உதயாவின் உடல்நிலை..

>> Thursday, May 21, 2009






கடந்த வாரம் புதன்கிழமை, திரு.உதயகுமார் இரத்த பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு திரு.செயதாசுடன் சென்றிருக்கிறார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள திரு.உதயகுமாரின் இரத்தத்தில் சக்கரை அளவு 10.1-ஆக இருக்கிறது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவு 7.9 ஆகும். கடந்த மூன்று மாதங்களில் திரு.உதயகுமாரின் சக்கரை அளவு சராசரி 8.1. இதன்வழி திரு.உதயகுமாருக்கு கமுந்திங் தடுப்புக் காவலில் முறையான உணவுகளும், மருந்துகளும், சிகிச்சைகளும் வழங்கப்படவில்லை என்பது புலனாகிறது.

உதயாவிற்கு வழங்கப்பட வேண்டிய மருந்துகளில் 30% குறைக்கப்பட்டிருப்பதை அறிந்து, கெம்தா அதிகாரிகளிடம் பலமுறை உதயா முறையிட்டிருந்தும் அவ்வதிகாரிகள் தொடர்ந்து அவரின் உடல்நிலையை மோசமடையச் செய்வதற்கான பல வழிகளைக் கையாண்டிருக்கின்றனர். அதனாலேயே உதயா தன் காலை இழந்துவிடும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டார். உளவியல் ரீதியில் இசா கைதிகளை துன்புறுத்துவதில் பெயர்ப்போன கெம்தா அதிகாரிகள் எவ்வளவு முயன்றும் உதயாவின் திடமான மனோநிலையை அசைக்கமுடியாத காரணத்தால், அவரின் உணவில் அளவுக்கதிகமான சக்கரை சேர்த்தல், மருந்துகளை மாற்றியும் குறைத்தும் கொடுத்தல், முறையான சிகிச்சைக்கு அனுமதி வழங்காதுதல் போன்ற தண்டனைகள வழங்கியிருக்கின்றனர்.

இத்தகைய மனித உரிமை மீறல்கள் அம்னோ அரசாங்கம் நடைமுறைப்படுத்திவரும் கொள்கைகளினால் விளைந்தவையே. அக்கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியதுதான் நம்முடைய அடுத்தக்கட்ட போராட்டமாக இருக்க வேண்டும்!

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP