சிறு குற்றத்திற்கு சமயத்தைக் கேவலப்படுத்துவதா?

>> Thursday, November 22, 2007

நேற்று ஷா ஆலாமில் அமைந்திருக்கும் பேரங்காடியில் 22 வயது இந்திய இளைஞன் கடுமையாக தாக்கப்பட்டதோடு மானபங்கமும் செய்யப்படுள்ளது குறித்து சுமார் 200 இந்தியர்கள் பேரங்காடியின் முன்பு மறியலில் ஈடுபட்டனர். பேரங்காடியில் திருடியதாகக் கூறப்படும் அவ்விளைஞனை அப்பேரங்காடியின் காவலர்கள் இருவர் தலையிலும் உடம்பிலும் பிளாஸ்டிக் நாற்காலி உடையும்வரை பலமுறை கடுமையாகத் தாக்கினர் எனத் தெரியவந்துள்ளது,






அதோடு மட்டுமல்லாமல் அவ்விளைஞனை, ஒரு தாளில் பலவகையான பொருட்களைத் திருடியதாக ஒப்புக்கொண்டு வாக்குமூலம் எழுத கட்டாயப்படுத்தியுள்ளனர். அவ்விளைஞனும் பயத்தால் அவ்வாறே செய்துள்ளார்.
அதன் பிறகு அவ்விளைஞனை 30 ரிங்கிட் செலுத்தவும் சொல்லியிருக்கின்றனர். அதன் பிறகு அந்த காவல்காரர்கள் பேரங்காடியில் சிலப் பொருட்களைக் கொண்டு வந்து அவ்விளைஞனின் கைப்பையில் போட்டுவிட்டு அந்த இளைஞன் அதனைக் கையில் ஏந்தியபடி படம் எடுத்துள்ளனர்.

இந்நிகழ்வுத் தொடர்பாக சசீந்திரன் த/பெ ரவிச்சந்திரன், (வயது 22) காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அப்புகாரில் அவர் கூறியதாவது " Pegawai itu terus memukul saya dan paksa saya untuk duduk dibawah dan seterusnya memadamkan “kum kum “ yang merupakan kesucian agama saya serta mencabut rantai keagamaaan saya daripada saya dan lalu dicampak dalam bilik tersebut.

Selepas itu, pegawai sekuriti itu ambil gambar tuhan Krishna saya yang berada dalam bentuk “pendant “ dan meletakkan semula di atas dahi saya dan beritahu perkara berikut sebelum dia menendang saya dibahagian belakang :-
“ Sekarang kamu nampak macam syaitan "

இதனை அறிந்த அவ்வட்டார மக்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தும் மறியலிலும் ஈடுப்பட்டிருப்பது, சமூகத்தின் மீதும் சமயத்தின் மீதும் அம்மகக்கள் பற்று வைத்திருப்பது புலப்படுகிறது. இதேப் போல் நம்மவர்களுக்கு எங்கு பிரச்சனை என்றாலும் நாம் உடனடியாகச் சென்று உதவி செய்வது அவசியம். இந்நிகழ்வு நமக்கு ஒரு பாடமாக அமையட்டும்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP