சிறுவர்கள் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கிறார்களா?
>> Wednesday, January 9, 2008
என்னுடைய சென்ற பதிவுகளில் தேர்தல் வாக்காளர் பட்டியலில் நடந்து வரும் முறைக்கேடுகளைப் பற்றி பதிவிட்டிருந்தேன். அதில் ஒரு ஒன்பது வயது சிறுவன் வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருப்பதுக் குறித்து அதிர்ச்சி அடைந்தாலும், தற்போதைய நிலையில் இவற்றின் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்வது குறித்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
இதோ இந்த சிறுவர்களின் அடையாள அட்டை எண்களை தேர்தல் ஆணையத்தின் அகப்பக்கத்தில் தட்டி விவரங்களைப் பாருங்கள்...
IC: 991214740101
IC: 910815750017
ஏற்கனவே நான் ஒரு பதிவில் கொடுத்திருந்த ஒன்பது வயது சிறுவனின் அடையாள அட்டை எண் : IC: 981231081137
http://daftarj.spr.gov.my/
சிறுவர்கள் ஓட்டுப் போட தயாராகி விட்டார்களா ? சிறுவர்களின் அடையாள அட்டையை இப்படித் தவறாகப் பயன்படுத்தும் அறிவிலி யார்? தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும், ஏன் இந்தப் பெயர்கள் இன்னும் நீக்கப்படாமல் இருக்கின்றன..? சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்பதைத் தவறாக அம்னோ அரசாங்கம் கருதிவிட்டது போலும்.. இன்னும் எத்தனைப் பேரோ...?
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment