இந்து உரிமைப் பணிப்படையின் மறைமுகத் தலைவர் டத்தொ சுப்ராவா?
>> Friday, January 4, 2008
மலேசியாவில் நடைப்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பல்வகைப் பிரச்சனைகள் தொடர்பாக தமிழ் நாட்டின் இதழான குமுதத்தின் பத்திரிகையாளரிடம் டத்தோ சிறீ சாமிவேலு கொடுத்தப் பேட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது...
இப்பேட்டியில் வழக்கறிஞர் வேதமூர்த்தியை பெயர் குறிப்பிடாமல் 'பையன்' என அடைமொழியிட்டுக் கூறியிருக்கிறார். திரு.வேதமூர்த்தி பையனா? ஆமாம், அவர் வயதுக்கு எல்லாரும் பையன்களாகத்தான் தெரிய வேண்டும். இதிலிருந்தே அவருக்கு வயது முற்றிவிட்டது எனத் தெரிகிறது, பிறகு ஏன் பதவி நாற்காலியைப் பிடித்துக் கொண்டு இந்திய சமுதாயத்திற்கு பாரமாக இருக்கிறார். டத்தோ சிறீ சாமிவேலு அவருடைய 80 பேர் அடங்கிய கும்பலுடன் இந்தியாவிற்குச் சென்று மலேசியாவின் மீது சுமத்தப் பட்டிருக்கும் கலங்கத்தைத் துடைக்கப் போகிறாராம். முதலில் மைகா ஓல்டிங்சின் விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட மக்களின் கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டு பிறகு இந்தியா சென்றிருக்கலாம். ஆமாம், இவர் எதற்கு இந்தியாவிடம் சென்று கலங்கத்தை துடைக்க வேண்டும், தமிழக முதல்வர் கருணாநிதியைக் கடந்தக் காலங்களில் நினைத்த நேரத்தில் சந்தித்த டத்தோ சிறீ சாமிவேலுவிற்கு, 8 நாட்களாகியும் முதல்வரின் தரிசனம் கிடைக்காது காத்திருக்கிறாராம்.. காத்திருக்கட்டும், இன்னும் எத்தனை நாள் காத்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறதோ காத்திருக்கட்டும்.. இங்கு தலைக்குமேல் வேலை என்றுக் கூறிக் கொள்பவற்கு, அங்கு என்ன அப்படி வெட்டி முறிக்கும் வேலை?? மக்களின் வேதனை அவருக்கு பெரிதாகப் படவில்லை, மாற்றாக அவரின் கட்சிக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் எந்த ஒரு கலங்கமும் வந்துவிடக் கூடாது என்பதே அவரின் முக்கியக் குறிக்கோள்..
இதோ மேலும் தகவல்களை டத்தோ சிறீ சாமிவேலுவின் பேட்டியில் தெரிந்துக் கொள்ளுங்கள். இந்த இணைய இணைப்பை சுட்டுங்கள் :குமுதம் பேட்டி
இதற்கிடையில் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் திரு.வேதமூர்த்தி ஒருப் பேட்டியில் இந்து உரிமைப் பணிப்படை தன் நோக்கத்தில் தோற்றுவிட்டது எனக் கூறியிருப்பதாக ஒரு நாளிதழில் வெளியானது. திரு.வேதமூர்த்தி அவர்களைத் தொடர்புக் கொண்டு கேட்டதற்கு அவர் இதனை மறுத்துள்ளார். தாம் என்றும் இந்திய மக்களுக்காக போராடுவதிலிருந்து விலகப்போவதில்லை எனக் கூறினார். அந்த ஊடகச் செய்தியில் தாம் கூறிய பல முக்கியக் கருத்துகள் இடம்பெறாமல் போனது கண்டிக்கத் தக்கது எனக் கூறினார். ஊடகங்கள் என்றும் மக்களுக்கு உண்மைகளை மட்டுமே எடுத்துக் கூற வேண்டும், சிலரின் சொந்த லாபத்திற்காக ஊடகங்கள் செயல்படக் கூடாது.. அப்படி செயல்படும் ஊடகங்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது.
* திரு வேதமூர்த்தியின் பேட்டியைப் பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை, அதற்குக் காரணம் அப்பேட்டியில் எனக்கு ஏற்பட்ட சந்தேகமே.. அதில் அடங்கியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானதாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. தன்மானத் தமிழனாம் திரு வேதமூர்த்தி எனும் சிங்கம் என்றும் தன் போராட்டத்திலிருந்து பின்வாங்காது என எனக்கு மட்டுமில்லை, மலேசிய இந்தியர்களுக்கே அது தெரிந்த விஷயம், ஆதலால் அந்த பேட்டி எனக்குப் பெரிய பாதிப்பைக் கொடுக்கவில்லை. அதனைப் பிரசுரிக்கவும் தேவை ஏற்படவில்லை.
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment