மலேசிய சுகாதார அமைச்சர் பதவி துறந்தார்...

>> Wednesday, January 2, 2008

தனது 30 வயதான நெருங்கிய தோழியுடன் பாலியல் உறவுக் கொண்டதாக 60 வயதான மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோ சிறீ டாக்டர் சுவா சொய் லெக் ஒப்புக் கொண்டார். அண்மையில் மூவார், தங்காக், பத்து பாகாட் போன்ற ஊர்களில் டாக்டர் சுவாவும், அவருடைய நெருங்கிய தோழியும் உடலுறவு வைத்துக் கொண்டக் காட்சி செரிவட்டு மூலம் பரப்பப்பட்டு வந்தது. இவர்கள் ஒரு தங்கும் விடுதியில் சல்லாபமாக இருக்கும் காட்சியை யாரோ ஒரு மர்ம நபர் மறைவான காமிராக்களைப் பொருத்தி, காட்சிகளைப் பதிவு செய்து அதனை செரிவட்டில் விற்பனைக்கு உட்படுத்தியிருக்கிறார்.

இந்த விஷயம் அம்பலத்திற்கு வர, டாக்டர் சுவா நிருபர்களின் ஒரு பேட்டியில் "அது நான் தான்" என வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று அவர் அரசாங்கத்தில் வகித்து வரும் அனைத்து பதவிகளையும் துறப்பதாக அறிவிப்புச் செய்துள்ளார். அதன் படக்காட்சி கீழே :

மலேசியாக்கினி படச்சுருள்
டாக்டர் சுவாவின் உடனுக்குடனான இச்செயல் பாரட்டுக்குறியது. பெயர் கெட்டப் பிறகு இனியும் அரசியலில் எந்த ஒரு பதவியையும் வகிப்பதற்கு அவர் மனம் இடம் கொடுக்கவில்லை என்பது அவர் பேட்டியிலிருந்துத் தெரிகிறது. இருப்பினும் ஒரு சில அரசியல்வாதிகள் வெகுக் காலமாக அரசியல் நாற்காலியைப் பிடித்துக் கொண்டு விடாப்பிடியாக இருக்கிறார்கள், இவர்கள் டாக்டர் சுவாவின் வழியைப் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன். இல்லாவிடில் அவர்கள் பின்னேயும் ஒரு மர்ம நபர் காமிராவுடன் அலைய வேண்டி வரும். செய்யும் தப்புக்கள் அம்பலத்திற்கு வந்து மூக்கு உடைய வேண்டுமா என்ன?

*சற்றுமுன் கிடைத்த தகவல்களின் படி இந்து உரிமைப் பணிபடையின் ஒருங்கிணைப்பாளரான திரு.தனேந்திரன் அவர்கள் பினாங்கு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மேலும் உண்மை நிலவரச் செய்திகள் நாளை...

*கைது செய்யப்பட்ட திரு.தனேந்திரனும் மற்றும் சிலரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இவ்விஷயம் தொடர்பாக இன்னமும் எந்த ஒரு அதிகாரப்பூர்வத் தகவலும் கிடைக்கவில்லை. 03/01/2008

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP