விண்வெளி வீரனா? விண்வெளி சமையல்காரனா?
>> Monday, January 28, 2008
மலேசிய முதல் விண்வெளி வீரர் மருத்துவர். ஷேக் முகமட் முஷாபார் சுகோர் விண்வெளிச் சுற்றுலாவை முடித்து பூமிக்கு திரும்பி மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டன.. இன்று வரையில் அவர் அங்கு தே தாரேக் கலக்கியது, ரொட்டி சானாய் போட்டது, பம்பரம் விட்டது, யோயோ விளையாடியது, தண்ணீரையும் எண்ணெயையும் கலந்து விட்டு வேடிக்கைப் பார்த்தது, பெரிய பந்துகளையும் சிறு பந்துகளையும் சுழற்றிவிட்டு குழந்தைகளுக்கு மாயாஜாலம் காட்டியது மட்டும்தான் நமக்கு தெரிந்த விஷயங்கள்.
95 மில்லியன் மக்கள் பணத்தைச் செலவு செய்து 10 நாட்கள் விண்வெளி கூட சமையல் அறையில் சமையல்காரராக இருந்த மருத்துவர் ஏதோ ஆராய்ச்சிகள் செய்தாராம். அதன் முடிவுகள் ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை?
விண்வெளி பயணி எனும் அங்கீகாரத்தை மறைத்து விண்வெளி வீரர் எனும் பட்டத்தைச் சூட்டுவதற்காக, அவசர அவசரமாக உள்நாட்டுப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆராய்ச்சி எனும் பெயரில் சில தளவாடங்களைக் கொடுத்து அனுப்பினார்கள். போன ஆள் திரும்பி வந்து விட்டார், ஆனால் ஆராய்ச்சியின் முடிவுகள் மலேசிய மக்களுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதில் நகைப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், மருத்துவர் ஷேக்கிற்கு கொடுக்கப்பட்ட ஆராய்ச்சிகள் அனைத்தையுமே பூமியிலிருந்தே செய்துவிடலாம்.. இவரின் ஆராய்ச்சிகள் அனைத்துமே புவி ஈர்ப்பு அற்ற சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆராய்ச்சிகள், அப்புவியீர்ப்பு அற்ற சூழ்நிலையை பூமியிலேயே நவீன எந்திரங்களைக் கொண்டு உருவாக்கி விடலாம்.. புரதம் எனப்படும் காற்றழுத்தம் இல்லாத சூழ்நிலையிலும், புவி ஈர்ப்பு அற்ற சூழ்நிலையிலும் எப்படி செயல்படுகிறது என்பதே இவர்கள் ஆராய்ச்சியாம்..
இவ்வளவும் செலவு செய்து ஆடம்பரமாக ஒரு மலேசியரை விண்வெளிக்குக் கொண்டுச் சென்று இறுதியில் என்னவாயிற்று? இன்று யாரும் அதனைப் பற்றி முணுமுணுப்பதே கிடையாது.. ஏன், அரசாங்கமே வாயைத் திறக்கவில்லை...
2010-இல் இன்னொரு சுற்றுப்பயணி விண்வெளிச் செல்லக் காத்துக் கிடக்கிறார். இம்முறை அவரை நிலாவிற்கு அழைத்துச் சென்று தே தாரிக் கலக்கச் சொல்லலாம்.. F&N பால் டின் கலந்து தே தாரேக் அடித்து மற்ற விண்வெளி வீரர்களுக்குக் கொடுக்கட்டும்.. மலேசியாவின் தே தாரிக் சுவையை நிலாவரைப் பரப்ப வேண்டுமல்லவா..(நிலாவிற்கு நீரிழிவு நோய் வராமல் இருந்தால் சரிதான்..) அங்கு பணிபுரியும் அமெரிக்க ரஷ்ய விண்வெளி வீரர்களுக்கு சமையல்காரராக இருக்கட்டும்.. முடிந்தால் அங்கே ஒரு மாமாக் ஸ்டால் திறந்து நிரந்தரமாக அவருக்கு அங்கே வேலைக் கொடுத்துவிடலாம்..
அமெரிக்க விண்வெளி வீரர் : மச்சான், தே தாரிக் காவ் சத்தூ..!!
ரஷ்ய விண்வெளி வீரர் : மச்சான், சாயா புஞா குராங் மனீஸ்..
மலேசிய விண்வெளி வீரர் : ஓகே...பாங்.. லிமா மினிட் சியாப்..
'மலேசியா த்ரூலி யுனிவெர்சியா'...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment