தேவாலயங்கள் தாக்கப்பட்டதை கண்டிக்கும்வகையில் இண்ட்ராஃப் ஏற்று நடத்தும் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணி

>> Saturday, January 9, 2010



ஊடக அறிக்கை 10/01/10

கரு : அதிகாரத்துவத் தூண்டுதலின் பேரில் நான்கு கிருத்துவ தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசி தாக்கியதை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல்

அண்மையில் மலேசியாவில் அரசியல் நோக்கங்கொண்ட அம்னோ அரசின் தூண்டுதலின்பேரில் நான்கு கிருத்துவ தேவாலயங்கள் தீக்குண்டுகள் கொண்டு தாக்கப்பட்டதை இண்ட்ராஃப் வன்மையாகக் கண்டிக்கிறது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை அம்னோ அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சில தரப்பினரை தூண்டிவிட்டு தனது இருப்பினை அச்சுறுத்தலின் மூலம் மேலும் பலப்படுத்திக் கொள்வதற்காக, பொதுமக்கள் மத்தியில் மதக்கலவரத்தை தூண்டிவிட எத்தனித்திருக்கிறது.

இத்தீக்குண்டு தாக்குதல்களைத் தவிர்த்து சென்ற வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப்பின் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் மருட்டலாகவும், பகைமையைத் தூண்டும்வகையிலும் இருந்தன. தேசநிந்தனைக் குற்றச்சாட்டிற்காக இந்த் ஆர்ப்பாட்டக்காரர்களின்மீது அம்னோ அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இநநாட்டைப் பொறுத்தமட்டில், நம் அரசியலமைப்புச் சட்டம் வழிவகுக்கும் சமயச் சுதந்திரமானது இன்றுவரையில் கானல் நீராகவே இருந்துவருகிறது.

அம்னோ அரசாங்கத்தின் பக்கச் சார்புடைய நடைமுறைக்கொள்கைகளின் தொடர்பாதிப்புகளை எதிர்க்கொண்டுவரும் மலேசியச் சமுதாயம் முன்பைவிட பக்குவமடைந்திருப்பதை இன்றைய அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறியிருக்கின்றது.

மலேசிய கிருத்துவ நண்பர்களுக்கெதிராக அவர்களின் தேவாலயங்களின்மீது நடத்தப்பெற்ற தீக்குண்டு தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்வகையிலும் இண்ட்ராஃப் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணியை ஏற்று நடத்தவுள்ளது. அனைத்து அமைதி விரும்பிகளையும், சனநாயகத்தின்மீது நம்பிக்கைக் கொண்டுள்ள சகோதர சகோதரிகளையும் எங்களோடு இவ்வமைதிப் பேரணியில் இணைந்து, மலிந்துவரும் சமய சுதந்திரமும், சிறுபான்மை உரிமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதற்கான பலமிக்க குரலை எழுப்புவதற்கு அழைக்கிறோம். இந்நாட்டில் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளையும் அநியாயங்களையும் அரசாங்கம் கடுமையாகக் கருதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைப்போமாக.

திகதி : 13 சனவரி 2010

நேரம் : 8.00 pm

இடம் : அசம்சன்ஸ் தேவாலய நுழைவாயில் , டெம்ப்லர் சாலை பெட்டாலிங் ஜெயா (அசுந்தா மருத்துவமனை அருகில்)

இம்மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணியில் கலந்துகொள்ள எண்ணங்கொண்டவர்கள் எங்களுடைய தகவல் ஒருங்கிணைப்பாளர் திரு.செயதாசு அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

அலைப்பேசி எண்கள் : 012-6362287

நன்றி

பொ.வேதமூர்த்தி

தலைவர்

இண்ட்ராஃப்

போராட்டம் தொடரும்...

Read more...

மலேசிய இந்தியர்களின் மனித உரிமை ஆண்டறிக்கை 2009

>> Thursday, January 7, 2010

2008-ஆம் ஆண்டைப் போலவே, 2009-ஆம் ஆண்டிற்கான மலேசிய இந்தியர்கள் குறித்தான மனித உரிமை ஆண்டறிக்கையை புது தில்லியில் நடைப்பெற்றுவரும் பிரவாசி பாரதிய திவாசு (புலம்பெயர் இந்தியர் மாநாடு)ஆண்டுக்கூட்டத்தில் இண்ட்ராஃப் தலைவர் திரு.பொ.வேதமூர்த்தி சமர்ப்பித்துள்ளார். கடந்தாண்டில் சிறுபான்மை மலேசிய இந்தியர்களுக்கு எதிராக மத்திய மற்றும் மாநில அரசினால் நடத்தப்பெற்ற 15 வகையான மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தெளிவாகவும் விரிவாகவும் வரையப்பட்டுள்ள இவ்வறிக்கையை அனைவரும் படித்து பிறருக்கும் அறியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Malaysian Indians Annual Human Rights Report 2009

2008-ஆம் ஆண்டின் மலேசிய இந்தியர்களின் மனித உரிமை ஆண்டறிக்கையைப் படிக்க இங்கே சுட்டுக : அறிக்கை 2008

போராட்டம் தொடரும்...

Read more...

பிறப்பு பத்திரம் இல்லையென்றால் பள்ளிக்கூட நுழைவு இல்லை!

>> Friday, January 1, 2010


டத்தோ நஜிப் ரசாக்
மலேசிய பிரதமர்
Perdana Menteri Malaysia
Blok Utama Bangunan Perdana Putra,
Pusat Pentadbiran Kerajaan Persekutuan,
62502 Putrajaya

டான் ஸ்ரீ முயிடின் யாசின்
மலேசிய துணைப் பிரதமர்
Perdana Menteri Malaysia
Blok Utama Bangunan Perdana Putra,
Pusat Pentadbiran Kerajaan Persekutuan,
62502 Putrajaya

பிறப்பு பத்திரம் இல்லையென்றால் பள்ளிக்கூட நுழைவு இல்லை

மதிப்பிற்குரிய பிரதமர் மற்றும் துணைப்பிரதமர் அவர்களுக்கு,

மேலே குறிப்பிட்டது போல,

ஒரு தமிழ் நாளிதழில் 2007ஆம் ஆண்டின் இறுதியி¢ல், கல்வி அமைச்சால் தமிழ்ப்பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் 2008ஆம் ஆண்டு முதல் பிறப்பு பத்திரம் கிடைக்கப்பெறாத மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் நுழைய அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தது. அதையடுத்து வந்த நாளிதழ்களில் பிறப்புப் பத்திரம் இல்லாத மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்படவில்லை என்றும் முக்கியமாக தமிழ்ப்பள்ளிகளில் அவர்கள் சேர்க்க மறுக்கப்படுகிறார்கள் என்ற செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளன.

இதையொட்டி நாங்கள் தங்களுக்கு தெரிவிக்க விரும்பும் கருத்து என்னவென்றால் இப்படி பிறப்புப் பத்திரம் இல்லாத காரணத்தால் பள்ளி நுழைவு மறுக்கப்படும் மாணவர்களின் நிலை எதிர்காலத்தில் ஒரு கேள்விக்குறியாகிவிடும். இந்நிலை நீடித்து வந்தால் ஆரம்பப் பள்ளியைத் தொடர்ந்து, இடைநிலைப்பள்ளி, தொழில்கல்வி கல்லூரிகள், மேற்படிப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றுமின்றி அவர்களுக்கு கல்வி உதவிக்கடன் மற்றும் உபகாரச்சம்பளம் பெறுவதிலிருந்து நிராகரிக்கப்படுகிறார்கள். அதோடு மட்டுமின்றி அவர்கள் மோட்டார் சைக்கிள், வேன், பேருந்து மற்றும் லாரி ஓட்டுவதற்கு லைசன்ஸ் மறுக்கப்பட்டு வேலை தேடி சம்பாதிக்கும் வாய்ப்பையும் இழப்பார்கள். இதுமட்டுமின்றி அவர்கள் ஒரு தொழில் செய்வதற்குக் கூட லைசன்ஸ் (அனுமதி) கிடைக்காது. ஒரு சாப்பாட்டுக் கடையைக் கூட அவர்களால் திறக்க இயலாது. பிறப்புப் பத்திரமின்றி அவர்கள் எவ்வித திறனும் தேவைப்படாத காவலாளி, தொழிற்சாலை பணியாளர் மற்றும் அலுவலகத்தில் சுத்தம் செய்யும் வேலைக்குக் கூட ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள்.

இறுதியில் அவர்கள் திருமணத் தடையை எதிர்நோக்குவார்கள். அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களின் அடுத்த சந்ததியினர் இதே பிரச்சனையில் மூழ்கி இவர்கள் அனுபவித்த துயரங்கள் மீண்டும் ஒரு சுழற்சியாக உழன்று கொண்டிருக்கும். இவ்வாறு பிரச்சனைகளை எதிர்நோக்கும் இந்திய இளைஞர்கள் வேறு வழியின்றி குண்டர் கும்பல் மற்றும் சமூகச்சீர்கேடுகளில் ஈடுபடுகிறார்கள்.

இதனால் அரசாங்கம் 2010ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் RM 1 மில்லியன் ரிங்கிட்டை தேசிய காவல் துறை, பாதுகாப்பு மற்றும் குற்றங்களை கையாள்வதற்கென ஒதுக்கியுள்ளது. இதில் கிள்ளான் நகரில் கடந்த 8/11/09ஆம் நாளன்று ஒரே நாளில் ஐந்து இந்திய இளைஞர்களை சுட்டு கொன்றது. அதிலும் ஒரு இளைஞனுக்கு 17 வயதுதான் ஆகிறது என்கிற விஷயம் மிகுந்த வேதனையளிக்கிறது.

ஏறக்குறைய 150,000 இந்தியக் குழந்தைகள் மலேசியாவில் பிறந்திருந்தாலும் மூன்றாம், நான்காம், ஐந்தாம் தலைமுறையை எட்டியவர்களானாலும் இன்னமும் அவர்களின் பிறப்புப் பத்திரம் 1,016,799 பீரோ தாதா நெகாராவின் பட்டாதாரிகள் சிலரால் சின்ன- சின்ன காரணங்களால் வெறுமனே மறுக்கப்பட்டுவருகின்றன என்று 21-6-09 யூ.எம். புலெட்டின் (UM Buletin) 19ஆம் ஏட்டில் வெளியிடப்பட்டுள்ளது. மத வேறுபாடு காரணத்தினால் இவர்களுக்கு பிறப்புப் பத்திரம் வழங்கவே கூடாது என்று அவர்கள் தீர்மானித்திருப்பதாக நாங்கள் எண்ணுகிறோம். மேலும் விண்ணப்பதாரர்கள் சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தால் அவர்கள் விண்ணப்பம் அறவே ஏற்றுக் கொள்ளப்பட மறுக்கப்படுகிறது.

ஆகவே இதற்கான தீர்வை குறுகிய மற்றும் நீண்ட கால திட்டத்தில் விரைவில் நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.

1) 2007ஆம் ஆண்டிறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை தடை செய்யப்பட்டு 2010க்கான புதியதொரு அறிக்கையில் முக்கியமாக தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கல்வி இலாகாவினர் எந்தவொரு இந்திய மாணவரின் நுழைவையும் தடை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்படவேண்டும்.
2) தேசிய உள்துறை தலைமை செயலாளர் புதியதொரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதில் பிறப்புப் பத்திரம் நிராகரிக்கப்பட்ட அனைத்து இந்திய குழந்தைகளின் நிலையை உடனடியாக ஆராய்ந்து அவர்களுக்கு இன்றிலிருந்து 60 நாட்களுக்குள் பிறப்புப் பத்திரம் கிடைக்கும்படி வழி செய்ய வேண்டும்.

உங்களின் உடனடி பதில் மற்றும் நடவடிக்கையை பெரிதும் மதிக்கிறோம்.

நன்றி,
இப்படிக்கு,

________________
பி. உதயகுமார்
(பொது செயலாளர்)

Read more...

பினாங்கு பிறையில் தேய்பிறையாகும் கம்போங் மானீசு இந்தியர்களின் எதிர்காலம்!

>> Wednesday, December 30, 2009

அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஓரங்கட்டப்பட்ட கம்போங் மானீசு இந்திய கிராமவாசிகளின் சோகக் கதையிது. தகுதியிருந்தும் உதவிகள் கிடைக்காது ஏழ்மையில் வாடும் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக தொக்கி நிற்கிறது. புவா பாலா கிராமத்தைப்போலவே இக்கிராமமும் எதிர்காலத்தில் உடைபடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அரசியல் பலமில்லாத இம்மக்களுக்கு அதிகாரத்துவத்திடமிருந்து உரிய உரிமைகளைப் பெற்றுத் தர முடியுமா?

Read more...

7'ஏ'க்கள் பெற்ற தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு எம்.ஆர்.எசு.எம் அறிவியல் கல்விக்கூடத்தில் இடம் தரவேண்டும்!


டத்தோ நஜிப் ரசாக்

மலேசிய பிரதமர்

Perdana Menteri Malaysia

Blok Utama Bangunan Perdana Putra,

Pusat Pentadbiran Kerajaan Persekutuan,
62502 Putrajaya

E-mail:najib@pmo.gov.my.

டான் ஸ்ரீ முயிடின் யாசின்

மலேசிய துணைப் பிரதமர்

Perdana Menteri Malaysia

Blok Utama Bangunan Perdana Putra,

Pusat Pentadbiran Kerajaan Persekutuan,
62502 Putrajaya E-Mail : najib@pmo.gov.my.



அனைத்து 817 தமிழ்ப்பள்ளி 7 ‘ஏ’ மாணவர்களுக்கும் எம்.ஆர்.எஸ்.எம் அறிவியல் கல்லூரியில் ஒன்றாம் படிவம் (2010) பயில நுழைவு தரப்பட வேண்டும்.

மேலே குறிப்பிட்டது போல, நாடு முழுவதிலும் உள்ள 817 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் சோதனையில் 7 ஏக்கள் பெற்ற சாதனை மலேசிய நண்பன், தமிழ் நேசன் மற்றும் மக்கள் ஓசை போன்ற நாளிதழ்களில் 20/11/09 முதல் சில தினங்களுக்கு தலைப்புச் செய்திகளாக வெளியாகின.

உத்துசான் மலேசியா 29/11/09 பக்கம் 8 மற்றும் நியூ ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் பக்கம் 20 ஆகிய இரண்டு நாளேடுகளில் மாரா கல்லூரிகளுக்கான நுழைவு கடிதங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரையில் 7 ‘ஏ’க்கள் பெற்ற 817 தமிழ்ப்பள்ளி மாணவர்களில் ஒருவருக்குக் கூட மாரா அறிவியல் பயிற்சி கல்லூரியிடமிருந்து நுழைவு கடிதம் கிடைக்கவில்லை என்ற கருத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

அதோடு மட்டுமின்றி மலேசிய கல்வித்திட்டத்தில் ‘ஒரு மலேசியா’ திட்டத்திற்கு ஏற்ப மலாய் இஸ்லாமிய மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போன்று 7 ‘ஏ’க்கள் பெற்ற இந்த 817 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு எவ்வித அங்கீகாரமும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

தேசிய பள்ளி மாணவர்கள் மொத்தம் 5 ஏக்கள் மட்டுமே பெற முடியும். ஆனால் சிறந்த தேர்ச்சியான 7 ‘ஏ’க்கள் பெற்ற தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இந்த 817 மாணவர்கள் தகுந்த வாய்ப்பு அளிக்கப்படாவிட்டால் அவர்கள் எங்குச் செல்வார்கள் மற்றும் தங்களுடைய திறமையையும் அறிவு வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்கும் அத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கும் எவ்வாறு பங்காற்றுவார்கள்?

ஆகவே, 7 ஏக்கள் பெற்ற 817 தமிழ்ப்பள்ளி மாணவர்களும் மற்றும் தேசிய பள்ளியில் 5 ஏக்கள் பெற்ற அனைத்து இந்திய மாணவர்களுக்கும் 21/11/09ஆம் நாளன்று பெரித்தா ஹாரியான் பக்கம் 7இல் வெளியிடப்பட்ட நாடு முழுவதிலுமுள்ள 42 மாரா அறிவியல் கல்லூரியில் இருக்கும் மொத்தம் 12,440 இடங்களில் உள்ள முழு தங்கும் வசதி பெற்ற கல்லூரிகள் மற்றும் என்.எஸ்.டி 5/4/08ஆம் நாள் பக்கம் 7இல் வெளியான படிவம் ஒன்றுக்கான 2010 ஆம் ஆண்டில் தொடங்கவிருக்கும் மாரா கல்லூரியில் இடம் கொடுக்கப்பட வேண்டும். எனவேதான் நம் மலேசிய பிரதமரால் முழங்கப்படும் ஒரு மலேசியா வாசகம் உண்மையானதாக இருக்கும்.

அதோடு மட்டுமின்றி அவர்கள் மாரா அறிவியல் கல்லூரிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர்களுக்கு மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அரசாங்கத்தால் உத்தரவாதம் தரப்பட வேண்டும். இந்திய மாணவர்கள் தலையில் முக்காடு அணிவது (tudung), கட்டாய இஸ்லாம் மத வகுப்புகளுக்குச் செல்லவோ, இஸ்லாம் மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தப்படுவதோ இருத்தல் கூடாது. அரசியல் சாசனப் பிரிவு 11 (மத சுதந்திரம்) மற்றும் 12-இன் படி யாரும் மற்றவர்களை அவர்களின் சொந்த மதம் தவிர்த்து பிற மத நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது.

போலிஸ் அதிகாரிகளின் பிள்ளைகள் படிக்க போலீஸ் (எம்.ஆர்.எஸ்.எம்), இராணுவ வீரரின் பிள்ளைகள் பயில இராணுவ (எம்.ஆர்.எஸ்.எம்), மற்றும் ஃபெல்டா துறையில் உள்ளவர்களின் பிள்ளைகள் படிக்க ஃபெல்டா (எம்.ஆர்.எஸ்.எம்) இருக்கிறது. தமிழ் (எம்.ஆர்.எஸ்.எம்) மாரா அறிவியல் கல்லூரி எழுப்பப்பட்டால் அது இந்த 817 7 ஏக்கள் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் நாடு முழுவதும் உள்ள 523 தமிழ்ப்பள்ளிகளில் உள்ள 110,000 மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். இவ்வாறு செய்வதால் அவர்களும் நாட்டின் மேம்பாட்டிற்கான தங்களின் பங்களிப்பை ஆற்ற உறுதுணையாக அமையும்.

உங்களின் உடனடி பதில் மற்றும் நடவடிக்கையை பெரிதும் மதிக்கிறோம்.

நன்றி,

இப்படிக்கு,

________________

பி. உதயகுமார்

(பொது செயலாளர்)

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP