யார் இந்த நடராஜா?

>> Sunday, January 6, 2008


இந்த முகத்தைப் பார்த்து பல நாட்களாகி விட்டன, அதனால்தான் ஞாபகம் இல்லை. யார் இந்த நடராஜா? திடீரென்று இந்து சங்கப் பேரவையின் கீழ் அனைத்து இந்து மத இயக்கங்களும் சேர வேண்டும், இந்து ஆலயங்களைக் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என டமாரம் அடித்துக் கொண்டிருக்கிறார். போதாக்குறைக்கு சில இந்து மத இயக்கங்களைக் கூட்டிக் கொண்டு சிலாங்கூர் மந்திரி புசாரை 'சாமியே சரணம்'என தஞ்சம் புகுந்திருக்கிறார். கேட்டால் இந்து ஆலயப் பிரச்சனையைப் பற்றி சிலாங்கூர் மந்திரி புசாருக்கு எடுத்துக் கூறி, வருங்காலங்களில் ஆலயங்களை உடைப்படுவதிலிருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார்களாம் இந்தப் பேர்வழிகள். இந்தக் கூட்டத்தில் இந்து சங்கம் கலந்துக் கொள்ளாததற்கு நடராஜா மிகவும் வருத்தப்படுகிறாராம். இந்து சங்கத்திற்கும், இந்து சங்கப் பேரவைக்கும் என்னதான் கருத்துக்கள் முரண்பட்டிருப்பினும் இப்படியா மந்திரி புசார் முன்னிலையில் பேசுவது. நடராஜாவிற்கு புத்தி எங்கே போயிற்று?
இப்பொழுது கேள்வி என்னவென்றால், யார் இந்த நடராஜா? அண்மையக் காலமாக இந்து ஆலயங்களுக்கு நல்லது செய்யப்போகிறேன் எனக் கிளம்பியிருக்கிறாரே, இதுநாள் வரையில் எங்கு ஒளிந்து கொண்டிருந்தீர்கள் நடராஜா அவர்களே?

நீரா, இந்து ஆலயங்கள் உடைப்படும் பொழுது கலகத் தடுப்புக் காரர்களையும், காவல் துரையினரையும், மாநகராட்சி ஊழியர்களையும் தடுத்தி நிறுத்தினீர்? அப்போதைய நிலையில் நீரா, அரசாங்கத்திடம் குரல் கொடுத்தீர். யாரோ, நீர்ப் பாய்ச்சி வளர்த்த மரத்தில் இவரல்லவா காய் பறிக்கிறார்..!

இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர்கள் களம் இறங்கி போராடிய விஷயத்திற்கு இவர் மணிமகுடம் தரித்துக் கொள்ளப் பார்க்கிறார். வேண்டாம் இந்த வேலை..! பாராட்டுகள் இந்து உரிமைப் பணிப்படையினரையேச் சார வேண்டும்.. இந்த விஷயத்தில் இந்து சங்கத்தையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும். இந்து ஆலயங்கள் உடைபடுவதிலிருந்து காக்க அது தன்னால் இயன்றவரை பல உதவிகள் புரிந்திருக்கிறது.

ஆனால் இந்த நடராஜாவிற்கு பத்துமலைக் கோயிலின் கதவை இழுத்து மூடத்தான் தெரியும்..!!

மலேசியாக்கினி படச்சுருள்


Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

Anonymous January 7, 2008 at 6:59 PM  

Another case of bad English by a government leader. Can't differentiate between singular and plural. the Malaysia, the Selangor... everythings...and many more. How embarrassing!

Anonymous February 1, 2008 at 8:38 PM  

ivargalai polndravargalai pesa vittu paartu kondirupathum naam thaane?
Innum ippoluthu vhilithu elha pogirom...

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP