பிரதமருக்கு வைஷ்ணவி மகஜர்..

>> Tuesday, September 23, 2008

வருகின்ற அரி ராயா பெருநாளன்று கெப்பாலா பாத்தாசில் நடைப்பெறவிருக்கும் பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில் திரு.வேதமூர்த்தியின் மகள் வைஷ்ணவி 10,000 இண்ட்ராஃப் உறுப்பினர்களோடு செல்லவிருக்கிறார்.

நேற்று மதியம் இரண்டு மணியளவில், குழந்தை வைஷ்ணவியும் சில இண்ட்ராஃப் உறுப்பினர்களும் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்று மகஜர் ஒன்றினைச் சமர்ப்பித்துவிட்டு வந்தனர்.

"நாங்கள் அனைவரும் தங்களின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக் கொள்ள வருகிறோம். வாழ்த்துகளைத் தெரிவிக்கும் நோக்கத்தில் வருகை புரியவிருக்கும் எங்களுக்கு எந்த ஒரு தடங்கலும் வராமல் நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்" என அம்மகஜரில் குழந்தை வைஷ்ணவி பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அம்மகஜரைப் பெற்றுக் கொண்ட பிரதமரின் செயலாளர், இண்ட்ராஃப் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக் கொள்ள பிரதமர் நிச்சயம் தடை விதிக்கமாட்டார் என உத்தரவாதம் கொடுத்தார்.

மேலும் தகவல்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைச் சுட்டுக : தீபாராயா - இண்ட்ராஃபின் அடுத்த நிகழ்வுFacebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP