அரசாங்கத்திற்கு ஓர் அன்பு மனைவியின் வேண்டுகோள்..

>> Monday, January 28, 2008

கடந்த ஜனவரி 22-ஆம் திகதியன்று இந்து உரிமைப் பணிப்படியின் செயலாளரான திரு.வசந்தகுமாரின் மனைவி மலேசியாக் கினிக்கு கொடுத்த ஒரு பேட்டியில் தன் கணவரையும் மற்ற நான்கு தலைவர்களையும் விரைவில் விடுதலை செய்யுமாறு பிரதமரைக் கேட்டுக் கொண்டார். திரு.வசந்தகுமாரின் குழந்தைகள், அப்பாவின் பாசத்திற்கு ஏங்குகின்றனர் என அவர் கூறும் பொழுது நம்முடைய நெஞ்சமும் நெகிழ்கிறது..சமுதாயம் 5 தலைவர்களின் விடுதலைக்கு காத்திருக்கலாம்,
ஆனால், நல்ல தந்தைகளைப் பிரிந்து குழந்தைகள் நீண்ட நாட்கள் காத்திருக்கக் கூடாது..
நம்மைவிட அதிக வலி நம் ஐந்து தலைவர்களின் குடும்பத்தினருக்குதான்..
அவர்களை நம்முடைய குடும்பம் என நினைத்து அவர்களின் வலியையும் சுமையையும் சுமப்பதற்கு நாம் கடமைப் பட்டுள்ளோம்..

நமக்காக போராடியவர்களின் குடும்பத்திற்கு இந்திய சமுதாயம் காலங்காலமாக கடமைப் பட்டிருக்கிறது... இவர்களைத் தவிர்த்து 25-ஆம் திகதி பேரணியில் கைதான பல இந்திய இளைஞர்களின் குடும்பத்திற்கும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்..
இயன்றவர்கள், இக்குடும்பத்தினருக்கு ஆறுதல் வார்த்தையோ, நிதியோ அல்லது எவ்வழியிலாவது உதவி செய்ய முற்பட்டு நம் இந்தியர்களின் ஒற்றுமை உணர்வை புலப்படுத்துவீர்களாக..

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

இனியவள் புனிதா January 28, 2008 at 5:43 PM  

இவருடைய வேண்டுக்கோளுக்கு நமது பிரதமர் செவிசாய்ப்பாரா?

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நியாயமான இவரின் வேண்டுக்கோளுக்கு
நிச்சயம் நல்ல பதில் கிடைக்க நாமும் பிராத்திப்போம்.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP