உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சின் சியூ சீன நாளிதழ் நிருபர் கைது..!!!!

>> Friday, September 12, 2008


ராஜா பெட்ராவின் கைதானது தொடர்பாக ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் குறையாத வேளையில், இன்றிரவு 8.30 மணியளவில் தான் ஊன் செங் எனும் சின் சியூ சீன நாளிதழின் நிருபர் புக்கிட் மெருத்தாசாமிலுள்ள அவரது வீட்டில் கைதானார். அவர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.


தற்போது தான் ஊன் செங் பினாங்கு காவல்த்துறை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இக்கைது நடவடிக்கை பிற நிருபர்கள் மீதும் மேற்கொள்ளப்படுமா என்று தெரியவில்லை. இன்று ராஜா பெட்ரா உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படதோடு மட்டுமல்லாமல், நான்யாங், சின் சியூ, த சன் ஆகிய நாளிதழ்கள் இனபூசல்களைத் தூண்டும் வகையில் செய்திகளைப் பிரசுரித்ததற்காக காரணம் கேட்டு விளக்கக் கடிதம் கொடுக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.

தான் ஊன் செங் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்புத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று ஒன்பது வருடங்களாக நிருபராகப் பணியாற்றுகிறார். அண்மையில் புக்கிட் பெண்டேரா தொகுதித் தலைவர் அகமது இசுமாயில் சீனர்களை வந்தேறிகள் என்று கூறி இழிவுபடுத்தியதாக சின் சியூ நாளிதழில் செய்தி பிரசுரமாயிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை தன் தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்காத அகமது இசுமாயிலுக்கு எதிராக இசா சட்டம் பாயுமா?

தற்போது பினாங்கு காவல்த்துறை தலைமையகத்தில் சின் சியூ நிருபருக்கு ஆதரவாக பலர் கூடியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது..

'ஓப்ப்ராசி லாலாங்' பகுதி 2 ஆரம்பமாகிவிட்டதா...???!!!

மேலும் பல தகவல்கள் பின் பதிவிடப்படும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP