வழக்கறிஞர் திரு.வேதமூர்த்தி லண்டனில் மலேசிய இந்தியர்களுடன் சந்திப்பு
>> Wednesday, January 2, 2008
கடந்த 30-ஆம் திகதி டிசம்பர் 2007-இல் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவரான வழக்கறிஞர் திரு.உதயமூர்த்தி அவர்கள் லண்டனில் வசிக்கும் மலேசிய இந்தியர்களுடன் சந்திப்பு நடத்தியுள்ளார். இச்சந்திப்பு 'மேனர் பார்க்' லண்டனில் சுமார் 50 மலேசிய இந்தியர்களுடன் நடைப்பெற்றது. இச்சந்திப்பின்போது, இந்து உரிமைப் பணிப்படையின் நோக்கங்கள், மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மலேசிய இந்தியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
இச்சந்திப்புக்கு அடுத்து, லண்டனில் வசிக்கும் மலேசிய இந்தியர்கள் லண்டனில் த்ரஃபல்கார் ஸ்குவேர் எனுமிடத்தில் அமைதிப் போராட்டத்தில் இறங்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வமைதிப் போராட்டம் இந்த வாரத்தில் நடைப்பெறும் என தகவலகள் அறிவிக்கின்றன.
வழக்கறிஞர் திரு.வேதமூர்த்தியின் முயற்சி நல்ல மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்போம்..
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment