இண்ட்ராஃபிற்கு எச்சரிக்கையா?
>> Saturday, October 4, 2008
அம்னோவின் கைப்பாவையான 'உத்துசான்', இண்ட்ராஃப் உறுப்பினர்களின் திறந்த இல்ல உபசரிப்பு வருகையை ஒட்டி தொடர்ந்தாற்போல் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. இசுலாத்தை அவமதித்ததாகவும், நாட்டின் இன நல்லிணக்கத்தைக் கொச்சைப் படுத்தியதாகவும் அநியாயக் குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்து வருவதோடு, 'இனியும் பொறுத்திருப்பது நியாயமல்ல, இவர்களுக்கு பாடம் புகட்டுவோம்..!" என்று மலாய் இனத்தவரிடையே வெறுப்புணர்ச்சியைத் தூண்டியுள்ளது.
'இன, சமயங்களுக்கிடையிலான சகிப்புத்தன்மை பரிசோதனைக்குறிய விடயங்கள் அல்ல' என்றத் தலைப்பில் நாட்டின் உள்துறை அமைச்சர் சாயிட் அமீட் அல்பார், 'இண்ட்ராஃப் உறுப்பினர்கள் அனைவரையும் பயத்திற்குள்ளாக்கி விட்டனர்' என்று அபாண்ட குற்றச்சாட்டை வீசியிருக்கிறார். இயக்கத்தின் சீருடையை அணிந்துக் கொண்டு தங்கள் பலத்தைக் காட்டுவதற்கு வந்திருக்கிறார்கள் என்றும் திறந்த மனதோடு வரவேண்டும் என்றால் சாதாரணக் குடிமகனாக வந்திருக்க வேண்டும் என்று கடிந்ததோடு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் திறந்த மனதோடு புன்னகை ததும்பும் இதழ்களில் உதிர்த்த அரி ராயா வாழ்த்துகளை சாயிட் அமீர் அல்பார் ஏன் குறிப்பிட மறந்துவிட்டார்?
இதற்கிடையில், உத்துசானின் ஆசிரியர்கள் தொடர்ந்து இண்ட்ராஃபிற்கு எதிராகப் பல அவதூறுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர். நேற்று இனவெறியனான பகாரும் மாஉசின் தனது கட்டுரையில் இண்ட்ராஃப் ஆதரவாளர்களை "சேற்றுடன் வந்த எருமை..!" என்று திட்டித் தீர்த்திருந்தான். இன்றோ உத்துசானின் நிருபரான சூல்கிஃப்லி பாகார் இன்றைய தனது கட்டுரையில் "தேன் கூட்டை எட்டிப் பார்க்க வேண்டாம், உறங்கும் புலியை எழுப்ப வேண்டாம். நெருப்புடன் விளையாட எத்தனித்தால் அதன் பலனைச் சந்திக்க தயாராக இருக்கட்டும்..!" என்று சண்டைக்குத் தயாராகுவதுபோல் கருத்துரைத்துள்ளான்.
பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பின்போது இண்ட்ராஃபினர் தகாத முறையில் நடந்துக் கொண்டதாகக் குற்றஞ்சாட்டும் அம்னோவும், உத்துசான் நாளிதழும் இக்குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா?
நிஜத்தில் ஒரு புயலாகினும், தன்னைச் சாந்தப்படுத்திக் கொண்டு தென்றலாய் வந்துபோன இண்ட்ராஃப் ஆதரவாளர்களைப் பயங்கரவாதிகளைப்போல் சித்தரித்து இனப்பூசலுக்கு வித்திட எண்ணுவது மடத்தனமாகும்.




இதோ இந்தப் பெண்மணி ஏந்தியுள்ள அழகியக் கரடி பொம்மையில் என்ன வெடிகுண்டா வைத்திருக்கிறார்?
இவர்கள் முகத்தில் ததும்பும் புன்னகையில் பயங்கரவாதம் ஒளிந்துக் கொண்டிருக்கிறது என்றுக் கூற முடியுமா?

குழந்தைகளைக் கொண்டு வாழ்த்து அட்டையைச் சமர்ப்பித்ததை கோழைத்தனம் என்பதா?



இசாமுடின் இண்ட்ராஃப் ஆதரவாளர்களை இன்முகத்துடன் தானே வரவேற்கிறார், இண்ட்ராஃப்பினர் இங்கு ஏதேனும் அடாவடித் தனம் செய்வதுபோல் தெரியவில்லையே...


அரி ராயா வாழ்த்து அட்டையில் எழுதப்பட்டிருக்கும் கோரிக்கையை பிரதமருக்கு திருமதி சாந்தி வேதமூர்த்தி வாசித்துக் காட்டும்பொழுது, காவல்த்துறை அதிகாரியொருவர் கையைப் பிடித்து இழுப்பதைக் கவனியுங்கள்..
இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் பிரதமரைச் சந்திக்கும் காட்சி.. இங்கு ஏதும் முறைக்கேடு, அசம்பாவிதம் நடைப்பெறுவதாகத் தெரியவில்லை.
பிரதமருக்கு கோரிக்கையை கொடுத்துவிட்ட மகிழ்ச்சியில் திரு.செயதாசு.
பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பின்போது பல ஊடகங்கள் நிகழ்வைப் பதிவுச் செய்து கொண்டிருந்தனவே, அவை பதிவு செய்த காட்சிகளில் இண்ட்ராஃப் உறுப்பினர்கள் முறைக்கேடாகவும் இசுலாத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டக் காட்சிகள் ஏதேனும் இருக்கிறதா? அம்னோவினால் ஆதாரம் காட்ட முடியுமா?
கண்டதையும் உளறிக் கொட்டும் 'உத்துசான்' ஆசிரியர்கள் இண்ட்ராஃப் உறுப்பினர்கள் முறைக்கேடாக நடந்துக் கொண்ட காட்சியை தங்களுடைய இதழில் வெளியிடுவார்களா?
அப்படியொன்று நடந்தால்தானே வெளியிடுவதற்கு..!
தேவை இல்லாமால் நாட்டில் இன,சமயப் பூசல்களை ஏற்படுத்தும் முயற்சியில் 'உத்துசான்' இறங்குவது முறையல்ல. இண்ட்ராஃப் என்றுமே பிறரின் உரிமையைப் பிடுங்கும் இயக்கம் அல்ல, மாறாக தனதுரிமையைத் தட்டிக் கேட்கும் ஓர் உன்னதமான இயக்கம். அதனை யாரும் கொட்சைப்படுத்த வேண்டாம்.
பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வுகளில் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்கள் மென்புத்தக வடிவில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைச் சுட்டி மென்நூலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.
பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வு



4 கருத்து ஓலை(கள்):
வாழ்க தமிழ்! தமிழில் படிப்பது என்பதே ஒரு அலாதியான விஷ்யம்தான்! உங்கள் முயற்சி ஓங்குக!
இப்படிக்கு
அன்புடன்
விஜய்
//நிஜத்தில் ஒரு புயலாகினும், தன்னைச் சாந்தப்படுத்திக் கொண்டு தென்றலாய் வந்துபோன இண்ட்ராஃப் ஆதரவாளர்களைப்//
இண்ட்ராஃப் போராளிகள் உண்மையில் அஹிம்சாவாதிகள் என்று அழகாகவும் தெளிவாகவும் நீங்கள் சொல்லியிருக்கிங்க...
thuya tamilan !!
en valvum en valamum mangatha tamil enru sange mulanggu >..
dont worry friends
வணக்கம் திரு.சதீசு குமார் அவர்களே உங்களின் தொடர் கருத்துக்களுக்கும் ஆலோசனைக்கும் நன்றி இருப்பினும் தவிர்க்க முடியாத சில காரணத்தால் எங்களால் தாங்கள் கூறிய பிழைகளை திருத்தி கொள்ள இயலவில்லை, ஆகையால் தங்கள் கருத்துக்களை நாங்கள் மதிக்கவில்லை என்று எண்ண வேண்டாம். எங்களின் நிலைமை தங்களுக்கு புரியும் என்று பெரிதும் எதிர்ப்பார்கின்றேன். தங்கள் வலைப்பதிவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. எங்களின் வற்றாத ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.. நன்றி.
Post a Comment