வெளிநாடுகளில் இந்து உரிமைப் பணிப்படையின் நிகழ்வுகள்
>> Tuesday, January 8, 2008
இந்தியர்கள் எங்கு வீழ்ந்தாலும் அவர்களைக் கைதூக்கி எழுப்பிவிட உலகத்தில் நமக்கு நிறைய சகோதரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை அண்மையகாலமாக நடைப்பெற்றுவரும் சில நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. குறிப்பாக, இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக வெளிநாடுகளில் பல சந்திப்புக் கூட்டங்களும், அமைதிப் பேரணிகளும் மற்றும் சிறப்பு வழிபாடுகளும் நடந்த வண்ணம் உள்ளன என பெருமையாகக் கூறலாம்.
அவற்றில் சிலவற்றைக் இங்கு குறிப்பிட்டு சொல்லலாம்...
1. லண்டனில் மலேசிய இந்தியர்கள் வழக்கறிஞர் வேதமூர்த்தியின் தலைமையில் இரு முறை சந்திப்புக் கூட்டங்களை London Colony Village Club, St. Albans எனுமிடத்தில் நடத்தி உள்ளனர்.
2. லண்டனில் உள்ள இருவேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் ஓமங்களும் நடைப்பெற்றன. இவ்வழிபாடுகளில் சுமார் 200 லண்டன்வாழ் மலேசிய இந்தியர்கள் கலந்துக் கொண்டனர்.
3. கடந்த 5-ஆம் திகதியில் 108 சுவர்ண புஷ்ப அர்ச்சனை சென்னையில் சிறீ பக்த ஆஞ்சநேய சுவாமி ஆலயத்தில் நடைப்பெற்றது.
4. கடந்த 6-ஆம் திகதியில் திருப்பதியில் விடியற்காலை 5.30 மணியளவில் அனந்தர தரிசனத்தின் போது இரு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.
5. அதே தினத்தில் திருப்பதி பத்மாவதி ஆலயத்தில் காலை 9 மணியளவில் சிறப்பு குங்கும அர்ச்சனை நடைப்பெற்றது.
இ.சாவில் கைதான ஐவரின் விடுதலைக்காக லண்டனில் நடத்தப்பட்ட சிறப்பு வழிபாடுகள் மற்றும் சந்திப்புக் கூட்டத்தின் படங்கள் கீழே...
லண்டனில் முருகன் ஆலயம் ஈஸ்ட் ஹாம்
ஒற்றுமையே பலம் நமக்கு.. தொடர்ந்து மனித உரிமைக்காக போராடுவோம்..
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment