புவா பாலா வெள்ளிக்கிழமை உடைக்கப்படுமாம்!

>> Tuesday, August 4, 2009


சற்று முன்பு பினாங்கு மாநில அரசுடனான புவா பாலா மக்களின் சந்திப்புக் கூட்டத்தில், லிம் குவான் எங் மீண்டும் அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்.

சந்திப்புக் கூட்டத்தில் கிராம மக்களிடம் அவர் கூறியதாவது ;

புவா பாலா கிராமத்தில் 1200 சதுர அடியில் இரண்டு மாடி வீடு. மேல் மாடி 600 சதுர அடி, கீழ் மாடி 600 சதுர அடி. வீட்டிற்கு வெளியில் கூடுதல் 200 சதுர அடி நிலம்.
அதாவது 6.5 ஏக்கர் புவா பாலா கிராம நிலத்தில் 0.7 ஏக்கர் நிலம் 24 குடும்பங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இவ்வீடுகளைக் கட்டி முடிக்கும்வரையில் அக்கிராம மக்கள் தங்குவதற்கு தற்காலிக இடமோ, அல்லது வாடகைப் பணமோ ஏதும் கொடுக்கப்படாது. ஒரே வீட்டில் வசிக்கும் கூட்டுக் குடும்பங்களுக்கு வீடோ அல்லது பணமோ கொடுக்கப்படாது.


நுஸ்மெட்ரோ அளிக்கும் இம்முடிவை மக்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும், இல்லையெனில் நுஸ்மெட்ரோ வருகின்ற வெள்ளிக்கிழமை கிராமத்தை தரைமட்டமாக்கிவிட்டுச் சென்றுவிடுவார்கள் என லிம் குவான் எங் கிராம மக்களை வற்புறுத்தியிருக்கிறார். இதற்கிடையில் கூட்டரசு நீதிமன்றத்தில் இந்நில விவகாரம் குறித்து புவா பாலா வழக்கறிஞர் திரு.டர்சான் சிங் வழக்கு ஒன்றினை பதிவு செய்துள்ளார். அவ்வழக்கு எதிர்வரும் 18-ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் செவிமடுக்கப்படும். எனவே, கிராமத்து வீடுகளை நில மேம்பாட்டாளர்கள் உடைக்கக்கூடாது என்பது சட்டம். காரணம், இவையனைத்தும் ஆதாரங்கள் என்கிற அடிப்படையில் ஒரு செங்கல்லைக் கூட அசைக்கக்கூடாது. அப்படி அசைத்தால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் ஒரு செயலாகக் கருதப்படும். நுஸ்மெட்ரோ வருகின்ற வெள்ளிக்கிழமை வீடுகளைத் தரைமட்டமாக்கப்போவதாகக் கூறியுள்ளார்கள்.

இதனைச் சொல்லியே மக்களை பயமுறுத்தி, கொடுக்கும் ரொட்டித் துண்டுகளை வாங்கிக் கொண்டுச் செல்லுங்கள் என்கிறது பினாங்கு மாநில அரசு.

அவர்கள் பரிந்துரைக்கும் திட்டத்திற்குச் சம்மதம் தெரிவிப்பவர்கள் ஒப்பந்தக் கடிதத்தில் கையெழுத்திடுமாறு லிம் குவான் எங் மக்களை கேட்டுக் கொண்டார். ஆனால், மக்கள் தங்களுடைய முடிவை ஏதும் கூறாமல் வந்துவிட்டனர். இச்சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு கிராம மக்களின் வழக்கறிஞருக்கு வழக்கம்போல் அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு கொலைக் குற்றவாளிக்குக் கூட தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், தமக்கென்று ஒரு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளும் உரிமையை சட்டம் நமக்கு வழங்குகிறது. ஆனால், 200 ஆண்டுகாலமாக இந்நிலத்தில் வாழ்ந்துவரும் இந்த மக்களுக்கு ஒரு வழக்கறிஞரை தங்களுடைய பிரதிநிதியாக வைத்துக் கொள்ளக்கூட அனுமதியளிக்கப்படவில்லை! இவர்கள் செய்த குற்றம் என்ன? 200 ஆண்டுகாலமாய் தன்னுடைய சொந்த உழைப்பைக் கொட்டி இந்நிலத்தில் வாழ்ந்தது குற்றமா?

அம்னோ அரசாங்கம்தான் நம்மை ஏமாற்றிவிட்டது, மக்கள் கூட்டணியாவது எங்களைக் காப்பாற்றும் என நம்பியிருந்த இந்த அப்பாவி மக்களை அரசியல் இலாபத்திற்காக பகடைக் காய்களாகப் பலரும் பயன்படுத்திவிட்டனர்.

இம்மலேசிய திருநாட்டில், அதிகாரத்துவமும் முதலாளித்துவமும் எப்படியெல்லாம் ஏழை மக்களை நசுக்கிப் பிழிகிறது என்பதனைக் கண்கூடாகவே பார்த்து வருகிறோம். அதற்கு ஒரு நல்ல படிப்பினையான உதாரணம் கம்போங் புவா பாலா!

இன்னும் 48 மணி நேரங்களே எஞ்சியுள்ளன. நாம் என்ன செய்யப் போகிறோம்? வரலாற்றைப் புரட்டிப் போட வேண்டுமா? மாற்றைத்தை விரும்பினால் மட்டும் போதாது, அம்மாற்றத்தை நாம்தான் ஏற்படுத்த வேண்டும்! இந்நாட்டில் தமிழனுக்கென்று 200 ஆண்டுகால தொன்மையான கிராமம் காப்பாற்றப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா? உங்கள் வருகையை எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று நிச்சயப்படுத்துங்கள்! இன்று 1000 பேர் திரண்டதைக் கண்டு அஞ்சியவர்கள் வெள்ளிக்கிழமையன்று திரளும் மக்கள் வெள்ளத்தைக் கண்டு தங்களுடைய முடிவையே மாற்றிக் கொள்ள வேண்டும்!

உடனடியாக லிம் குவான் எங்கை தேசிய நில சட்டவிதி பிரிவு 76- (National Land Code Section 76) பயன்படுத்தி புவா பாலா நிலத்தை கையகப்படுத்தி கிராம மக்களிடமே ஒப்படைக்குமாறு நெருக்குதல் கொடுங்கள். நாட்டில் பல இயக்கங்கள், சங்கங்கள் இருக்கின்றன. அனைத்து இயக்கங்களும் அவர்களுக்கே உரித்த பாணியில் நூதன போராட்டத்தை முன்னின்று மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

Unknown August 7, 2009 at 2:15 PM  

ஆசிரியரின் கவனதிற்கு ,

நம் பிரதமரின் அகப்பக்கதில் தமிழ் மறுக்கப்பட்டுளது.
அதன் தொடர்பில் இந்த கடிதத்தை அனுப்புகிறேன்.
தயவு செய்து பிரசுரியுங்கள்.

நன்றி.



பிரதமரின் அகப் பக்கத்தில் தமிழுக்கு இடம் வேண்டும்

வணக்கம் ,

உதட்டளவில் தேன் , உள்ளம் முழுதும் ஆளகால விழம்.
இதுதான் மலேசிய அரசு இந்நாட்டு இந்தியர்களின் பால் நடந்து கொள்ளும் விதம்!

ஓரே மலேசிய இனம் என்று அறிவித்த நாவில் எச்சில் காயும் முன் நம் பிரதமர் அறிமுகப்படுத்திய 1malaysia.com.my எனும் அகப் பக்கத்தில் இந்நாட்டு மக்கள் தொகையில் மூண்றாவது பெரிய இனமாகிய இந்தியர்கள் பேசும் தமிழ் மொழிக்கு இடமில்லை !!!

பல்லினங்கள் வாழும் இத்திருநாட்டில் , அந்தந்த இனங்களின் மொழி , கலை , கலச்சாரம் , பண்பாடு , என அனைத்து அம்சங்களையும் மதித்து அங்கீகரிப்பதன் மூலமே ஒண்றினைந்த ஒரே மலேசிய இனத்த்தை உருவாக்க முடியும் என்பதை இந்த அரசாங்கம் பலமுறை மிக மிக சவுரியமாக மறப்பதை போல் நடித்து உரிமைகளை மறுப்பதை மக்கள் இனியும் நம்ப தயாரில்லை !!

மொழி ஒர் இனத்தின் ஆனிவேர் , முதுகெலும்பு , அடையாளம் , எதிர் கால சந்ததியினரின் தொப்புல் கொடி என்பதை நன்கு அறிந்திருந்தும் இந்த அரசாங்கம் ஏன் இந்நாட்டு குடிமக்களாகிய இந்திய வம்சாவளியினரை கங்கனம் கட்டி வஞ்சிக்கிறது???

தமிழை ம்றுத்ததின் மூலம் இந்த அரசு நமக்கு உணர்த்துவதுதான் என்ன ? தேசிய நீரோட்டத்திற்க்கு இந்தியர்கள் தேவை இல்லையா ? அல்லது ஒரே மலேசிய இனம் இந்தியர்களின் புதைகுழியின் மீது புலரப்போகிறதா ???

ஆங்கிலம் , மலாய் , சீனம் ஆகிய மொழிகளில் பிரசுரிக்கப்பட்ட பிரதமரின் அகப் பக்கத்தில் தமிழை மட்டும் குழி தோண்டி புதைத்த காரணத்தை மலேசிய பிரதமர் இந்நாட்டு இந்தியர்களுக்கு விளக்கியே ஆக வேண்டும் !!

தெருவுக்கு ஒரு அரசு சாரா இந்தியர் இயக்கமும் , விகிதா சாரத்தை விஞ்சும் அரசியல் கட்சிகளும் இனம் புதைக்கப் படுவதை கைகட்டி வேடிக்கை பார்க்கும் அவலமும் இந்நாட்டில் அறங்கேற்றம் கண்டு கொண்டிருப்பது இந்த இனதிற்க்கு என்றும் நீங்கா சாபக்கேடோ !!!!


நன்றி ,

சம்புலிங்கம்
கோலாலம்பூர்

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP