அன்பர்கள் தின ரோஜாக் கூட்டம்..
>> Tuesday, January 8, 2008
வருகின்ற 16-ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தின் முன் இந்து உரிமைப் பணிப்படையினர் 10,000 மஞ்சள், சிவப்பு நிற ரோஜாக்களை பிரதமருக்கு சமர்ப்பிக்கவிருக்கின்றனர். இந்நிகழ்வில் சுமார் 10,000 ஆதரவாளர்கள் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற ரோஜா மாசற்ற நிலையினையும் அமைதியையும் குறிப்பதாகவும், மஞ்சள் நிற ரோஜா உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதான ஐந்து தலைவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனும் அர்த்தங்களைக் கொண்டுள்ளதாகவும் இந்து உரிமைப் பணிப்படையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், 16-ஆம் திகதி சனிக்கிழமை, பிரதமர் வேலைப்பழு காரணமாக நாடாளுமன்றத்திற்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 14-ஆம் திகதி அன்பர்கள் தினமாயினும், சனிக்கிழமை அனைவருக்கும் வசதியான நாளாயிருப்பதால் இக்கூட்டத்தை சனிக்கிழமை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அதோடு, இக்கூட்டத்தை நடத்த இந்து உரிமைப் பணிப்படையினர் போலீசாரிடம் அனுமதி வாங்காததனால், பிரச்சனைகள எழ வாய்ப்புக்கள் உள்ளன. இருப்பினும், இக்கூட்டமானது அமைதிக் கூட்டம் என்பதால் போலீசார் பிரச்சனைக் கொடுக்க மாட்டார்கள் என ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மக்கள் அமைதியான முறையில் தங்களுடைய ஆதகங்களைத் தெரிவிக்க தயாராயிருக்கின்றனர். பிரதமர் தயாரா? மக்களின் பிரச்சனையைக் கேட்பதைவிட அவருக்கு வேறு வேலை பெரிதாக இருக்கக் கூடாது எனக் கருதுவோம். இந்திய மக்களே, மீண்டும் நமது சக்தியையும் ஒற்றுமையையும் புலப்படுத்துவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.. அனைவரும் ஒன்று திரண்டு வருவோம்.. மீண்டும் நாம் காந்தீயவாதிகள் என நிரூபிப்போம்..
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment