இந்துக்களைக் கேலி செய்வதா..?!!!

>> Tuesday, March 4, 2008

இந்துக்களின் பொறுமையை சோதிக்கும் காலமிது...!
நேற்று யூ டியூப் தளத்தில் இந்து சமயத்தைக் கேலி செய்த ஒரு கருத்தரங்குப் படம் வெளிவந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அலோர் ஸ்டாரில் நடைப்பெற்ற இக்கருத்தரங்கில் மலாய்க்காரர்கள் கலந்துக் கொண்டு இந்து சமயத்தை தூற்றும் வகையில் பலக் கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதற்கு கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாத ஒரு சமுதாயத் துரோகி பதிலளித்து இந்து சமயத்தினரிடையே பெரும் கோபத்தை உண்டுசெய்துள்ளான். நீர்மப் படிம உருகாட்டியின் வழி நம் இந்து தெய்வங்களின் படங்களை ஒளிபரப்பி, பிழையான விளக்கங்களையும் கொடுத்துள்ளான். இந்து மதத்தை விட்டு வேற்று மதத்திற்கு தாவிய இந்தக் சமுதாயத் துரோகி, இந்து மதத்தின் கடவுள்களையும், இறைக் கொள்கைகளையும், உருவ வழிபாடு மற்றும் ஆலய அமைப்பு, மற்றும் இக்கொள்கைகளைப் பின்பற்றி வரும் இந்து சமுதாயத்தினரையும் கேலிக் கூத்தாக்கிய விஷயம் தொடர்பாக ஓலைச்சுவடியின் சார்பில் மலேசிய இந்து சங்கம், இந்து மனித உரிமை ஆணையம், அமெரிக்க இந்து அமைப்பு, ஜனநாயக் செயல் கட்சி, மலேசிய நண்பன், மற்றும் மக்கள் ஓசைக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

மலேசிய ருக்குன் நெகாரா கோட்பாட்டின்படி 'இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்' எனும் கருத்துக்கு எதிர்மறையாகவும், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ' ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவரவர் சமயக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதற்கு முழு உரிமை உண்டு" எனும் விதிக்குப் புறம்பாக நடந்துக் கொண்ட ஷா கிரித் என்றழைக்கப்படும் அந்த இந்திய முஸ்லீமானவர் இந்து மக்களிடம், தனது செயலுக்காக வருந்தி பொது மன்னிப்புக் கேட்க வேண்டும். அதோடு அந்தக் கருத்தரங்கில் கலந்துக் கொண்டு இந்து மதத்தைத் தூற்றும் வகையில் கேள்விகள் எழுப்பியவர்களும் இந்து மக்களிடம் பொது மன்னிப்புக் கோர வேண்டும். அதோடு இனி இதுபோன்ற இழிச்செயல்களில் ஈடுபட மாட்டோம் என வாக்குறுதி அளிக்க வேண்டும்.

அதோடு இந்த படத்தொகுப்பை பொது மக்களின் பார்வைக்கு வெளியிட்டு இந்து மதத்தினரை புண்படுத்தியதற்காக, அந்த மர்ம நபர் கண்டுபிடிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், யூ டியூப் தளத்திலிருந்து 11 பகுதிகளைக் கொண்ட படக்காட்சிகள் நீக்கச் சொல்லி அரசாங்கம் உத்தரவிட வேண்டும்.

இவ்வேளையில் இக்கட்டுரையைப் படிக்கும் வாசகர்கள் இச்சம்பவம் குறித்து பல ஊடகங்களுக்கு அறியப்படுத்துங்கள். நாட்டில் வாழும் பல இந்து மக்களிடம் இந்த விஷய்த்தைக் கொண்டு சேர்ப்பியுங்கள். இனியும் வாய் பொத்தி எதையும் காதாரக் கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் நமக்கில்லை. காலங்காலமாகப் பொறுமையாகவே இருந்து வந்த இந்துக்களைக் கண்டதும் இன்று சிலருக்கு வசதியாகிவிட்டது. இந்து மதத்தைத் தூற்றினாலும் கேட்பதற்கு மலேசியாவில் யாரும் இல்லை என்ற நினைப்பு...! ஆலமரத்தின் நிழலில் நின்றுக் கொண்டு அதை வேரோடு பிடுங்க நினைக்கிறார்கள் சில அறிவிலிகள், ஆனால் அம்மரம் சாய்ந்தால் அவர்கள் தலையில்தான் விழும் என்பதை மறந்து விட்டு பேசுகிறார்கள்.

ஆதாரத்திற்காக முடிந்த மட்டும் இந்த படக்காட்சிகள் யூ டியூப்பிலிருந்து நீக்கப்படுவதற்கு முன், அவைகளை பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். இவ்வேளையில் இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என வெளிப்படுத்துவதற்கு இதுவே சரியானத் தருணம். அனைவரும் ஒருமித்தக் கருத்துடன் இந்த பொறுப்பற்றக் கும்பலுக்கு நமது கண்டணக் குரல்களை எழுப்புவோமாக..! தயவு செய்து நம்முடைய ஒற்றுமையை இதில் புலப்படுத்துவோமாக...கொடுக்கப்பட்டுள்ள படக்காட்சியில் மனதை (குறிப்பாக இந்துக்களின் மனதைப்) புண்படுத்தக்கூடிய வார்த்தைகள், செயல்கள் அடங்கியுள்ளதால், வாசகர்களின் கவனம் தேவை.

பகுதி 1


மற்ற 10 படக்காட்சிகளை யூ டியூப்பில் காணலாம்.

இந்து சமயம் வாழ்க...!

போராட்டம் தொடரும்...!

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

Anonymous March 4, 2008 at 10:09 PM  

ivan eanna vaanathil iruntha vanthan avanudaiya amma oru indian thane ivanai ipadiye vidakkudathu ean kayyil (ASID) irunthal avan muhathil uudrividuven.....indiyargal islam mathatai yeanne keliya seigirargal ivargalukku velai vetti illaiya????aamam malaikarargal than somberigalache......

Anonymous March 14, 2008 at 8:55 PM  

kaathal kirukkan poi matha(race) kitukkan vanthu vittaar polum...

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP