ம.இ.காவிற்கு பாயா பெசாரில் மூக்குடைப்பு..!
>> Tuesday, January 8, 2008
கடந்த 6-அம் திகதி ம.இ.கா வின் இளைஞர் பிரிவுத் தலைவரான விக்னேஷ்வரன் கூலிம் பாயா பெசாரில் இந்தியர்களுடன் ஒரு சந்திப்புக் கூட்டத்தை பாயா பெசார் பொது மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார். இவர் தற்போது நாடு தழுவிய நிலையில் பல சந்திப்புக் கூட்டங்களை நடத்தி இந்தியர்களின் விஷயத்தில் மா.இ.காவின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறி வருகிறார்.
அதேப்போல் கூலிம் பாயா பெசார் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு 6-ஆம் திகதி பாயா பெசாருக்கு சாமிவேலுவின் புகழ்பாட வந்திருக்கின்றார். அந்தச் சந்திப்புக் கூட்டத்தில் சுமார் 50 பேர் மட்டும் கலந்துக் கொண்டனர். இச்சந்திப்புக் கூட்டம் நடைப்பெறும் வேளையில் ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. மண்டபத்தின் வெளியே சுமார் ஈராயிரம் இந்தியர்கள் பல வகையான வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்திக் கொண்டு ம.இ.காவிற்கு எதிராக போர்க் கொடி தூக்கி நின்றனர். காத்து காத்து பொறுத்திருந்தது போதும், இனியும் உங்களுடைய கபட நாடகம் எங்களிடம் பளிக்காது என அவர்கள் கோஷமிட்டனர். அதோடு அங்குள்ள தமிழ்ப் பள்ளியின் பிரச்சனையைப் பற்றி ம.இ.கா எந்த ஒரு நடவடிக்கையும் இதுநாள் வரையில் எடுக்காதது குறித்து கூடியிருந்தோர் ஆட்சேபித்தனர். அதோடு டத்தோ சிறீ ச.சாமிவேலு பதவி இறங்க வேண்டும், புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் அங்குள்ள மக்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு காவல் துறை மற்றும் கலகத் தடுப்புக் காரர்கள் அழைத்து வரப்படடனர். ஒரு இந்திய இளைஞர் ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவரின் காரை எட்டு உதைத்ததனால் காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர்.
பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ம.இ.கா நாடு தழுவிய நிலையில் இந்திய மக்களின் ஓட்டுக்களைப் பெற வேட்டைகளில் இறங்கி உள்ளது. ஆனால் இந்த முறை இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் ம.இ.கா படு தோல்வி அடைந்துள்ளது எனலாம். எனவெ வருகின்ற தேர்தலில் பாரிசான் நேஷனல் கட்சியின் நிலைத் தடுமாற வாய்பிருக்கிறது. மக்கள் சக்தியின் முன் மற்றதெல்லாம் தூசு என கூலிம் மக்கள் நிரூபித்துள்ளனர். நவம்பர் 25-ற்குப் பிறகு மக்களின் எண்ணங்களில் மாற்றம் வந்துள்ளதைக் கண்கூடாகக் காண்கிறோம்... இது அவர்களின் விழிப்புணர்வைக் காட்டுகின்றது...
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment