ஈப்போவில் 5 நாட்கள் உண்ணாநோன்புப் போராட்டம்...

>> Friday, January 18, 2008


வருகின்ற 20-ஆம் திகதி முதல் 25-ஆம் திகதி வரை ஈப்போ அருள்மிகு சிறீ சுப்பிரமணியர் ஆலயத்தில் உண்ணாநோன்புப் போராட்டம் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்து உரிமைப் பணிப்படை தலைவர்கள் கைது செய்யப்பட்டு கமுந்திங் தடுப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பதைக் கண்டிக்கும் நோக்கில் 'இ.சா வை அகற்றுக!' எனும் கருப்பொருளைத் தாங்கி இந்த உண்ணாநோன்புப் போராட்டம் நடைப்பெறவுள்ளதாக தெரிய வருகிறது.
இவ்வுண்ணாநோன்புப் போராட்டத்தில் நிறையப் பேர் தங்கள் பெயர்களைப் பதிந்துள்ளதாக இப்போராட்டத்தின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு.வி.சிவகுமார் தெரிவித்தார். இப்போராட்டத்தில் கலந்துக் கொள்ள ஆர்வமுள்ளோர், மற்றும் இந்நிகழ்வு குறித்து மேலும் தகவல்கள் அறிய விரும்புவோர் தயவு செய்து அவரைத் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இவரைத் தொடர்புக் கொள்ள :

திரு.வி.சிவகுமாரின் கைத்தொலைபேசி எண் :
012-5599105

திரு.முத்து அவர்களையும் தொடர்புக் கொள்ளலாம்.

திரு முத்துவின் கைத்தொலைப்பேசி எண் : 016-5060102சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக இவ்வுண்ணாநோன்பு போராட்டத்தில் கலந்துக் கொண்டு இந்து உரிமைப் பணிப்படைக்கும், இசா.வில் கைதான நமது 5 தலைவர்களுக்கும் தங்களுடைய பேராதரவைத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாண்டு தைப்பூச திருவிழா கேலிக் கூத்தாக இல்லாமல் நமக்கு விழிப்புணர்ச்சி ஊட்ட வந்தத் திருவிழாவாக அமையட்டும்... சமய விழாக்களின் தாத்பர்யங்களை அறிந்து முறையாகக் கொண்டாடுவோம், பிறர் மெய்சிலிர்க்க வாழ்ந்து காட்டுவோம்...

தமிழனென்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா...!


போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP