நம் நாட்டுப் பிரதமர் தூங்கு மூஞ்சியா? ஆதாரங்கள் காட்டப்படுகின்றன...
>> Saturday, January 5, 2008
5 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் பொறுப்பை எடுத்து வழிநடத்தும் நம்முடைய பிரதமரின் அழகைப் பாருங்கள்.. 'அங்காதான் மூடா' எனும் இளைஞர் அணி இயக்கம் நம்முடைய பிரதமரின் தூங்கும் அழகைப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றன. அவர் வீட்டில், அவர் நிம்மதியாகப் படுத்து உறங்கி இருந்தால் நமக்கு பிரச்சனை இல்லை, ஆனால் அவர் தூங்கிக் கழித்த இடங்கள் பல முக்கியமான மாநாடுகள், சந்திப்புக் கூட்டங்கள், அரசாங்க நிகழ்வுகள் என பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது.. ( நேற்று நான் ஒரு சீன நண்பருடன் பேசிக் கொண்டிடுக்கும்பொழுது அவரும் இதையேதான் கூறினார்.) எனவே இப்புத்தாண்டின் பரிசாக நாங்கள் பிரதமருக்கு தலையணைகளைப் பரிசளிக்கிறோம் என இளைஞர் அணி இயக்கம் அறிவித்தது. நாங்கள் கொடுக்கும் இந்தத் தலையணைகளை இறுக்க அணைத்துக் கொண்டு நன்றாக உறங்குங்கள் என அவ்வியக்கம் இரு தலையணைகளை எடுத்துக் காட்டியது. பின்பு அத்தலையணைகளை அடுக்கி வைத்து பிரதமரின் படத்தை அத்தலையணைகளின் நடுவே வைத்தது.
நம்முடைய பிரதமரின் இன்னொரு பலவீனம் என எடுத்துக் கொண்டால், நாட்டில் எந்த ஒரு முக்கியப் பிரச்சனைகள் நடந்தாலும் அவ்வேளையில் பிரதமர் மலேசியாவில் இருக்க மாட்டார். நீங்களும் இதனை கவனித்திருப்பீர்கள். எனவே, அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதற்கு துணைப் பிரதமர் டத்தோ சிறீ நஜிப் அங்கே நிற்பார். இளைஞர் அணி இயக்கம் சில உதாரணங்களை எடுத்துக் கூறியது. அவற்றில் சென்ற ஆண்டு ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது, பிரதமர் ஆஸ்திரேலியாவிற்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்தார். பேர்த் நகரத்தில் ஒரு நாசி கண்டார் கடை திறப்பு விழாவிற்கு சென்றிருக்கிறார். வெள்ளமா? அல்லது நாசி கண்டாரா எனக் கேட்டால் நம் பிரதமருக்கு நாசி கண்டார்தான் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாகப் படுகிறது. அதேப்போல்தான், நம் இந்தியர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அமைதிப் பேரணி நடத்திய சமயத்தில் பிரதமர் கம்பாலா, உகாண்டாவில் இருந்தார். அவர் நினைத்திருந்தால் பிரதிநிதியை அல்லது துணைப் பிரதமரை உகாண்டா மாநாட்டிற்கு அனுப்பிவிட்டு, உள்நாட்டு பிரச்சனைகளைக் கவனித்திருக்கலாம். இது பிரதமரின் தைரியமின்மையை எடுத்துக் காட்டுவதாக இளஞர் அணி இயக்கம் தெரிவித்தது.
மலேசியாக்கினி படச்சுருள்
யூ டியூப் படச்சுருள் - ஓர் உதாரணம்
இனிமேல், எந்த ஒரு கூட்டம் நடத்தினாலும், அதுவும் பிரதமரை அழைக்க ஏற்பாடு செய்தீர்களானால், தயவு செய்து உரை அது இது என்று அவரைப் பாடுபடுத்தி விடாதீர்கள், சுருக்கமாக நிகழ்வினை வைத்து முடித்து விடுங்கள், இல்லையேல் அங்கும் நம் பிரதமர்...ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......ZZZzzzzzz....
இந்த பதிவை எழுதி முடிப்பதற்குள் என் கண்களும் சொக்கிவிட்டன... தூக்கமே வந்துவிட்டது...ZZzzzz...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment