எங்கள் ஒற்றுமையை யாராலும் குலைத்துவிட முடியாது!!!
>> Wednesday, January 16, 2008
14-ஆம் திகதி இந்து உரிமைப் பணிப்படையின் செயலாளரான திரு.வசந்தகுமார் அவர்கள் வழக்கறிஞர் திரு உதயகுமாரின் மீது வழக்கு தொடுத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தியை மக்கள் நம்ப வேண்டாம் என வழக்கறிஞர் திரு சுரேந்திரன் குறிப்பிட்டார். திரு.உதயகுமார், மக்களிடமிருந்து திரட்டிய பணத்தை தவறான முறையில் பயன்படுத்தியதாகக் கூறி திரு.வசந்தகுமார் அவரின் மீது வழக்கு ஒன்று பதிவு செய்ததாக வெளிவந்துள்ள செய்தி வெறும் வதந்தியே அன்றி, அதில் எந்த ஒரு உண்மையும் கிடையாது என திரு.சுரேந்திரன் கூறினார்.
நேற்று கமுந்திங் தடுப்பு முகாமிற்கு வழக்கறிஞர்களான திரு. குலசேகரன் , கர்பால் சிங், சிவநேசன், பொன்முகம், மனோகரன், குமார் மற்றும் ராம் கர்பால் சிங் ஆகியோர் தடுப்பு முகாமிற்கு ஐவரையும் காணச் சென்றிருந்த பொழுது அவர்கள் இந்த வதந்தியை மக்கள் நம்பவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். "எங்களின் ஒற்றுமையை யாராலும் குலைத்துவிட முடியாது!! இந்திய சமுதாயத்திற்காக தொடர்ந்து நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்" என அவர்கள் கூறியதாக திரு சுரேந்திரன் கூறினார்.
* தலைவர்கள் இது குறித்து கவலைப்பட வேண்டாம், காரணம் இது போன்ற வதந்திகளை இனியும் இந்திய சமுதாயம் கேட்டு ஏமாறாது. இந்திய சமுதாயத்தின் ஆதரவு என்றும் உங்களுக்கு உள்ளது.
மற்றுமொரு விவகாரத்தில், கமுந்திங் தடுப்புக் காவலில் உள்ளவர்களை சரியான முறையில் கவனிப்பதில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர்கள் தடுப்புக் காவலில் நிறைய கஷ்டங்களை அனுபவிப்பதாக தெரிவித்தனர்.
அவர்களின் குற்றச்சாட்டு பின்வருமாறு :
1. ஒரு நாளுக்கு 16 மணி நேரம் சிறையில் சாதாரண கைதிகளைப் போல் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
2. இவர்களை அடைத்து வைத்திருக்கும் சிறையின் சாவிகள் தூரமான இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆபத்து அவசர அல்லது தீச்சம்பவம் போன்ற அசம்பாவிதம் எதேனும் நடந்தால் சிறைச் சாவிகளை உடனடியாக எடுத்து வரமுடியாத நிலை அங்குள்ளது.
3. தடுப்பு முகாமில் கணினி, தொலைக்காட்சி, புதிய நாளிதழ்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் நாட்டில் நடக்கும் சம்பவங்களை அறிந்துக் கொள்ள முடியாமல் போகின்றது.
4. மரக்கறி உணவு இல்லாமையால் திரு.கங்காதரன் உனவுக்கு மிகவும் சிரமப்படுகிறார். அவருக்கு சரியான உணவும் கிடைப்பதில்லை.
5. குடும்பத்தினரை சந்திப்பதற்கு கூடுதல் நேரம் கிடைக்கவில்லை. ஒரு நாள் சந்திப்பிற்கு 45 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. அதிலும், குடும்பத்தினரோடு இருக்கும் வேலையில் அருகில் பாதுகாவலர்கள் நிற்கிறார்கள்.
6. எங்களுக்கு வெளியிலிருந்து உணவு தருவிப்பதற்கும், அருகில் உள்ள இந்துக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகள் மேற்கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
*இவர்கள் கொரும் கோரிக்கைகள் மிகையானவை அல்ல. ஒரு மனிதனுக்கு நாம் கொடுக்க வேன்டிய உரிமை, மரியாதை. அதுகூட கிடைக்காமல் தலைவர்கள் அங்கு கஷ்டப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. நமக்காக குரல் கொடுத்த இந்த உள்ளங்கள் அங்கு பரிதவிப்பதை நினைத்து மனம் மிகவும் வேதனைக் கொள்கிறது.
வருகின்ற ஜனவரி 21-ஆம் திகதியிலிருந்து 28-ஆம் திகதி வரை ஐவரும் உண்ணாநோன்பு இருக்கவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இ.சா சட்டத்தில் கைதானவர்களை நடத்தப்படும் விதத்தை கண்டிப்பதற்காக இவ்வுண்ணா நோன்பு மேற்கொள்ளப்படவிருக்கிறது.
இவர்களுக்கு நாம் கைமாறு செய்வதென்றால், இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து மனித உரிமைகளுக்கு தொடர்ந்து போராடுவதுதான் சிறந்தது. போராட்டத்தை கைவிட வேண்டாம்.. நமதுரிமையை என்றும் இழக்க வேன்டாம்.. சுதந்திரத் தீ நமக்குள் தொடர்ந்து எரியட்டும்...
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment