மாபெரும் நாட்டை பிரிட்டிஷ் கைப்பற்றியது எப்படி?
>> Monday, January 28, 2008
பிச்சைக்காரர்களே இல்லாத நாடு என வர்ணிக்கப்பட்ட வளம் பொருந்திய பாரத தேசம் பிரிட்டிஷாரின் கைப்பிடியில் விழுந்தது எப்படி? வேரைப் பிடுங்கினால், அது ஆலமரமாயினும் சாய்ந்தே ஆக வேண்டும் அல்லவா? அதுபோன்ற ஒரு யுக்திதான் இந்தியாவை இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிரிட்டிஷாரிடம் அடிமையாக்கியது..
ஒரு நாட்டின், அங்கு வசிக்கும் சமூகத்தின் வளப்பத்திற்கு அடைப்படை வேர்தான் என்ன?
இதோ மெக்காலே, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார்..
ஆண்ட பரம்பரை தன் நாகரீகத்தை மறந்து மாற்றான் நாகரீகத்தை தலையில் தூக்கி ஆட வேண்டும்.. அப்பொழுதுதான் அவன் தனக்குத்தானே குழி தோண்டிக் கொள்கிறான்... சுயமரியாதையை இழக்கிறான்.. இறுதியில் அடிமையும் ஆகிறான்.. சுலபமான வழி அல்லவா இது..
இந்த அவலம் இன்னும் தொடர்கிறதா? ஏன் இல்லை..நம் சமுதாயத்திலேயே தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ள கூச்சப்படுபவர்களை நான் கண்ணாறக் கண்டிருக்கிறேன்.. தமிழனிடம் தமிழில் பேசுவதற்கு நா எழாமல் எதையோ உளரிவிட்டுச் செல்பவர்களையும் நாம் நிறையவே பார்த்திருக்கிறோம்.. வார இறுதிகளில் எத்தனை இந்திய இளைஞர்கள் பெண்கள் உட்பட இரவு விடுதிகளில் பார்க்க முடிகிறது.. சிலருக்கு பணம் கொலுத்துவிட்டால் தலைக்கால் புரியாமல் ஆடுவது ஏன்?
இனியும் இந்த அடிமைத் தனம் நமக்குத் தேவையா? இந்த சமுதாயம் துரைகளுக்கு கைகட்டி வாய்பொத்தி வேலை செய்த காலம் போய் இன்று 'துவான்'களுக்கு கைகட்டி சேவகம் செய்ய வேண்டுமா?
பிறரையே குறைக் கூறியும் புண்ணியம் இல்லை, நம்மிடையே வளர்ந்து நிற்கும் சில களைகளையும் பிடுங்கினால்தான் சமுதாயம் உருப்படும்.. இந்த பதிவை நான் கோபத்தோடும் சிலரின் கண்டுக்கொள்ளாத போக்கை நினைத்து வேதனைப்பட்டும் எழுதுகிறேன்.. நான் மட்டும் இல்லை, இன்னும் எத்தனையோ இளைஞர்களிடம் இந்த ஆத்திரம் இருக்கக்கூடும்.. இந்தியர்கள் மத்தியிலேயே தோன்றியிருக்கும் பல புல்லுருவிகளைக் காணும் பொழுது, இவர்களுக்கும் சேர்த்து நாம் போராட வேண்டியுள்ளதா என நினைப்பதுண்டு.. ஆனால், நல்லவர்கள் சிலரே இருப்பினும் அவர்களுக்காக உழைப்பதில் தவறில்லை என மனதை தேற்றிக் கொள்வேன்..
நீங்களே கூறுங்கள்.. இந்நாட்டிற்கு சுதந்திரத்திற்காக ஒட்டு மொத்த மக்களுமே போராடினார்களா?
ஆங்காங்கே சிலர், பிரிட்டிஷ் படைக்கு அஞ்சி பதுங்கிய வாழ்க்கை வாந்தவர்களும் இருந்திருக்கிறார்கள். இருப்பினும் சுதந்திரம் எனும் வரும்பொழுது, அச்சுதந்திரக்காற்று அனைவரின் மேலும் பட்டதல்லவா? சுதந்திரத்திற்கு போராடாதவன் கூட அக்காற்றை சுவாசித்தானே.. எனவே, இன்று நம்மிடையே எழுந்துள்ள மக்கள் சக்தி எனும் போராட்டம் இந்திய சமூகத்தின் ஒட்டு மொத்த விடுதலைக்கான போராட்டம்... இப்போராட்டமானது இழந்த உரிமைகளை மட்டும் மீட்டெடுக்கும் போராட்டமாக இல்லாமல், நம்மிடையே மெல்ல மெல்ல அழிந்து வரும் கலாசார சீரழிவையும் மீட்டெடுக்கும் ஒரு போராட்டமாக மேற்கொள்வோம்..
நம்மிடையே ஆங்காங்கெ எட்டப்பர்கள் முளைத்தாயினும் நாம் மனம் தளராது நல்லவர்களையும் அவர்கள் கொடுக்கும் ஊக்கத்தையும் கொண்டே இப்போராட்டத்தில் வெற்றிக் கொள்வோம்...
இது உங்கள் சிந்தனைக்கு...
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment