10 கோடி வெள்ளி இழப்பீடு கோரி வழக்கறிஞர் திரு.உதயகுமார் வழக்கு

>> Saturday, January 5, 2008செய்தி : மலேசிய நண்பன்

ஹிண்ட்ராப் தலைவர்களை இலங்கையிலுள்ள ஒரு தீவிரவாதக் கும்பலுடன் தொடர்புப்படுத்திப் பேசியதற்காக அரசாங்கம், போலீஸ் படைத் தலைவர், ஐஜிபி மற்றும் அட்டர்னி ஜெனரலுக்குஎதிராக (ஏஜி10) கோடி வெள்ளி இழப்பீடு கோரி வழக்கறிஞர்
பி.உதயகுமார் நேற்று மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார். திரு.உதயகுமார் (வயது 46) இந்த வழக்கை மனோகர் வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலம் சிவில் உயர்நீதிமன்ற அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ மூசா ஹசானை முதல் பிரதிவாதியாகவும் அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேல் மற்றும் அரசாங்கத்தை முறையே இரண்டாவது மூன்றாவது பிரதிவாதிகளாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை ஐஜிபி அல்லது ஏஜி, இவர்களின் அதிகாரிகள் தகவல் சாதனங்களில் மேலும் வெளியிடாமலிருக்க தடையுத்தரவு விதிப்பதோடு நீதிமன்றம் பொருத்தமெனக் கருதும் மற்ற செலவினங்களும் வழங்கப்படவேண்டும் என்பதும்
இழப்பீட்டுக் கோரிக்கைகளில் உள்ளடங்கும்.
தாம் சட்ட ஆலோசகராக இருந்துவரும் ஹிண்ட்ராப் பயங்கரவாதக் கும்பலோடு தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி மூசா தகவல் சாதனங்களுக்கு அறிக்கை
வெளியிட்டிருந்ததாகவும் இந்த அறிக்கை நாட்டின் பிரதான நாளேடுகளில் வெளியாகியிருந்ததாகவும் உதயகுமார் தமது இழப்பீட்டு அறிக்கையில்
கூறுகிறார். இக்குற்றச்சாட்டு தம்முடைய நம்பகத்தன்மைக்கும் நற்பெயருக்கும் பாதிப்புக்களை
ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மை ஒரு பயங்கரவாதியாக மூசா படம் பிடித்துக்காட்டிருப்பதோடு அரசாங்கத்தைக்
கவிழ்க்கத் தாம் வன்முறையைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்ததாக உதயகுமார் மேலும் தெரிவித்தார். தமக்கெதிரான எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் மீட்டுக் கொண்டு தம்மிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று கடந்த ஆண்டு டிசம்பர் 12ல் தாம் எழுதிய கடிதத்துக்கு எல்லாப் பிரதிவாதிகளும் பதிலளிக்காததால் இந்த வழக்கைத் தொடர முடிவெடுத்ததாக உதயகுமார் கூறியிருக்கிறார்.
டிசம்பர் 13ல் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (இசா) உதயகுமார் கைது செய்யப்பட்டார். அவருடன் எம்.மனோகரன் (வயது 46) வி.கணபதிராவ் (வயது 34) கே.வசந்தகுமார் மற்றும் ஆர்.கெங்காதரன் (வயது 40) இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். நவம்பர் 25ல் மாநகர் மையத்தில் சட்டவிரோதப் பேரணியை ஏற்பாடு செய்தனர். தேசநிந்தனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்பது இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாகும்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP