இன்னொரு பேய் வாக்காளரா?

>> Saturday, January 5, 2008


அண்மையில் ஒன்பது வயது சிறுவன் தேர்தல் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.(ஒன்பது வயதுச் சிறுவன் வாகாளர் பட்டியலில் சேர்ந்தது எப்படி? எனும் பகுதியைக் காண்க) தற்போது இன்னொரு சம்பவத்தில் சுபாங் ஜாயாவில் வசிக்கும் ஷர்மிளா துரைச்சிங்கம் என்பவரின் பெயர் அவரை அறியாமலேயே குபாங் கெரியான் பகுதியின் வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷர்மிளா அவர்களின் அடையாள அட்டை எண் : 730117145444

அவருடைய தகவல்கள் இப்படி இடம்பெற்றிருக்கின்றன :
Kad Pengenalan : 730117145444 / A2403417
Nama : SHARMILA THURAISINGAM
Jantina : PEREMPUAN
Lokaliti : 024 / 17 / 01 / 002 - KG WAKAF ZAIN
Daerah Mengundi : 024 / 17 / 01 - WAKAF ZAIN
DUN : 024 / 17 - SALOR
Parlimen : 024 - KUBANG KERIAN
Negeri : KELANTAN
Status Rekod : DATA INI UNTUK SEMAKAN DAFTAR PEMILIH

இது நாள்வரை அவர் பெயரை வாக்காளாராகப் பதிவு செய்வதற்கு அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என ஷர்மிளா தெரிவித்தார்.

தயவு செய்து, உங்களுடைய பெயரை தேர்தல் ஆணையத்தின் அகப்பக்கத்தில் சரி பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் பதிவாளராக பதிவு செய்யாவிடினும், எதற்கும் ஒரு முறை உங்கள் அடையாள் அட்டை எண்களை தட்டி சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் உடனே காவல் நிலையத்தில் புகார் செய்யவும்.

இணையத்தில் உங்கள் தகவல்களைச் சரிபார்ப்பதற்கு இங்கே சுட்டவும் :
http://daftarj. spr.gov.my

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP