வேல்! வேல்!..தைப்பூசம் பிறந்தது.. பினாங்கு தண்ணீர்மலையில் நான் கண்ட காட்சிகள்..
>> Wednesday, January 23, 2008
2008-ஆம் ஆண்டின் பினாங்கு தண்ணீர்மலை தைப்பூச நிகழ்வுகளின் ஒளிப்படக்காட்சிகள்...
சீனர்களின் பாணியில் உருவாக்கப்பட்ட ஐயனார் இரதம்
குத்தாட்டம் போடும் இளைஞர்கள்... இளைஞர்கள் நாளைய தலைவர்கள்...!?
குத்தாட்டம் பகுதி 2
குத்தாட்டம் பகுதி 3
தண்ணீர்மலை அடிவாரத்தில் வழி நெடுக நிறையப் பேர்கள் முக்கியமாக வயதானவர்களும் சிறு குழந்தைகளும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த காட்சி மனதிற்கு மிகவும் வேதனை அளித்தது. பல பேர் வந்துச் செல்லும் இடமிது, பிரபலங்கள், சமூகத் தொண்டர்கள், அரசியல்வாதிகள், காவல் துறையினர் என வந்துச் செல்லும் இடமிதுவாக இருந்தாலும், இவர்களைப் பற்றி யாரும் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. வருடாவருடம் இதே கூட்டமானது மலை அடிவாரத்தில் கூடாரமடித்து பிச்சை ஏந்தும் படலம் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றது. கண்டிப்பாக இவர்களில் முக்கால்வாசிப்பேர்கள் நம் நாட்டவர்கள் இல்லை என்பதை அவர்கள் பேசிய மொழிகளிலிருந்தே கண்டுக் கொள்ளலாம். இவர்களில் பெரும்பாலும் உருது, இந்தி போன்ற மொழிகளில் உரையாடுகின்றனர். ஒரு சில தமிழ் நாட்டவர்களும் காவல் துறையினரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மடிப் பிச்சை எனும் போர்வையில் பிச்சை எடுப்பதையும் பார்க்க முடிந்தது.
கண்டிப்பாக இவர்களை அழைத்து வந்து வியாபாரம் புரியும் நடுவர்களைப் பிடித்து தண்டிக்க வேண்டும், குழந்தைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கப்பட வேண்டும்.. அடுத்த வருடமும் இது தொடருமா....?
இவ்வாண்டு பினாங்கு தைப்பூசத்தில் எந்த ஒரு சச்சரவோ, குண்டர் கும்பல்களுக்கிடையே எந்த ஒரு மோதலும் ஏற்படாமல் சுமூகமாக முடிந்தது, இந்த அமைதி என்றும் தொடர வேண்டும்....
அனைவருக்கும் ஓலைச்சுவடியின் சார்பாக இனிய தைப்பூச நல்வாழ்த்துகள்.. !
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment