ஐவரின் விடுதலைக்காக பத்துமலையில் சிறப்புப் பிரார்த்தனை! -பலர் தலைமுடி காணிக்கை

>> Friday, December 21, 2007

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (இசா) கீழ் கைது செய்யப்பட்ட இந்து உரிமைப் பணிப்படை குழுவின் () தலைவர்கள் ஐவர் விரைவில் விடுதலையாக வேண்டும் என்பதற்காக நேற்று பத்துமலையில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. காலையில் பத்துமலை திருத்தலத் தில் கூடியவர்கள் அமைதியான முறையில் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இசா சட்டத்தின் கீழ் பி.உதயகுமார், மனோகரன் மலையாளம், கணபதிராவ், கங்காதரன், வசந்தகுமார் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தைப்பிங், கமுண்டிங் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தக் கோரும் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர்கள் அனைவரும் விடுதலை பெற வேண்டி பத்துமலையில் சிறப்புப் பிரார்த்தனை நேற்று நடத்தப்பட்டது. அதே சமயம் இந்து உரிமைப் பணிப்படை பேரணி தொடர்பில் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளோருக்கு எதிரான வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்படு வதற்கும் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. இசாவின் கீழ் கைதான ஐவர் விரைவில் விடுதலைப் பெறுவதற்கு சிலர் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தினர். சிறுபிள்ளைகளும் முடி இறக்கியதைக் காண முடிந்தது. சிறப்புப் பிரார்த்தனை முடிந்ததும் அதில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்து அமைதியாகக் கலைந்து சென்றனர். இதற்கிடையே இதுபோன்ற சிறப்புப் பிரார்த்தனைகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிகிறது. பத்துமலையில் நேற்று நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் சுமார் 300 பேர் பங்கேற்றனர் என்று கெஅடிலான் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகம் தெரிவித்தார். குமரேசன் என்பவர் இதற்கு ஏற்பாடு செய்திருந்ததாக அவர் கூறினார். சுமார் 16பேர், தங்கள் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தியதாக அவர் குறிப்பிட்டார். இவர்கள் பத்துமலை தைப்பூச விழாவில் முருகப் பெருமானுக்கு தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்த விருந்தவர்கள். ஆனால், இசா கீழ் கைதான ஐவர், விரைந்து விடுதலையாக வேண்டும் என வேண்டி இவர்கள் முன்கூட்டியே தலைமுடியை காணிக்கையைச் செலுத்தியதாக அவர் கூறினார். கெஅடிலான் உதவித்தலைவர் சிவராசாவும் இந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.

மலேசியாக்கினி படக்காட்சி




போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

3 கருத்து ஓலை(கள்):

Anonymous December 21, 2007 at 8:09 PM  

தேர்தல் வரும் சமயம் அரசாங்கத்திற்கு தமிழர் மேல் பாசம் வரும்... அன்மையில் 31 பேர் விடுதலை செய்யப்பட்டனர்... இதற்கு எதற்காக சிலர் அரசாங்கத்திற்கு நன்றி கூறினார்கள்... தவறு செய்யாதவர்களை சிறைபிடித்தற்கு அவர்கள் அல்லவா அந்த 31 பேரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்... என்ன சொல்வது என்று தெரியவில்லை... இதை எல்லாம் நினைத்தால் ஆத்திரம் தான் வருது...

Sathis Kumar December 21, 2007 at 8:35 PM  

உண்மைதான் சகோதரரே, இனி வரும் காலங்களில் மலேசிய இந்தியர்கள் விழிப்புணர்வோடு இருப்பார்கள் என நம்புவோம். அதற்கான நடவடிகைகளிலும் இறங்குவோம்..

Sathis Kumar December 21, 2007 at 8:39 PM  

மொழி.நெட் வலையகத்தை மீண்டும் திறக்க முடிகிறது சகோதரரே, அதோடு இந்து உரிமைப் பணிப்படையின் வலையகம் திறக்க முடியவில்லை பார்த்தீர்களா? அரசாங்கம் இவ்வலையகத்திற்கு மூடுவிழா கொண்டாடிவிட்டது என நினைக்கிறேன்.ஆத்திரமாக இருக்கிறது...!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP