இலங்கைத் தமிழர்களுக்காதரவாக அமைதி மறியல்..

>> Thursday, October 16, 2008சனநாயக செயல் கட்சியின் ஏற்பாட்டில் நாளை (17 அக்தோபர் 2008) சாலான் பாரு முனீசுவரன் ஆலயத்தின் முன்புறம் இங்கைத் தமிழர்களுக்கெதிராக இலங்கை அரசு புரியும் இனப்படுகொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டி ஒரு கண்டனக் கூட்டம் நடைப்பெறவுள்ளது.

இக்கூட்டத்திற்கு சுற்றுவட்டாரத் தமிழ் மக்கள் அனைவரும் வருகை புரியுமாறு சனநாயக செயல் கட்சியின் சாலான் பாரு கிளைச் செயலாளர் திரு.சத்திசு அழைப்பு விடுக்கிறார்.

இடம் : பிறை,சாலான் பாரு முனீசுவரன் ஆலயம் முன்புறம்

திகதி : 17-10-2008 ( வெள்ளிக்கிழமை )

நேரம் : இரவு 8.00 மணிக்கு மேல்

அன்புடன்,

சத்திசு முனியாண்டி,
செயலாளர்,
சனநாயக செயல் கட்சி
சாலான் பாரு கிளை,பிறை.


எதிர்க்கட்சி என்று அரசியல் முத்திரைக் குத்தி இங்கைத் தமிழர்களுக்காக உரிமைக் குரல் கொடுக்கும் இந்நிகழ்வை புறக்கணித்துவிடாதீர்கள். அனைத்து தரப்பினரும் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி இலங்கைத் தமிழர்களுக்கு நம்முடைய ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழுணர்வோடு நாளை அங்கு சந்திப்போம்...இதற்கிடையில் தமிழக கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பதவி துறப்பு செய்யப்போவதாக மத்திய அரசுக்கு இருவாரங்கள் கெடு விதித்த செயலை ஓலைச்சுவடி ஆதரிக்கிறது. இந்திய அரசாங்கம் சிறீ லங்கா அரசிற்கு அளித்துவரும் ஆயுதங்கள், இராணுவப் பயிற்சி போன்றவற்றை உடனடியாக நிறுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாது, இலங்கைத் தமிழர்களுக்கெதிராக சிறீ லங்கா அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலைகளை உடனடியாக நிறுத்தக் கோரி எச்சரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES) October 17, 2008 at 2:36 AM  

அன்புடைய தமிழ் நெஞ்சங்களே,

இடம் : பிறை,சாலான் பாரு முனீசுவரன் ஆலயம் முன்புறம்
திகதி : 17-10-2008 ( வெள்ளிக்கிழமை )
நேரம் : இரவு 8.00 மணிக்கு மேல்
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவ்வலைப்பதிவில் (மேலே காணப்படுவதைப்போல்) அறிவிக்கப்பட்டிருந்த ஈழத்தமிழருக்கு ஆதரவான போராட்டம்,தவிர்க்க முடியாத சில காரணங்களால் தள்ளிவைக்கப்படுகிறது என்பதை மிக வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று முதல் இந்த்ராஃப் எனப்படும் இந்து உரிமை பணிப்படையை அரசு தடை செய்துள்ளதை நாம் அறிவோம்.ஈழத்தமிழருக்கான ஆதரவு போரட்டத்தை இந்த்ராஃப் ஆதரவு போராட்டம் என்று ஆதரவு கூட்டத்தை சீர்குலைக்க ஒர் சில தரப்பினர் முயற்சிப்பதாக எமக்கு நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த தகவல்களை அடுத்தே,இந்த நிகழ்வு தள்ளி வைக்கப்படுகிறது.

மீண்டும் துரோகம்!!
தமிழனுக்கு எப்பொழுதுமே தமிழன்தான் துரோகம் புரிவான் என்பது மீண்டும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.ஈழ தமிழரின் நலம் காக்க அப்பேற்பட்ட அரசியல் எதிரிகளான தமிழக அரசியல் கட்சிகளே ஒன்றிணைந்து விட்ட போதிலும்,இது வரையிலும் தங்களை மலேசிய தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி என்று பிதற்றிக்கொண்டவர்கள் ஈழ தமிழருக்காதரவான போரட்டத்தைப் பற்றி காவல் துறைக்கு தவறான தகவல்களை தந்து,அவ்வற போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.(சில தமிழின துரோகிகள் தந்த தவறான தகவல்களால்,காவல்துறை என்னை 3 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தியது,விசாரணையின் இறுதியில் ஈழ தமிழர் ஆதரவு போரட்டத்தை வேறோரு நாளுக்கு மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.நிகழ்வை தள்ளி வைப்பதற்கு பயம் காரணமல்ல;கவனம்தான் காரணம்,தேவையில்லாத அசம்பாவிதங்களை தவிர்க்கவே நிகழ்வு தள்ளி வைக்கப்படுகிறது)

தடைகள் தற்காலிகமே;
ஈழத்தமிழருக்கு ஆதரவான கவனயீர்ப்பு கூட்டத்தை எப்படியேனும் நடத்தி விட வேண்டும் என்ற வேட்கை முன்பை விட இப்போதுதான் அதிகமாகியுள்ளது.எதிர்வரும் 24ஆம் தேதி,அதாவது இன்றிலிருந்து ஒரே வாரத்தில்,ஈழத்தமிழருக்கான ஆதரவு கூட்டம் பினாங்கு மாநிலத்தில் மையமிட்டுள்ள பல்வேறு தமிழ் சார்புடைய இயக்கங்களின் ஆதரவோடு மிகப்பெரிய அளவில்,பட்டவொர்த் நகரில் நடத்தப்படுமென்பதை இவ்வறிக்கையின் வழி தெரிவித்துக் கொள்கிறேன்.நிகழ்வின் முழு விவரங்களும்,எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

எமது அறிக்கைக்கு மதிப்பளித்து தத்தம் வலைப்பதிவுகளில் வெளியிட்டிருந்த தமிழ் நெஞ்சங்களுக்கும்,மலேசியா இன்று இணயத்தளத்திற்கும் எமது தாழ்மையான நன்றிகள். அதேவேளையில்,இந்த தள்ளிவைப்பு அறிக்கையையும் தயைக்கூர்ந்து தாங்கள் வெளியிடுவீர்கள் என்று பெரிதும் நம்புகிறோம்.

எதிர்பாராவிதமாக நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டதற்கு பெரிதும் வருந்துகிறோம்.துரோகங்களின் விளைவுதான் இந்த தள்ளி வைப்பு என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.

தங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.

அன்புடன்,

சத்தீஸ் முணியாண்டி,
செயலாளர்,
ஜனநாயக செயல் கட்சி,
ஜாலான் பாரு,பிறை கிளை.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP