இலங்கைத் தமிழர்களுக்காதரவான கண்டனக் கூட்டம் ஒத்திவைப்பு!

>> Friday, October 17, 2008

இன்று சாலான் பாரு முனீசுவரன் ஆலயம்,பிறையில் நடக்கவிருந்த இலங்கைத் தமிழர்களுக்காதரவான கண்டனக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவல்த்துறையினர் இந்நிகழ்விற்கு அனுமதி வழங்காததாலும், இண்ட்ராஃப் இயக்கம் தடைசெய்யப்பட்டதன் விளைவாக சில பொறுப்பற்றத் தரப்பினர்கள் கலகம் ஏற்படுத்த முனையலாம் என்ற அச்சத்தாலும் இந்நிகழ்வு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது என சனநாயக செயல் கட்சியின் சாலான் பாரு கிளைச் செயலாளர் திரு.சத்திசு தெரிவித்தார்.

காவல்த்துறையிடமிருந்து முறையாக அனுமதி பெறப்பட்டு இந்நிகழ்வு நடைப்பெறும் என்றும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்விற்கு பல தன்னார்வ அமைப்புகளும் குறிப்பாக திராவிடக் கழகமும் ஆதரவாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இதுகுறித்த மேலும் தகவல்கள் பின்னர் பதிவிடப்படும்..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP