடங்குவர்.
@இரவு 10.40 : நெகிரி செம்பிலானில் கைதான 24 ஆதரவாளர்கள் நாளைவரையில் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது.
ஜொகூர் மாநில நிலவரம்
காலை தொடங்கிய ‘இண்டர்லோக் எதிர்ப்பு கருத்தரங்கு’ திரு.சம்புலிங்கம் தலைமையில் வெற்றிகரமாக நடந்து முடிந்ததும், மதியம் 2.00 மணியளவில் ஜொகூர் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.மோகன் தலைமையில் மகிழுந்து ஊர்வலம் தொடங்கியதாகவும், காவல்த்துறையினர் அவர்களை பின்தொடர்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
கெடா மாநில நிலவரம்
@மதியம் 1.55 : காலையில் தொடங்கிய ‘இண்டர்லோக் எதிர்ப்பு மகிழுந்து ஊர்வலம்’ வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும். இறுதியில் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் பிரதமர், காவல்த்துறை தலைவர், அட்டர்ணி ஜெனரல் மீது புகார் கொடுத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
அம்னோவை எதிர்க்கும் சக்தி இண்ட்ராஃபிற்கு மட்டுமே உண்டு!
இதுவரையில் நாடுதழுவிய நிலையில் பிடிப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 பேர் ஆவர். அவர்களில் 9 பெண்களும் நான்கு சிறுவர்களும் அடங்குவர்.
ஈப்போ (6)
ரவாங் (5)
சிரம்பான் (32)
பிரிக்பீல்ட்ஸ் (20)
பங்சார் எச்.ஆர்.பி தலைமையகம் (12)
கைது செய்யப்பட்ட, பட்டியலில் விடுப்பட்ட சில பெயர்கள் :
திரு.லிங்கேஸ்
திரு.டாக்டர் பாணி
திரு.சதீஸ்வரன்
திரு.கலை
திரு.சுகுமாறன்
திருமதி சரஸ்
திருமதி சரஸ்வதி
குமாரி தேவிகா
குமாரி ரீத்தா
போராட்டம் தொடரும்...
அன்புசார் உறவுகளே, இந்தப் படக்காட்சியை பாருங்கள்! அந்த வெகுளி இந்திய மாணவனின் மூளைக்குள் இனவாத நஞ்சுகள் விரும்பாலேயே காய்ச்சி ஊற்றப்படுகின்றன. அவன் முகத்தில் ஏற்படும் ஒருவிதமான அவமான முத்திரையை நாமும் ஒருகாலத்தில் தாங்கியிருக்கிறோம் என்பது உங்கள் நினைவுக்கு வருகிறதா? அந்த மாணவனின் முகம் உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாலிப முகம் என்பதனை மட்டும் மறந்துவிடாதீர்கள் உறவுகளே!
’இண்டர்லோக்’ எனும் மனோவியல் போர் தனது உக்கிரத்தை இந்திய சமூகம் மீது கடுமையாக்குவதற்குள் ஒரே மலேசிய இந்தியன் எனும் உணர்வோடு விழித்தெழுவோம்!
நம்மை இந்நாட்டின் அவமானச் சின்னங்களாக கருதி நடத்திவரும் அம்னோவின் ’மலாய் மேலாண்மை’ எனும் விஷமத்தன கோட்பாட்டினை வேரறுப்போம், வாரீர்!
27 பிப்ரவரி, நம் இனத்தின் மற்றுமொரு விடிவெள்ளி! அம்னோ இனவாதத்திற்கோர் மரணவெடி!
http://www.youtube.com/watch?v=YVUsoPayw7w
போராட்டம் தொடரும்...
Blogger templates made by
AllBlogTools.com
Back to TOP