சிங்கப்பூர் தமிழனின் 5 நாட்கள் உண்ணாவிரதம்
>> Tuesday, January 1, 2008
நேற்று காலை மணி 9 தொடங்கி சிங்கப்பூர் மலேசியத் தூதரகத்தின் முன் சீலன் பிள்ளை (வயது 23) 5 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளார். இ.சா சட்டத்தில் கைது செய்யப்பட்ட இந்து உரிமைப் பணிபடையின் தலைவர்களான வழக்கறிஞர்கள் திரு.உதயகுமார், திரு.மனோகரன், திரு.கங்காதரன், திரு.கணபதி ராவ் மற்றும் செயலாளர் திரு.வசந்தகுமார் போன்றோரின் மீது முறையான விசாரணை நடத்தக் கோரி இவ்வுண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுவதாக அவர் கூறினார். இப்போராட்டம் 5 நாட்கள் தொடரும் எனவும், தண்ணீர் மட்டுமே உட்கொண்டு இவ்வைந்து நாட்களைக் கடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு நாளுக்கு ஒரு வழக்கறிஞர் வீதம், ஐந்து நாட்களை ஐந்து வழக்கறிஞர்களுக்கும் சமர்ப்பிப்பதாக அவர் கூறினார். மேலும் பல தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள படக்காட்சிகள் விளக்கும்..
நாள் 1
மலேசிய இந்தியர்களின் உரிமைக்கு குரல் கொடுக்க உலகம் முழுவதிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதில் இச்சம்பவம் ஒரு எடுத்துக் காட்டு.. ஓலைச்சுவடியின் சார்பாக அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வைந்து நாட்களையும் திரு.சீலன் பிள்ளை எந்த ஒரு தடங்களும் இன்றி, உடல் நலத்திற்கு கேடு விளையாமல் வெற்றிக்கரமாக இந்த போராட்டத்தை முடித்திட இறைவனை நாம் பிரார்த்தித்துக் கொள்வோமாக...
குறிப்பு : இத்தமிழனின் போராட்டம் தொடர்பான நிலவரத்தை அடுத்தடுத்த கட்டுரைகளில் பிரசுரிக்கிறேன்.
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment