சீலன் பிள்ளையின் இரண்டாம் நாள் உண்ணாவிரதப் போராட்டம்...
>> Wednesday, January 2, 2008
சீலன் பிள்ளையின் இரண்டாம் நாள் உண்ணாவிரதப் போராட்டம் நல்ல முறையில் நடந்து வருவதாக தெரிய வருகிறது, புத்தாண்டு அன்று 25 மலேசியர்கள் சீலன் பிள்ளைக் கண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது. ஒரு சிலர் கோயில்களில் அவர் பெயரில் அர்ச்சனை செய்து திருநீற்றையும், குங்குமத்தையும் சீலனின் நெற்றியில் இட்டிருக்கிறார்கள். நீங்களும் ஜொகூர் பாரு அல்லது சிங்கப்பூரில் தற்சமயம் இருந்தால் சீலனை பார்த்து வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் தெரிவித்துவிட்டு வாருங்கள். அவரைக் காணச் செல்வதாயிருந்தால் ஒரு மெழுகுவர்த்தியையும் எடுத்துச் செல்லுங்கள். மனித உரிமைக் காக்கப்படவேண்டும் என்பதற்காக அந்த மெழுகுவர்த்திகள் ஏற்றப்படட்டும்.
சீலன் பிள்ளையின் இந்த 5 நாட்கள் போராட்டத்தின் போது இரவு நேரங்களில் மழை ஏதேனும் வராமல் இருக்க வேண்டும் எனவும் வானிலை சுமூகமாக இருக்க வேண்டியும் அந்த இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்வோம்.
ஒரு சில மலேசிய இந்தியர்களே நம்மவர்களைப் பார்த்து " இந்த போராட்டங்களில் எல்லாம் நீங்கள் என்ன சாதித்துவிட்டீர்கள் , எல்லாம் வெட்டி வேலை " என வெட்டியாக அறிவுரைச் சொல்லிச் செல்பவர்கள் உண்டு. அவர்கள் எல்லாரும் சீலன் பிள்ளையைப் பார்த்து தலை குனியட்டும்...
இதற்கிடையில் 31-ஆம் திகதி டிசம்பர் 2007-இல் புது டில்லியில் மனித உரிமை ஆணையத்தின் அங்கத்தினர் மலேசியாவின் மனித உரிமை மீறல்களை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர், அதன் படக்காட்சிகள் கிழே ...
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment