மகா தலைவரின் தரிசனம் கிட்டியது...
>> Friday, January 25, 2008
தலைவர் உதயகுமார் தொடர்பான செய்தியைக் கேள்விபட்டதும் தைப்பிங் மருத்துவமனைக்கு விரைந்தேன். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பார்த்த மகா மனிதரை மீண்டும் தரிசிக்க வாய்ப்புக் கிடைத்தது..
தைப்பிங்கில் மாலை வேளையில் மழை பெய்ய ஆரம்பித்து விட்டதால், திட்டமிடப்படி மெழுகுவர்த்தியை ஏந்த முடியாமல் போனது. இருப்பினும் மக்கள் அமைதியான முறையில் தலைவரை சென்று சந்தித்தார்கள். தலைவர் உதயகுமார் C4 எனும் சிகிச்சை அறையில் வைக்கப்பட்டிருந்தார். அவ்வறைக்குள் செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படாததால், அனைவரும் அறையின் வெளியே நின்றுக் கொண்டு கண்ணாடி வழியாக தலைவரை தரிசித்தோம். பலர் வாங்கி வந்த மலர்ச் செண்டுகளை அதிகாரிகள் அறையினுள் கொண்டுச் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே பூச்செண்டுகளை அறையின் வெளியே வைத்துவிட்டார்கள். ஆரம்பத்தில் சிகிச்சை அறையின் வெளியே நின்றுக் கொண்டிருந்த சிறை அதிகாரிகள் எங்களை புகைப்படம் எடுக்கவிடவில்லை. இருப்பினும் நாங்கள் அனைவரும் அவர்களைத் தாஜா செய்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம்.
முகத்தில் தாடியுடனும், கையில் விலங்குடனும், உடல் இளைத்தும் தலைவர் உதயகுமார் காணப்படார். இருப்பினும் அவரைப் பார்க்கச் சென்ற எங்களிடம் புன்னகையுடன் கையசத்து உற்சாக மூட்டினார். இவரைப் பார்த்த பொழுது 'மலேசியா காந்தி' என பெயர் சூட்டலாம் என நினைத்தேன்.. அதற்குக் காரணம் அவரின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, துணிவு, தெளிவு, சத்தியத்திற்காக போராடும் குணம் போன்றவை காந்தியடிகளை நினைவுப்படுத்தின..
இதோ, மகா தலைவர் திரு.உதயகுமாரின் திருவுருவம்...
ஒளிப்படக்காட்சி...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment