பினாங்கில் ஜனநாயக செயல் கட்சியின் கருத்தரங்கம்

>> Sunday, January 27, 2008

நேற்று 26-01-08-ல் பினாங்கு குட்டி இந்தியா அருகே உள்ள சீனர் மண்டபத்தில் ஜனநாயகச் செயல் கட்சி இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்தது. இக்கருத்தரங்கில் உரையாற்றுவதற்காக ஈப்போ பாராட் நாடாளுமன்றப் தொகுதி தலைவர் எம்.பி குலசேகரன், வழக்கறிஞர் சிவநேசன், வழக்கறிஞர் கர்பால் சிங்க், ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் லிம் கிட் சியாங், வழக்கறிஞர் கோபிந் சிங்க், பேராசிரியர் இராமசாமி மற்றும் பலர் வருகை புரிந்திருந்தனர். அரசாங்கம் தொடர்பாகவும், இந்து உரிமைப் பணிப்படைத் தலைவர்கள் தொடர்பாகவும், இந்தியர்கள் இந்நாட்டில் புறக்கணிக்கப்படும் விதத்தைப் பற்றியும் பல சூடான உரைகளை கேட்க முடிந்தது.

இக்கருத்தரங்கில் சுமார் 3000 பினாங்கு இந்தியர்கள் கலந்துக் கொண்டு ஆதரவு அளித்தனர்.

இதோ, அக்கருத்தரங்கின் படக்காட்சிகள் கீழே...



பல பேச்சாளர்கள் இங்கே பேசினாலும், பேராசிரியர் இராமசாமியின் உரை என்னைக் கவர்ந்தது.. அவரின் துணிச்சலான பேச்சும் எனக்கு பிடித்திருந்தது.. அவரின் உரையில் சில பகுதிகள்...

பகுதி 1



பகுதி 2



மக்களிடம் நாம் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றுதான்.. எந்தக் கட்சியை நாம் ஆதரிக்கிறோம் என்பதைவிட நம் சமுதாய உரிமைகளுக்காக நாம் ஒட்டு மொத்தமாக போராடுகிறோமா என்பதுதான் முக்கியம். எந்தக் கட்சி தேர்தலில் வெற்றிப் பெற்றாலும் அக்கட்சி இந்தியர்களின் உரிமைகளை காப்பாற்றியே ஆக வேண்டும். இல்லையேல் இன்னொரு போராட்டத்திற்கு இந்திய சமுதாயம் இனிமேல் தயங்காது...

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES) January 28, 2008 at 4:53 AM  

நண்பரே,
பேராசிரியர் இராமசாமி அவர்களின் உறையைப் பற்றி தாங்கள் கூறியுள்ளிர்கள்.அன்னாரைப் பற்றி மேலும் விளக்கியிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

பேராசிரியர் இராமசாமி அவர்கள் தைரியத்தின் முழு உருவம் என்றால் அது மிகையாகது.முன்னாள் ukm பேராசிரியர் ஆன இவர் மலேசிய அரசாங்கத்தின் இனவெறிக்கு உட்பட்டவர்தான்.இவருடைய மாணக்கர்களே பேராசிரியர் தகுதியை அடைந்து விட்ட பொழுதிலும்,இவரை பதவி உயர்வு வழங்கமால் புறக்கணித்தது இந்த இனவாத அரசு.

தமிழீழ விடுதலை புலிகளின் தென்கிழக்காசிய பிராந்தியத்தின் கொள்கை பரப்பு பிரமுகரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இவர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றை தடுத்து நிறுத்த கொலை வெறி இலங்கை அரசு முயற்ச்சித்த பொழுது,நமது இனவெறி மலேசிய அரசும் அதற்கு ஒத்துதியது.ஆனாலும் அனைத்து தடைகளையும் கடந்து பேராசிரியர் அந்நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்தார்.

இதை நான் ஏன் கூறுகின்றேன் என்றால்,இன்று சுய உரிமையைக் கேட்கக் கூட சிலர்(அரசங்க ஊழியர்கள்) பயந்து நடுங்கும் போது,பேராசிரியர் அவர்கள் ஈழத்தமிழர்களின் உரிமைக்காக தைரியமாக குரல் கொடுத்தவர் என்பதை சுட்டிக்காட்டதான்.

என்னுடைய வலைத்தளத்தில் நான் முதல் பதிவையே பேராசிரியர் அவர்களை குறிப்பிட்டுதான் எழுதியிருக்கிறேன் என்பதை தாங்கள் கவனிக்கலாம்.தற்பொழுது பணி நிமித்தம் நான் சிலாங்கூரில் இருப்பதால் கருத்தரங்கில் கலந்துக் கொள்ள இயலவில்லை,இருந்த போதிலும் தாங்கள் என் குறையை ஏதோ ஓரளவேனும் குறைத்திர்.நன்றி நண்பரே!!!

Sathis Kumar January 28, 2008 at 7:55 AM  

பேராசிரியரைப் பற்றிக் கூற வேண்டுமென்றால் அதற்கு தனி பதிவு ஒன்று இட வேண்டும்.. வருகின்ற பதிவுகளில் அவரைப் பற்றி ஒரு கட்டுரையை பதிவிட்டு உங்கள் வேண்டுகோளை நிவர்த்திக்கிறேன் சகோதரரே..

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP