விலைவாசி ஏற்றத்தை எதிர்த்து போராட்டம்... திரு.அருட்செல்வன் உட்பட 58 பேர்கள் கைதாகினர்..
>> Sunday, January 27, 2008
நேற்று 26-01-2008 கோலாலம்பூர் மாநகர் மையப் பகுதியான கோலாலம்பூர் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தின் முன் எதிர்கட்சிகளும் மற்றும் பல தனியார் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து விலைவாசி ஏற்றத்தை எதிர்த்து அமைதிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்..
அமைதிப் போராட்டம் ஆரம்பிக்கவில்லை, ஆனால் காவல் துறையினர் அராஜகமான முறையில் நிருபர்கள் உட்பட பலரைக் கைது செய்தனர். கைதானர்வர்களில் நம் மனித உரிமைப் போராளி, 'Parti Sosialis Malaysia' கட்சியின் பொதுச் செயலாளரான திரு. அருட்செல்வனுமாவார்.
இக்கைது நடவைக்கையானது மதியம் 2.45க்கு தொடங்கி மாலை 4.30க்கு முடிவடைந்தது. கைதானவர்களில் பலர் விசாரணைக்குப்பின் விடுதலை செய்யப்பட்டாலும் திரு. அருட்செல்வனை கோலாலம்பூர் போலீஸ் தலைமை அலுவலகத்தில் தடுத்து வைத்துள்ளனர். அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பபட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் எனத் தெரிய வருகிறது. இவ்வமைதிப் போராட்டத்தைக் கலைப்பதற்கு 1000 காவல் துறையினர்களும் கலகத் தடுப்புக்காரர்களும் அமர்த்தப்பட்டனர்.
இதேப் போன்ற ஒரு அமைதிப் போராட்டம் 2006-ஆம் ஆண்டில் மலேசிய தொழிலாளர் சங்கம் (MTUC) நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்..
நேற்று நடக்கவிருந்த இவ்வமைதிப் பேரணி தொடர்பாக 18 இந்தியர்கள் கைதானது குறிப்பிடத்தக்கதாகும். அவர்களின் பெயர் பின்வருமாறு :
அருட்செல்வன் (PSM பொதுச் செயலாளர்)
தேவராஜன் ( 9.15 இரவுக்கு விடுதலை செய்யப்பட்டார்.)
சரஸ்வதி (PSM துணைத் தலைவர்)
இராணி இராசய்யா ( PSM நிர்வாகக் குழு உறுப்பினர்)
செல்வம் ( PSM நிர்வாகக் குழு உறுப்பினர்)
கணேசன் ( PSM காஜாங் தொகுதித் தலைவர்)
இராமலிங்கம்
கார்த்திக்
காணா
விஜயா
சுகுமாறன்
தினகரன்
நேரு
கோகிலா ஞானசேகரன்
மோகன்
தினமாறன்
கோமதி
சரவணன்
கைதானவர்களின் முழுப் பட்டியலை காவல் துறை பின்னர் வெளியிடும்...
மலேசியாக் கினி படக்காட்சிகள்
மக்களே, இந்த நாட்டில் நாம் எந்த ஒரு ஆட்சேபத்தையும் எவ்வகையிலும் அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்ல முடியாது போலும்.. இதுதான் ஜனநாயகமா? இறுதி வரை அரசாங்கம் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் நாம் அனைவரும் தலை ஆட்டி பொம்மைகளாக இருக்க வேண்டுமா? தலையை ஆட்டாவிட்டால் தலைபோய் விடுமா?
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment