பாகான் பினாங்கு இந்திய வாக்காளர்கள் என்ன உறுதி எடுக்க வேண்டும்?

>> Wednesday, September 30, 2009

இண்ட்ராஃப் மக்கள் சக்தி

பாகான் பினாங்கு இந்திய வாக்காளர்கள் என்ன உறுதி எடுக்க வேண்டும்?

வாக்களிப்பு தவிர்ப்பு பிரச்சாரம்

மக்கள் சக்தியைக் காட்டுவோம்!



பாகான் பினாங்கில் தேசிய முன்னணி அல்லது பாஸ் (மக்கள் கூட்டணி) ஆகியவற்றிற்கு வாக்களிக்காதீர்கள்!

இதுவரையில் இரு அரசியல் கூட்டணிகளுமே இந்தியர்களுக்கு எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.

இந்தியர்கள், தாங்கள் வேண்டியதை, 12-ஆம் பொதுத் தேர்தலுக்குப் பிறகும் பெறவில்லை. இதுவே 12-ஆம் பொதுத் தேர்தலுக்குப் பிந்திய நமது கருப்பொருள்.

இந்தியர்களை ஒதுக்கி வைத்தல், மற்றும் ஓரங்கட்டுதல் ஆகிய நடவடிக்கைகள், மக்கள் கூட்டணி ஆளும் 4 மாநிலங்களில் மேலும் துரிதமாகத் தொடர்கிறது. அம்னோ அரசு, தனது இனவாதக் கொள்கையை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. இந்திய சமூகத்தின் பல்வேறு மனக்குமுறல்கள், மனவேதனைகள், ஒரு தீர்வின்றி அல்லலுறுகின்றன.

பினாங்கில் பொய் பேசும் DAP மாநில முதலமைச்சர், சில DAP இந்திய மண்டோர்கள், நிறைவேற்றப்படாத, சிதைக்கப்பட்ட வாக்குறுதிகள் ஆகியனதான் உள்ள. இந்தியர்களின் மிக முக்கியமான ஒரு பிரச்சனையான புவா பாலா கிராம விசயத்தில், தன் கையை கழுவி, நழுவி விட்டது DAP.

PKR-இல், கோழைகள் தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். இந்தியர்களின் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்க இவர்கள் எங்கும் காணப்படுவதில்லை.


பேராக் மாநிலத்திலும் சிலாங்கூர் மாநிலத்திலும் அதிகமான நிலங்கள் சீனர்களுக்காக மக்கள் கூட்டணி அரசாங்கம் வழங்கி உள்ளது. ஆனால், இந்தியர்களுக்கு அப்படிப்பட்ட எந்தவொரு நிலமும் வழங்கப்படவில்லை. மக்கள் கூட்டணி அரசாளும் மாநிலங்களில் ஆலயங்கள் தொடர்ந்து உடைக்கப்பட்டு வருகின்றன. இந்தியர்களின் சமய சின்னங்களுக்கு கேடு செய்வது, இந்தியர்களை இழிவுபடுத்துவது, பரவாயில்லை என்று கூறுகிறார் உள்த்துறை அமைச்சரான அம்னோவின் இசாமுடின். இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க கூட்டரசு அரசாங்கம் நான்கு மாநிலங்களில் உள்ள மக்கள் கூட்டணியை சாக்காக வைத்துக் கொண்டு, இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு ஒன்றுமே செய்யாமல், தனது மாறாத இனவாத கொள்கைகளைக் கொண்டு இந்தியர்களை மேலும் மேலும் ஒதுக்கி வைக்கின்றது.

இவை எல்லாம் ஏன் மென்மேலும் தொடர்கின்றன? காரணம், PKR, DAP, MIC, UMNO ஆகிய கட்சிகள் நம் வாக்குகளை மட்டும்தான் தேடுகின்றன. அவ்வளவுதான்! பதிலுக்கு மிகவும் அற்பமான, சில்லறையான பிச்சை போடுகிறார்கள். பள்ளிகளுக்கு மிகவும் அற்பமான, குறைந்த, பண உதவி, ஓரிரண்டு நிலங்கள் அல்லது சிறு சிறு அன்பளிப்புகள் வழங்கப்படுகின்றன, அவ்வளவுதான்! அவர்கள், நமக்கு ஏதாவது செய்து கொண்டே இருப்பது போல தோன்ற வேண்டும், அல்லவா? அதற்காகத் தான் இந்த சொற்பமான உதவிகள் எல்லாம்! இவர்களைப் பொறுத்தவரையில், நாம் அதைவிட முக்கியமானவர்கள் அல்ல. எனவே, நம் சமூகத்தின் நலனில் சில்லறைத் தனமும் அற்ப குணமும் கொண்டிருக்கின்றனர். ஆம்! அவர்களைப் பொறுத்தவரையில் நாம் மிகவும் அற்பமானவர்கள், அதைவிட முக்கியமானவர்கள் அல்ல. எனவே, நம்மை அதிகம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை!

இந்நாட்டு இந்தியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, ஒரு முழுமையான அணுகுமுறை தேவை. இதுவே நமது கோரிக்கை. மிகவும் முக்கியமான அடிப்படைத் தேவைகளை முதலில் பார்ப்போம். பிறகு மற்ற பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்கலாம், கவனிக்கலாம், திட்டமிடலாம். இந்தியர்களிடையே நிலவும் குற்றச் செயல்கள், தற்கொலைகள், மதுபான பிரச்சனைகள், போதைபொருள் பாதிப்புகள், வேலை இல்லாத் திண்டாட்டம், வணிகர்களுக்கான கட்டுப்படுத்தப்பட்ட குறைந்த வாய்ப்புகள், அரசாங்க நிறுவனங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்வி மற்றும் பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்புகள் மிகவும் குறைந்து வருவது, ஆகியன நம்முடைய பெரும் பிரச்சனைகள். தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி ஆகிய இரு அரசாங்கங்களும் நம்மை ஒரு பொருட்டாகவும் மதிக்கவில்லை. எனவேதான், நாம் கூறும் நமது பிரச்சனைகளுக்கு ஒரு முழுமையான தீர்வுகாண அவர்கள் சிறிதும் அக்கறை காட்டவில்லை. இண்ட்ராஃப் முன்வைத்த 18 கோரிக்கைகள் மிகவும் தெளிவாக, இந்நாட்டு இந்தியர்களுக்கு என்ன தேவை என்பதனை எடுத்துரைக்கின்றன. நாம் இவ்வளவு கூறி இருந்தும் கூட இவ்விரு அரசாங்கங்களும் நம் பிரச்சனைகள் தொடர்பாக முழுமையான தீர்வை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளேதும் எடுக்கவில்லை.

நமக்கு இன்று இருக்கும் ஒரே வழி, அவர்களை எங்கு தீண்டினால் வலிக்குமோ, அங்கு தீண்டுவதுதான்.

நாம் நமது வாக்குகளை மிகவும் அறிவுப்பூர்வமாக செலுத்தி அவர்களுக்கு நம் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும். அவர்களது அரசியல் கணிப்பில் நம்மையும் முக்கியமான தரப்பினராகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த கணிப்பின் ஒரு சோதனைக் களமாக, நமக்கு மாற்றங்கள் கொண்டு வரும் வகையில், பாகான் பினாங்கில் நமது வாக்குகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். பாகான் பினாங்கு தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்திருப்பினும், அது நமக்கு எந்தவொரு முக்கிய மாற்றங்களையும் கொண்டு வராது.

நெகிரி செம்பிலானில் மேலும் ஒரு சட்டமன்ற இடம் குறைந்தாலோ, கூடினாலோ, தேசிய முன்னணியிலும் மக்கள் கூட்டணியிலும் ஏதும் பெரிதாக மாறிவிடாது. ஆனால், நாம் நமது வாக்குகளைத் தொட்டு எடுக்கும் முடிவு, நம் வாக்குகளின் மேல் ஆர்வம் உள்ளவர்களிடம் நமது வாக்குகளுக்கு மதிப்பு உண்டு என ஆழமான ஒரு கருத்தை சமர்ப்பிக்கலாம்.

இங்கு 14,192 வாக்காளர்கள் உள்ளனர். 80% வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அப்படியாயின், 11,345 வாக்காளர்கள் தேர்தல் அன்று வருவர். இவர்களில் 66% அல்லது 7,500 மலாய் வாக்காளர்கள், 19.9% அல்லது 2270 இந்திய வாக்காளர்கள், 10.5% அல்லது 1135 சீன வாக்காளர்கள் இருப்பார்கள். கடந்த பொதுத்தேர்தலில் அம்னோ வேட்பாளர் 6430 வாக்குகள் பெற்று, 2,333 பெரும்பான்மை வாக்குகளில் வெற்றிப் பெற்றார். அதே தேர்தலில், பாஸ் வேட்பாளர் 4,097 அல்லது 39% வாக்குகளைப் பெற்றார். ஆனால் அது நடந்தது, இந்தியர்களும் சீனர்களும் பாரிசான் அரசாங்கத்தை அடியோடு வெறுத்த காலக்கட்டத்தில். இந்த உண்மையானது, வருகின்ற இடைத் தேர்தலில் மக்கள் கூட்டணி தேர்தலில் தோல்வியுறும் அபாயத்தைப் பிரதிபலிக்கின்றது.

பாகான் பினாங்கில், அனைத்து இந்தியர்களும் வாக்களிப்பதை தவிர்ப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி ஆகிய இரண்டும் நமக்கு நல்ல கட்சியாக அமையவில்லை. இதன் விளைவாக, மக்கள் கூட்டணி இந்த இடைத் தேர்தலில் தோல்வியுறட்டும்! நம் வாக்குகளின் மூலம், நாம் ஒரு மாற்றத்தை கொண்டு வருவோம். மக்கள் கூட்டணி நமது இந்த முக்கியமான கருத்தை தொடர்ந்து கண்டுகொள்ளாமல், ஒதுக்கி வைத்தால், அதற்கான விளைவை அவர்கள் எதிர்கொள்ளட்டும். இந்தியர்களின் வாக்கு முக்கியமானது என்றும், அந்த முக்கியமான வாக்குகளை அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வு தோன்றினால், அவர்கள் அதை செயலிலும் கட்சிக் கொள்கைகளிலும் காட்ட வேண்டும். வெற்றுப் பேச்சும், வெற்று வாக்குறுதிகளும் நமக்குத் தேவையில்லை.

அம்னோவை காட்டிலும், மக்கள் கூட்டணியைத்தான் நாம் விரும்புகிறோம். ஆனால், மக்கள் கூட்டணி செயலில் இறங்கி தங்களின் ஆட்சிக் கொள்கைகளின்வழி அவற்றை நிரூபித்தாலே ஒழிய, நாம் அவர்களுக்கு நமது ஆதரவை தர மாட்டோம்.

நாம் அவர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்இரு வழிகளிலுமே!

நாம் இந்த கருத்தை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும். நமது கருத்தை வெளிப்படுத்த இதுவே ஒரே வழி, இதுவே நமக்கு கிடைத்த வாய்ப்பு, சந்தர்ப்பம்!

ஆக்கம் :

-சுப்பிரமணிய பாரதி-

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

6 கருத்து ஓலை(கள்):

Sasi October 1, 2009 at 10:08 AM  

We are minority community at here. We should not hope too much from them.Pakatan had done quite enough for kampung buah pala people. We should happy with what they gave us.

Tamilvanan October 1, 2009 at 6:11 PM  

உங்க‌ளின் முர‌ண்பாடுக‌ள்

//வாக்களிப்பு தவிர்ப்பு பிரச்சாரம்//

//நாம் நமது வாக்குகளை மிகவும் அறிவுப்பூர்வமாக செலுத்தி அவர்களுக்கு நம் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும்//

//பாகான் பினாங்கில், அனைத்து இந்தியர்களும் வாக்களிப்பதை தவிர்ப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.//

உங்க‌ளுடைய‌ ப‌திவு குழ‌ப்ப‌ம் நிறைந்தாக‌ உள்ள‌து. முத‌லில் நீங்க‌ள் தெளிவு பெறுங்க‌ள்.

ஏன் பாகான் பினாங்கில் ம‌ட்டும் ?

இனி எல்லா தேர்த‌ல்க‌ளையும் த‌விர்க்க‌லாமே!!!!!!

இந்தியர்களுக்கு நிச்ச‌ய‌ம் மாற்ற‌ம் கிடைக்கும்.ஏமாற்ற‌ம்,ஏமாற்ற‌ம்,ஏமாற்ற‌ம்

உண‌ர்ச்சி ப‌டுத‌லை விட‌ அறிவு வ‌ச‌ப் ப‌டுவ‌து ந‌ன்று.

Sathis Kumar October 1, 2009 at 6:55 PM  

//We are minority community at here. We should not hope too much from them.Pakatan had done quite enough for kampung buah pala people. We should happy with what they gave us.//

This is what i used to call as "State of Opression"..

Sathis Kumar October 1, 2009 at 7:26 PM  

//உங்க‌ளின் முர‌ண்பாடுக‌ள்

//வாக்களிப்பு தவிர்ப்பு பிரச்சாரம்//

//நாம் நமது வாக்குகளை மிகவும் அறிவுப்பூர்வமாக செலுத்தி அவர்களுக்கு நம் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும்//

//பாகான் பினாங்கில், அனைத்து இந்தியர்களும் வாக்களிப்பதை தவிர்ப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.//

உங்க‌ளுடைய‌ ப‌திவு குழ‌ப்ப‌ம் நிறைந்தாக‌ உள்ள‌து. முத‌லில் நீங்க‌ள் தெளிவு பெறுங்க‌ள்.

ஏன் பாகான் பினாங்கில் ம‌ட்டும் ?

இனி எல்லா தேர்த‌ல்க‌ளையும் த‌விர்க்க‌லாமே!!!!!!

இந்தியர்களுக்கு நிச்ச‌ய‌ம் மாற்ற‌ம் கிடைக்கும்.ஏமாற்ற‌ம்,ஏமாற்ற‌ம்,ஏமாற்ற‌ம்

உண‌ர்ச்சி ப‌டுத‌லை விட‌ அறிவு வ‌ச‌ப் ப‌டுவ‌து ந‌ன்று.//

வாக்களிப்பை புறக்கணிப்பதும், வாக்குகளை அறிவுப்பூவமாக பயன்படுத்துவதும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு உட்பட்டது.

வாக்களிப்பை புறக்கணிப்பது குறுகியகால மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, அதுவே நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு அச்சாணி போடுவதைப் போல் அமையும்.

பாகான் பினாங்கில் இந்தியர்களை வாக்களிப்பதை தவிர்க்கச் சொன்னது உணர்ச்சியின் அடிப்படையில் அல்ல. உலக வரலாற்றில் பல நாடுகளில் மாற்றங்களை எதிர்ப்பார்த்து வாக்களிப்பு புறக்கணிப்பை ஆயுதமாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு ஒரு கருத்தை மிகத் தெளிவாக வலியுறுத்திய சம்பவங்கள் பலதடவை நடந்துள்ளன.

மலேசியாவைப் பொறுத்தமட்டில் இவ்விதமான புரட்சி இன்னும் புழக்கத்திற்கு வரவில்லை. 52 ஆண்டுகளுக்குப் பின்பு இப்பொழுதுதானே மக்கள் சற்று விழித்திருக்கின்றனர்.

கடந்த பொதுத் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் வாக்குகள் பாரிசானின் மீதுள்ள வெறுப்பினால் மொத்தமாக எதிர்கட்சிக்கு திரும்பியது. பக்காதான் மட்டுமல்ல, பாரிசானை எதிர்த்து வேறு எந்த கட்சி நின்றிருந்தாலும் அவர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள். பாரிசானின் மீதுள்ள வெறுப்பை தங்களின் ஓட்டுகளின்வழி எதிர்கட்சிக்கு திருப்பிவிட்டதும் ஒருவிதமான புறக்கணிப்புதானே.. இது அரசியல் ரீதியில் மக்களிடையே ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சி. இனி அடுத்தக்கட்டமாக மக்களே அரசியலை ஏற்று நடத்த வேண்டும்!

அரசியல் நிலவரங்களை அவதானித்து
வாக்குகளை திருப்பி விடுவதும், வாக்களிப்பதை புறக்கணிப்பதும் மக்களின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது.

பாகான் பினாங்கு இந்திய மக்கள் வாக்களிப்பை புறக்கணிப்பார்களா இல்லையா என்பது அவர்களின் விருப்பம். ஆனால், புறக்கணித்தால் சிறுபான்மை இனத்தவரின் வாக்குகளின் முக்கியத்துவத்தை இரு கட்சிகளுக்கும் நன்கு உணர்த்த முடியும் என்பதே நம்முடைய அடிப்படை கருத்து!

ஒவ்வொருமுறையும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு பாதகம் ஏற்படும்பொழுது, அவர்களே முன்னின்று அரசியலை நடத்திக்காட்ட வேண்டும். அப்பொழுதுதான் அரசியல் தீர்வு கிடைக்கும்!

மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது! மக்கள்தான் போட வைக்க வேண்டும்!

Tamil Usi October 14, 2009 at 9:56 AM  

நண்பருக்கு வணக்கம். பார்த்து பேசி வெகு நாட்கள் ஆகி விட்டது. எப்படி இருக்கிறீர்கள்...

Sathis Kumar October 18, 2009 at 11:46 PM  

//நண்பருக்கு வணக்கம். பார்த்து பேசி வெகு நாட்கள் ஆகி விட்டது. எப்படி இருக்கிறீர்கள்...//

நான் நலம் அன்பரே.. நலமறிய ஆவல்.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP