இது ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா?
>> Friday, January 4, 2008
'GMI' அல்லது 'GERAKAN MANSUHKAN ISA' எனும் இயக்கம் வரும் சனிக்கிழமையன்று உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை அகற்றக் கோரி, மலேசிய அரசாங்கத்தை வற்புறுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி ஒன்று நடத்தத் திட்டமிட்டது. ஏற்கனவே இந்த அமைதிப் பேரணியானது 22 டிசம்பர் 2007-இல் நடைப்பெறுவதாக அறிவிக்கப்பட்டு அதன்பின் போலீசாரின் அனுமதி பெறமுடியாததால் அப்பேரணி தள்ளி வைக்கப்பட்டது. இதுத் தொடர்பாக அண்மையக் காலமாக போலீசாரிடம் அமைதிப் பேரணிக்கு அனுமதி வாங்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் இவர்களின் முயற்சி தோல்வியுற்றது. ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரப் போக்கினைக் கடைப்பிடித்து வரும் மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக இந்த அமைதிப் பேரணி திட்டமிட்டப்படியே வருகின்ற சனிக்கிழமையன்று நடைப்பெறும் என GMI-யின் பிரதிநிதி திரு.அருட்செல்வன் அறிவித்தார்.
இவ்வமைதிப் பேரணித் தொடர்பான செய்திகள் கொண்ட மலேசியாக்கினி படக்காட்சிகள் கீழே :
type="text/javascript">mkinitv_client("GMI_0301.wmv");
நம்மை இன்னும் கோழைகள் என அம்னோ அரசாங்கம் நினைக்கிறது போலும், அதனால் தான் பூச்சாண்டி வேலைகளில் தாராளமாக இறங்குகிறது... கேட்டால் நாட்டின் அமைதியைக் குலைப்பவர்கள் என நம்மீது குற்றச்சாட்டு.. மனித உரிமைக்குரலுக்கு தீவிரவாதப் பட்டமா?
நீங்கள் மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள், அல்லது வெறுங்கையோடு வாருங்கள், அல்லது காந்தி படத்தைத் தொங்கவிடுங்கள்... அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை.. எங்களை பொறுத்த வரையில் எப்பேற்பட்ட பேரணியும் எங்களுக்கு தீவிரவாத நடவடிக்கைதான்.. அதில் கலந்துக் கொள்பவர்கள் தீவிரவாதிகள்.. எனவே அடி, உதை உங்களுக்கு நிச்சயம்.. கலகத் தடுப்புகாரர்களோடு (FRU-வோடு) நாங்கள் ரெடி, நீங்க ரெடியா? எங்களிடம் கண்ணீர் புகைக் குண்டுகள், அமில நீர் உள்ளது.. உங்களிடம் வெறும் கூக்குரல்தான் உள்ளது.. எது பலிக்கிறது என ஒரு கைப் பார்த்துவிடுவோம்.. இதுதான் அம்னோ அரசாங்கத்தின் கடந்த 50 ஆண்டுகால கொள்கை...
இந்நிலமை தொடர வேண்டுமா? பொது மக்கள் மீது தாக்குதல்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் நடத்தப்படுவதை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா? சர்வாதிகாரம் மேலும் வலுப்பதற்கு நீங்கள் ஆதரவு அளிக்கிறீர்களா? மலேசிய சிறுபான்மை சமூகம் மீண்டும் ஒடுக்கப்படுவதைப் இன்னொரு 50 ஆண்டுகள் காலம் பார்த்துக் கொண்டு இருக்கப் போகிறீர்களா? முடிவு உங்கள் கைகளில்...
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment