அரசியல் பேசாதே..!
>> Sunday, September 28, 2008

நண்பனே
அரசியல் பேசாதே
எதிர்கால வரலாறு
சட்டங்களால் வரையறுக்கப்பட்ட
சக்கைகளாக மட்டும் இருக்கட்டும்!
அரசியல்
நாம் பேச
அனுமதி கொடுக்கப்படாத அரசன்.
நீ அதற்கு
புலனாகாத சாசனம்
எழுதி வைக்கப்பட்ட அடிமை.
அரசியல்
வாழ்வில் ஒளியேற்றும்
அகல்விளக்கன்று.
உன்னை ஒப்பாரி
வைக்கச் செய்யும்
அராஜகச் சாலை.
நண்பா
கொஞ்சம்
உன் காதைக் கொடு.
அரசியல்
பேச வேண்டும்.
நாம் இருவர்
இருக்குமிடத்தில்
எதற்கு இரகசியம்
என்றா கேட்கிறாய்.
காற்றுக்கும் காதுண்டாம்
இதை நாடறிந்தால்
நாளைய காவலில்
நீயும் நானும்
தீவிரவாதி என்ற முத்திரையுடன்.
ஆக்கம் : விக்கினேசுவரன் அடைக்கலம்(ஈப்போ)



2 கருத்து ஓலை(கள்):
நன்றி சத்தீஸ்...
அருமையான படைப்பைக் கொடுத்தனுப்பியதற்கு தங்களுக்கும் நன்றி..
Post a Comment