பினாங்குத் தைப்பூசம் கலைக்கட்டி விட்டது...
>> Tuesday, January 22, 2008
சற்று முன், நான் தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தையும் அதன் சுற்றுவட்டார இடங்களையும் கண்ணோட்டம் இடும் பொழுது தைப்பூசத்திற்கான ஆயத்த வேலைகளில் அனைவரும் சோர்வறியாது ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு பினாங்கு தைப்பூசத்திற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்த கோடிகளும் சுற்றுப்பயணிகளும் வருகை அளிப்பர் என கருத்துக் கணிப்புகள் தெரிவிப்பதால் மக்களைக் கவரும் வகையில் தண்ணீர் மலை வட்டாரம் கோலாகலக் காட்சி பூண்டிருக்கிறது.
சற்றுமுன் அங்கு நான் எடுத்தப் புகைப்படங்களையும் படக்காட்சியையும் உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.
தண்ணீர்மலை அடிவாரத்திலிருந்து வழிநெடுகச் சென்று இறுதித் தண்ணீர் பந்தல்வரை இக்காட்சியைப் பதிவு செய்தேன். இந்தியர்கள் ஒற்றுமையாகவும் மும்முரமாகவும் தங்களுடைய பந்தல்களை அலங்காரம் செய்யும் காட்சியைக் காணும்போது மிகவும் சந்தோசமாக இருந்தது.
படக்காட்சியில் நீலக் கோடுகள் விழுந்திருக்கின்றன, அதற்கு மன்னிக்கவும்..
தண்ணீர்மலைக்கு வருடாவருடம் தங்களின் வருகைகளைப் பதிவு செய்து கொள்ளும் பிச்சைக்காரர்கள்... இவர்களின் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை...
மேலும் பினாங்கு தைப்பூசம் தொடர்பான செய்திகள் அடுத்த பதிவுகளில்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment