தண்ணீர் மலையில் பிரார்த்தனை இனிதே நடந்தேறியது
>> Wednesday, January 2, 2008
நேற்றுக் காலை 7 மணி அளவில் இந்தியர்கள் பலப் பேர் தண்ணீர் மலையில் கூடியிருப்பதை காண முடிந்தது. மக்கள் சக்தி ஏற்பாட்டில் பால் குடம் ஏந்துதல், மற்றும் சிறப்பு வழிபாடு போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டன. நம்முடைய 5 வழக்கறிஞர்கள் நல்ல முறையில் விடுவிக்கப்பட வேண்டும் எனும் நோக்கத்தில் இப்பிரார்த்தனை நடைப்பெறுவதாக மக்கள் சக்தி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 7 மணிக்குமேல் பால் குடம் ஏந்துதல் நிகழ்வு நடைப்பெற்றது. பக்தர்கள் தண்ணீர் மலையின் அருகில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்திலிருந்து பால் குடம் ஏந்தி தண்ணீர் மலை படிக்கட்டுகளைக் கடந்து அந்த பால தண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் செய்தார்கள். பலப் பேர் தங்களுடைய முடிகளைக் காணிக்கைச் செலுத்தினர். அதன்பின் 8.30 மணியளவில் சிறப்புப் பூஜைகள் தொடங்கின. பூஜைகள் முடிந்தவுடன் இந்து உரிமைப் பணிப்படையின் ஒருங்கிணைப்பாளர் திரு தனேந்திரன் மற்றும் சிலர் உரைகளை ஆற்றினர். அதன் பின் மதியம் 12 மணியளவில் அன்னதானம் நடைப்பெற்றது. இச்சிறப்புப் பிரார்த்தனையில் சுமார் 5000 பேர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வை ஒரு குட்டித் தைப்பூசம் என வர்ணிக்கலாம். பினாங்கு இந்தியர்களின் விழிப்புணர்விற்கு நம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வோம்...
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment